இணையம் டூ பிணையம்(!) - யார் தருவார் இந்த அரியாசனம்!

வணக்கம் நண்பர்களே...இனி வாரத்துக்கு மூன்று பதிவுகள் எழுதலாம்னு இருக்கேன்...உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாருங்கள்...

இணையம் பல்லாயிரம் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு புள்ளி...இதில் நல்லவர்...கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒருத்தே இணைக்கிறது...இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு என்பது அவரவர் மனம் சார்ந்த ஒன்றே என்பது எனது கருத்து...

ஒவ்வொரு குடிமகனும் தன்னால் உரக்க கத்தி சொல்ல முடியாத கருத்துக்களை(!) தன் கைப்பட அடித்து பதிவேற்றும் ஒரு பொதுவெளியே இது...இங்கு தான் அரசியலில் ஓட்டு போட்டு ஏமாந்து போய் தன் சுயத்தைக்கூட கேலி செய்யும் பெருமகனார்களை(!) எதிர்த்து பதியும் சிரத்தை இருக்கிறது...!

எங்களிடம் சுதந்திரம் என்பது..எழுத்து...பேச்சு என்றுதான் இருக்கிறதேயொழிய வாழ்க்கை...எங்களின் உழைப்பில் மட்டுமே பொதிந்து இருக்கிறது என்பது பலரும் அறிந்ததே...இதில் நாங்கள் பதிக்கும் விஷயங்கள் எங்களின் கனவுகள் சார்ந்த சமுதாயமாக கூட இருக்கலாம்..

என் நாடு...என் மக்கள்...எம் சமுதாயம் என்றாவது ஒரு நாள் ஏற்றம்(!) பெறாதா...அதை எமது உயிர் இருக்கும் முன் கண்ணாற கண்டு மகிழ மாட்டோமா...என்ற சிறு நம்பிக்கையே எங்களால் இப்படி குமுற முடிகிறது...வேண்டுமெனில் இதை கிண்டல் கேலியாக மட்டுமே பார்க்கிறோம் என்று பலர் சொல்லலாம்...அதனுள்ளும் எங்களின் வலியே இருக்கிறது...

இது பாமரர்களின் வலி நிறைந்த களம்(!)...இதில் கிண்டல்களும்...அவர்தம் வாழ்க்கை சிரத்தைகளும் அடங்கி இருக்கும்...இங்கு தாங்கள் பணம் மிகுந்தவர்கள்...சமுதாயத்தில் அனைவராலும் கவனிக்கப்படுபவர்கள் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் எமது பாமரர்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம்...அது அவர்களுக்கும் பயன் அளிக்காது...அவர்கள் சார்ந்த வகையறாக்களை சேர்த்துக்கொண்டாலாவது அது அவர்களுக்கு பயன் தரும்(!)...


எனவே...நண்பர்களே...நமக்கு இருக்கும் இந்த சிறிய வாழ்க்கையில் யாருக்கும் தேவையில்லாத மனச்சங்கடங்களை அளிக்காமல் சந்தோசத்தையும் அமைதியையும் முடிந்த வரை கொடுப்போம்...நாம் மிகப்பெரிய வேல்கள்(!) அல்லவெனினும்...சிறிய உளிகள் என்பது தான் பலரின் கண்களை விரிய வைக்கிறது...நமது கருத்துக்கள் சுதந்திரமாகவும்...நல்ல சமுதாயத்தை நோக்கிய பார்வையாகவும் இருக்குமாறு பார்த்துகொள்வோம்..

புரியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் விக்கி...

கொசுறு: இயலாமையே பொறாமைக்கு காரணம்!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. .நண்பர்களே...நமக்கு இருக்கும் இந்த சிறிய வாழ்க்கையில் யாருக்கும் தேவையில்லாத மனச்சங்கடங்களை அளிக்காமல் சந்தோசத்தையும் அமைதியையும் முடிந்த வரை கொடுப்போம்

  நிச்சயமான உண்மை நல்ல கருத்துக்கள் அண்ணா. வாரவாரம் இனி ஆரவாரம் தான்.

  ReplyDelete
 2. @நெற்கொழுதாசன்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

  ReplyDelete
 3. இணையத்தில் நண்பர்களையும்,எதிரிகளையும் சம்பாதிப்பது எளிது.

  வருக...வருக...
  உள்குத்து பதிவுகளை அள்ளித்தருக.

  ReplyDelete
 4. அண்ணேன்!
  டயப்பர் யூஸ் பண்ணுறேன்...
  தாங்களும் அருள்கூர்ந்து உபயோகித்து பயனடையவும்...

  நன்னி!

  ReplyDelete
 5. இனி அதிரடி பதிவுகளை எதிர்பார்க்கலாம்?

  ReplyDelete
 6. சிங்கம் சிலிர்த்துடுச்சுல.......

  ReplyDelete
 7. மின்வெட்டு இங்கே பலரை இணையத்தில் இருந்து தற்காலிகமாக பிரித்து விட்டது!
  மீண்டும் எழுதித் தள்ளுங்கள் ..மாம்ஸ்!
  வாழ்த்துகளுடன்!

  ReplyDelete
 8. முதலில் ஒரு பூங்கொத்து! Welcome Back! :-)

  ReplyDelete
 9. நல்லா தெளிவா புரியுதே .........................

  ReplyDelete
 10. தெளிவாகப் புரிந்தது
  என கருத்தும் இதுதான்
  பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து...

  ReplyDelete
 11. அழகான மனதை தொடும் கருத்துக்களுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள் ..வாழ்த்துக்கள்...தொடருங்கள்

  ReplyDelete
 12. நல்லது
  மீண்டும் வாருங்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
 13. வாருங்கள்... காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 14. நல்ல விஷயம்தான். கொஞ்சம் வியட்நாமிலிருந்து மின்சாரத்தையும் சேர்த்தே அனுப்புங்களேன்.:)

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி