படித்த பெண்களே இது சரியா?

வணக்கம் நண்பர்களே...


இந்த பதிவு பாமரனின் பார்வையில் மட்டுமே...இது பெண் கல்விக்கான எதிர்ப்பு அல்ல...நிதர்சனம் மட்டுமே...

அவள் கணவர், மாமியார் சகிதமாக எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தாள்...அவளிடம் என் தாயார் நலம் விசாரித்து கொண்டு இருந்தாள்...

என்னம்மா எப்படி இருக்க...வீட்டுக்காரரும்...உன் அத்தையும் எப்படி உன்ன பாத்துக்கறாங்க...

நல்லா பாத்துக்கறாங்க...நீங்க எப்படி இருக்கீங்க..இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அப்பெண்ணின் கண் கலங்கியது...

என்னடா கண்ணு ஏன் கண்ணு கலங்குற...

மாமா இருந்தாதாவாவது அவரு கிட்ட சொல்லலாம்...இப்ப நான் யாருகிட்ட சொல்லி அழுவேன்...!

சொல்லாத்தா...என்ன பிரச்சினை...

நான் சொல்றேங்க...அவளின் மாமியார் பேசலானாள்...

நாங்க உங்க குடும்ப பெண்ணை கட்டும்போது எந்த வித வரதட்சனையோ சீரோ வாங்கலன்னு உங்களுக்கு தெரியும்ல...

தெரியுங்களே...

ஆனா பாருங்க...பொண்ணு குழந்தை உண்டாயிருக்கான்னு கேள்விப்பட்டதுக்கு அப்புறம்...ஒரு முறை தான் சம்பந்தி(பெண்ணின் தாய் தந்தை!) வந்து பாத்தாங்க...இதுவரைக்கும் 4 மாசத்துக்கு மேலாகுது....15 நாளைக்கு ஒருக்கா...போன் பண்ணி என்னம்மா எப்படி இருக்கன்னு தாய் மட்டும் கேக்குறா...இதுவரைக்கும் ஒரு மாத்திரை மருந்து வாங்கி தரல...செக்கிங்கு கூட்டி போகல...நம்ம வீட்லல்லாம் முத பிரசவம் பெண் வீட்டுக்காரங்கதானே பாக்குறது...அது தானே முறை...கல்யாணம் கூட நாங்களே தானே செலவு செய்தோம்...என்ன செய்ஞ்சாங்க உங்க சொந்தக்காரங்க...5 ஆம் மாசத்துக்கு செய்யனும்னா முடியாதுன்னுட்டாங்க...இதை எங்க போயி கேக்குறது...

இவையெல்லாம் கேட்ட என் தாயிக்கு தர்ம சங்கடமாக போயிற்று...

சரிங்க நான் பேசிப்பாக்குறேன்...

என்னவோ போங்க...எனக்கு ஒரே பையன் அவன் வாழ்க்கைல எந்த வித சண்டையும் போட விரும்பல....அதே நேரத்துல என் வீட்டுக்கு வந்தது என் மருமக இல்ல...என் பொண்ணுன்னுதான் நான் இதுவரைக்கும் நெனைச்சிட்டு இருக்கேன்...பாத்துக்கங்க..ஏன் இப்படி நடந்துக்கறாஙக...பொண்ண பெத்தவங்க.... என்றாள் அந்த மாமியார்...

பிரச்சினை அப்படியே நிறுத்த விரும்பி என் தாய் விட்டு விட்டாள்...எனக்கு ஃப்போன் போட்டு என்னடா இது அவன் இப்படி நடத்துக்கறான்...பொண்ண பெத்து நல்லவிதமா கட்டிக்கொடுத்துட்டு இப்படியா கெட்ட பெயர் வாங்குறது என்றாள்...

நான் கேட்டுப்பார்கிறேன் என்றேன்...

(ப்போனைப்போட்டேன் அந்த பெரிய மனிதருக்கு!)

அலோ மாமாவா...

ஆமாம்யா சொல்லு எப்படி இருக்க....

நான் நல்லா இருக்கேன் என்று ஆரம்பித்து விசயங்களை சொல்லி முடித்தேன்...

அவர் பெருமூச்சு விட்டபடி சொல்லானார்...


ஏம்பா உனக்கே தெரியும் எனக்கு சுய தொழில்னு...இந்த பொண்ண M.com வரைக்கும் படிக்க வச்சதே நுரை தள்ளிடிச்சி...அடுத்த பொண்ணு என்னடான்னா M sc படிச்சி முடிச்சிருக்கு...படிச்சி முடிச்சி இந்த 5 வருசத்துல சம்பாதிச்சத எல்லாம் பேங்குல போட்டு வச்சிகிட்டாளுங்க...ஒரு பைசா எங்கிட்ட கொடுக்கல...கல்யாணம் முடிஞ்ச கையோட என் தொழிலும் நசிஞ்சி போச்சி...இப்ப கடைல வியாபாரமே இல்ல...சாப்பாட்டுக்கும் குடும்ப ஓட்டதுக்குமே எல்லாம் போயிருது...இப்பவும் சின்ன பொண்ணு அது சம்பாதிச்சி பேங்குல போட்டுகுது...கேட்டா நான் தானே சம்பாதிச்சேங்குது...இந்த அழகுல நான் எப்படி ஒவ்வொரு முறையும் செக்கப்புக்கு காரு வச்சி கூட்டி போயி டாக்டரு கிட்ட காட்டி கூட்டி வர்றது...எங்கிட்ட ஏது பணம்...என்னைய எம்புட்டு கேவலமா நினைச்சிகிட்டாலும் பரவாயில்லப்பா...இதான் என் நிலைமை என்றார்...

பேங்குல போட்டு வச்சி இருக்க பணத்த அந்த ஏழை அப்பாவிகிட்ட கொடுத்தாவது உங்க மாமியார் வீட்ல உங்க கெளரவத்த காப்பாத்திகிட்டு இருக்கலாமே....என்னத்த சொல்ல...


பெண்களே கல்வி கொடுக்கும் குடும்பத்தலைவன் எம்புட்டு கஷ்டத்துல உங்கள படிக்க வச்சி இருப்பாரு...கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்க வேணாமா...எரியிற வீட்ல புடுங்குவது எப்படின்னு நினைப்பது தவறல்லவா...உங்களைப்பெற்றவர் தானே இம்புட்டு சிரமப்ப்டுகிறார்....நீங்க சம்பாதிச்சத கொண்டு போயி பேங்குல போட்டு வட்டி வாங்கிக்க தெரிஞ்ச உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...!

இதுக்கு மேல எதாவது கருத்து இருந்தா நீங்க சொல்லிட்டு போங்க...

கொசுறு: ஆணோ பெண்ணோ....பெற்றோர்களின் அழுகையில் குளிர் காயும் கேவலம் ஒழியட்டும்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

22 comments :

 1. சரியா சொல்லி இருக்க மாம்ஸ்...

  ReplyDelete
 2. நல்ல பதிவு தல...
  பெரும்பாலானோர் படித்து முடிந்தவுடன் தங்கள் வேலை தான்பாடு என்று இருந்துவிடுகின்றனர்.

  ReplyDelete
 3. பிள்ளையை பெத்தா கண்ணீருன்னு சொன்னாங்களே அது உண்மைதான் போலிருக்கு. உறவுகளுக்குள் அதுவும் சகொதரன்களுள் இப்படி ஒரு நிலையென்றால் உலகம் எங்கே போகிறது ????????????????எல்லாம் சுயநலம் தானோ

  ReplyDelete
 4. பெண்ணைக் கட்டிக்கொடுத்தால் அவர் தாய் தந்தைதான் முதல் பிரசவசெலவை ஏற்கனும் என்று சொல்பவர்களை முதல் உதைக்கனும்.

  இது என்ன பொருற்களா விற்பனை செய்து இருக்கின்றார்கள். விற்பனையின் பின் சேவை வழங்க

  இந்த முறையை முதல்ல மாத்தனும்

  ReplyDelete
 5. ஆணுக்கும், பெண்ணிற்கும் இந்த நியதியை பொதுவில் வைத்துள்ளது பாராட்டத்தக்கது.

  ReplyDelete
 6. // K.s.s.Rajh said...
  பெண்ணைக் கட்டிக்கொடுத்தால் அவர் தாய் தந்தைதான் முதல் பிரசவசெலவை ஏற்கனும் என்று சொல்பவர்களை முதல் உதைக்கனும்.

  இது என்ன பொருற்களா விற்பனை செய்து இருக்கின்றார்கள். விற்பனையின் பின் சேவை வழங்க//
  சில நியாயங்கள்(!), மாற்றுவது கடினம்!

  ReplyDelete
 7. இதில் சகோதரிகளுக்கான வாஞ்சையே மிஞ்சி நிற்கிறது.

  ReplyDelete
 8. அமெரிக்கர்கள் மாதிரி இந்த பிள்ளைகளும் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர். இதுவும் கலாச்சாரபாதிப்பாகத்தான் நான் பார்க்கிறேன்

  ReplyDelete
 9. // பெற்றோர்களின் அழுகையில் குளிர் காயும் கேவலம் ஒழியட்டும் // நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ..

  ReplyDelete
 10. பெண்கள் மட்டுமில்லை, ஆண் பிள்ளைகளும் இப்படித்தான் ஆகி விட்டனர். வேலைக்கு செல்லதொடங்கிய பின்னர் அவர்கள் சம்பாதிப்பது அவர்களுக்கு மட்டுமே என்ற மனப்பான்மை வளர ஆரம்பித்து விட்டது. இனி வரும் காலங்களில் குடும்பம் என்ற ஒரு அமைப்பே இருக்காது. ஆடு மாடுகள், விலங்குகள் போலவே மனிதர்களும் ஆகி விடுவார்கள்.

  ReplyDelete
 11. மாணிக்கம் அண்ணன் சொன்ன கருத்துதான் என் கருத்தும், சம்பாதிக்க ஆரம்பித்ததும் நான் ஏன் என் பணத்தை உங்களுக்குத் தரனும்னு கேக்குற பிள்ளைகள் அதிகமாக இருக்கிறார்கள்...!

  ReplyDelete
 12. பொருளாதார ஏற்றத்தாழ்வு
  சொத்துரிமை
  நுகர்வு கலாச்சாரம் இருக்கும்வரை
  இப்படிதான் இருக்கும்

  இதை மாற்ற வேண்டுமென்றால் இப்போதைய அமைப்பை மாற்ற வேண்டும்

  அதுசரி
  பூனைக்க யார் மணியை கட்டுவது

  ReplyDelete
 13. சுயநலம் மட்டுமே எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. இதில் ஆண்,பெண் என்ற பேதமில்லை என்பதே காலத்தின் கொடுமை.

  ReplyDelete
 14. வணக்கம் அண்ணே ,,,
  இன்னும் கொடுமையெல்லாம் நான் கேள்வி பட்டிருக்கேன் ,,,
  ஏதோ சிலதுங்க மட்டும் தான் சம்பாதிக்கிறத வீட்ல கொடுக்குதுங்க ..
  பலதுங்க இப்படிதான் பேங்குல போட்டுக்கிட்டு அளப்பறைய கூட்டுதுக, இந்த சிலதுகளையும் அந்த பலதுக கெடுத்துடும் கூடிய சீக்கிரமே .. (படிக்க வைக்கிறது உங்க கடமை என்று வீரவசனம் பேசும்போதுதான் பத்திகிட்டு வருது )

  ReplyDelete
 15. நல்ல பதிவு மாப்ள. வரவர பொண்ணுங்களும் இப்படி மாறிட்டு இருக்காங்க. அம்மாவ வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சமையல், குழந்தைய பாத்துக்கறதுன்னு எல்லா வேலையும் சொல்லி கிட்டத்தட்ட இலவச வேலைக்காரி மாதிரி நடத்த ஆரம்பிச்சிட்டாங்க. மாமியார் கொடுமைகளை விட மகள் கொடுமைகள் அதிகமாகிட்டே வர்ரது கண்கூடா தெரியுது.

  ReplyDelete
 16. முதல் ஐந்து வருடம் பிள்ளைகளை வளர்க்கும் விதம் மாற வேண்டும்...

  ReplyDelete
 17. மகள் அப்பாவிடம் தந்த சம்பள பணத்தை கையில் வாங்காமல் பூஜை ரூமில் வைக்க சொல்லிவிட்டு,ஒரு வாரத்திற்கும் மேல் அங்கு இருந்ததும் நடைமுறையில் உண்டு. இருந்தாலும் தந்தை கஷ்டத்தில் இருக்கும் போது அப்படி என்ன தனிசேமிப்பு தேவை வேண்டி கிடக்கிறது. மகள்களிடத்தும் சுயநலம் அதிகமாகி வருகிறதோ????

  ReplyDelete
 18. இந்த பதிவு பாமரனின் பார்வையில் மட்டுமே...இது பெண் கல்விக்கான எதிர்ப்பு அல்ல...நிதர்சனம் மட்டுமே.../// இந்த வரிகளைத் தவிர்த்திருக்களாம்! ஏனெனில் தாங்கள்
  சொல்வது சரிதான்! பல இடங்களில் நடக்கும் விசயம்தான்!  இன்று இதைப் பார்த்து வருத்தப்படத்தான் முடிகிறது!

  ---
  www.sudarvizhi.com

  ReplyDelete
 19. பல வீடுகளில் நடப்பதை படம் பிடித்து காட்டிய பதிவு! பெண்கள் பெற்றோரையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்!

  ReplyDelete
 20. பிள்ளைகள் எல்லாம் சுய நல வாதிகளாக மாறும் காலம் இது போல் :((
  மிக எதார்த்தமான நல்ல பதிவு... முதலில் தாய் தந்தைதான் அதன் பின் தான் கடவுளே என்றாலும் என்று ஒவ்வொரு பிள்ளையும் நினைக்க வேண்டும்.. இதில் ஆபன் பிள்ளை பெண் பிள்ளை என்ற வித்தியாசமே தேவையில்லை

  ReplyDelete
 21. சம்பள பைசாவை அப்படியே புகுந்த வீட்டில் கொடுத்துட்டு ஓ.டி பார்த்து பெத்தவங்களை கவனிச்சுக்குற பெண்கள் மத்தியில் இப்படியும் சில பெண்கள். இதுகளைலாம் எப்படியோ சிரழியட்டும்னு விடுறதே சரி. தன்மேல் தவறை வெச்சுக்கிட்டு பெத்தவங்களை திட்டுற இதுகள்லாம் பட்டாதான் திருந்தும்ங்க.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி