கள்ளத்துப்பாக்கி(!) - மீ பார்வை....!

வணக்கம் நண்பர்களே...
பந்திக்கு முந்திக்கனும்...இது எப்போதோ சொல்லிவிட்டு போயிட்டாங்க...நாமதான் சுறுசுறுப்பு கலகம்(!) ஆச்சே...எல்லாம் படம் நல்லா இருக்குன்னு சொல்றாய்ங்களே...படம் பாத்துட்டு சொல்லுய்யான்னு நண்பர் ஒருத்தர் சொன்னாருங்கோ...யோவ் நான் இந்த படம் எப்படிய்யா தியேட்டர்ல பாக்குறது..விடுய்யான்னு சொன்னேன்...இந்தா லிங்க் பாருன்னு யூ ட்யூப்ல இருந்து எடுத்து கொடுத்துட்டு பூட்டாரு...

ஊரெல்லாம் நான் யோக்கியன்டான்னு சீன் போட்டாலும்(!)...இப்படி படம் பாக்குறது தப்புன்னு மன்சு அடிச்சிகிச்சிபா...ரைட்டு பாத்துடுவோம்னு பாத்த படம் தான் துப்பாக்கி...

படம் நல்ல பொழுது போக்கா போச்சி...

முதல் பாதியில் கொஞ்சம் தொய்வு....அதை காமடி(!) எனும் விசயத்தால் சமாளிச்சிட்டாங்க(!)...நடிகருக்கு காமடி நல்லா வரும் என்பதால் நல்லா இருந்திச்சி...காஜல்...ஒரே ஜல் ஜல்...!

அதுவும் பெண் பார்க்கும் படலம் நச்...அதைவைத்து தொடராக நீளும் காமடிக்கள் ரசிக்க வைக்கிறது...

இப்பதான் மிலிட்டரி சேர்ந்தவர் போல துடிப்பாக இருக்கும் விஜய்யின் உடல் வாகு நச்...

அதிகப்படியான வசனங்களை கொடுத்து பஞ்சர் பன்னாமல் அசால்ட்டாக செய்ய வைத்து ஜெயித்து இருக்கிறார்....டைரக்டர்

போலீசுக்கும்...மிலிட்டரிக்கும் இடையே என்ன விசயங்கள் வித்தியாசம் என்பதை சொல்லாமல் செய்கைக்களிலேயே செய்து காட்டியது ரசிக்க வைக்கிறது...அதுவும் அதை பத்து பக்க டயலாக்கா பேசிக் கொல்லாமல் துணை(!) மற்றும் காமெடி நடிகரின் உதவியுடன் உணர வைத்தது ரசிக்கவைத்தது...

ஆக்‌ஷன் படத்துக்கான நச் பல இருப்பதால்...படம் மெகா ஹிட் ஆகும்...

இதில் மத துவேஷம் செய்திருப்பதாக பிரச்சாரம் செய்கிறார்கள்...எனக்கு தெரிந்து அப்படி தோன்றவில்லை...தவிர்த்து உண்மை இப்படித்தான் இருக்கிறது என்று பொட்டில் அடித்தால் போல உணர்த்தி இருக்கிறார்கள்...தமிழ்நாட்டில் வாங்க பாய்...உக்காருங்க பாய் என்று பேசிப்பழகி ஒன்றுக்குள் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்...அப்படி இருக்க எங்கிருந்தோ வரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் மும்பையில் என்பது வருந்தத்தக்கது(கவனிக்க மும்பையில்!)...இது நமது நாடு நாம் எல்லோரும் ஒரு இனம் என்று வரவேண்டும் எனில் படத்தை படமாக பார்க்கவேண்டும் என்பதே எமது எண்ணம்...

தீவிரவாதம் - அது காவி பயங்கரவாதமாக இருந்தாலும்...எந்த வகையில் தீவிரவாதமாக வந்தாலும் அதை நாம் ஒன்றாக இருந்து எதிர்ப்பதே நமது ஒற்றுமை...

எங்கயோ போயிட்டேன் பாருங்க...

வில்லன் வெளையாடுறார்...ஸ்பீட்...ஸ்பீட் ஸ்பீட்...இதுதான் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் இடையே ஓடுவது....நமக்கு தெரிவது ஹீரோவின் புத்திசாலித்தனம் கலந்த ஸ்பீட்...நச்...


மிலிட்டரி என்றால் கீ கொடுத்த பொம்மைகள் போல எழு...ஓடு...சுடு என்று இயந்திரத்தனமான மனிதர்கள் என்ற பொது ஜன முகமூடியை கிழித்தற்க்கு எமது நன்றிகள்....ஹேட்ஸ் ஆப் டைரக்டர் திரு முருகதாஸ்...

ப்ளான் செய்து செயல்படப்போகும் மூளைச்சலவை செய்யப்பட்ட எவரும் இப்படி அசால்ட்டாக செயல்பட மாட்டார்கள் என்பது ஒரு சறுக்கல்...

மூளைச்சலவை செய்யப்பட்ட....அதுவும் ட்ரெயினிங் எடுத்தவர்களின்...இயந்திர துப்பாக்கியில் இருந்து வரும் ரவைகள் படாது போனாலும்(!)....அவர்களை கைத்துப்பாக்கியில் சுட்டு கொல்லும் இடம் கொஞ்சம் தயக்கமே...ஏனெனில், மூளைச்சலவை செய்யப்பட்டவர்களிடம் பொதுஜனம் சிக்கிக்கொண்டு இருக்கும் போது எடுக்கப்படும் ரிஸ்க் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பது விதி..(சினிமா என்பதால் இதையெல்லாம் கண்டுப்படாதுன்னு நானே எனக்கு சொல்லிக்கிறேன்பா...!)

நிற்க...படத்தை படமாக பார்க்கும் ஒருவனாக(பாமரனாக!) சொல்லவேண்டும் என்றால்...படம் நச்!...


பாடல்களில் கூகுள் பாடல் என்னைக்கவர்ந்தது...நல்ல ஒரு விறுவிறுப்புடன் கூடிய ஆக்‌ஷன் படத்தை அளித்த திரு விஜய்& திரு முருகதாஸ் மற்றும் பணியாற்றிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எம்து வாழ்த்துக்கள்..

படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரைக்கும் எங்கெங்கு காணினும் ஹீரோவே கண்ணுக்கு தெரிகிறார்...நல்லாத்தேன் இருக்கு...ஹீரோயின் அப்பாவை கை ஓங்கி அடிக்கும் தில்லான(!),.. கொஞ்சம் மறைகழண்டது போல வருவது இப்பல்லாம் ஃபேசன் போல...

கொசுறு: விடுமுறைக்கு வந்து இருந்ததால்(!)...தனக்கு பிடித்த குறுந்தாடியை(!) அவர் வைத்துக்கொண்டார் என்று சொல்ல கேட்டு ரசித்தேன்..!..இந்த படம் மூலம் உடைஞ்ச கைய முறுக்கியே சரி செய்து கொள்ளும் வைத்தியம் ஒன்று கற்றுக்கொண்டேன் நன்றி!

இன்னும் கொஞ்சம்: நான் யூடிபில் பார்த்ததால் தான் அந்த தலைப்பு அவ்வ்...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

12 comments :

 1. லிங்க் போடலை?நாங்களும் 'கள்ள துப்பாக்கி'பாக்க வேண்டாமா?

  ReplyDelete
 2. எங்கிருந்தோ வரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் மும்பையில் என்பது வருந்தத்தக்கது(கவனிக்க மும்பையில்!)//

  கேரளாவும் விதிவிலக்கு அல்ல...!

  ReplyDelete
 3. நான் இன்னும் படம் பார்கலை அண்ணே, கொஞ்சூண்டு பார்த்தேன், தோழி ஒருவர் அனுப்பிய லிங்கில்....!

  ReplyDelete
 4. உன் பார்வை விமர்சனத்தை சொல்லிட்டே, பொறு நான் தியேட்டருல போயி பார்த்துட்டு விமர்சனம் எழுதுறேன் ஓகே.

  ReplyDelete
 5. உடைந்த கையை முறுக்கியே சரிசெய்யும் வித்தையை டாகுத்தர் கில்லி படத்திலேயே செய்துவிட்டார் மாம்ஸ்

  ReplyDelete
 6. படம் பரவாயில்லைதான் பார்கலாம்

  ReplyDelete
 7. ராணுவத்தினரின் தியாகத்தை இந்தப் படம் சொன்ன விதம் அருமை. பிரச்சாரப் பாணியில் இல்லாமல் யதார்த்தமாக சொல்லியிருந்தார்கள்.

  விக்கிக்கு இந்தப் படம் பிடிக்கும்னு எங்களுக்குத் தெரியுமே!

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete

 9. மாம்ஸ், காதல், காமடி தூக்கி விட்டால் - கதையை மற்றும் பார்த்தால் ஹாலிவுட் படம் தான்

  ReplyDelete
 10. செங்கோவி said...
  ராணுவத்தினரின் தியாகத்தை இந்தப் படம் சொன்ன விதம் அருமை. பிரச்சாரப் பாணியில் இல்லாமல் யதார்த்தமாக சொல்லியிருந்தார்கள்.

  விக்கிக்கு இந்தப் படம் பிடிக்கும்னு எங்களுக்குத் தெரியுமே!//

  ஹா ஹா ஹா ஹா ஹா மாட்னான் பக்கி....

  ReplyDelete
 11. செம ஹிட்... (ஆனது... ஆக்கப்பட்டது...)

  சுவையான விமர்சனத்திற்கு நன்றி....

  ReplyDelete
 12. கலக்கலா விமர்சனம் செய்துருகீங்க மாம்ஸ்...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி