முதல் குழந்தை - திருத்திப்போமா!

வணக்கம் நண்பர்களே...இந்தப்பதிவு நம்மிடையே இருக்கும் சிலரின்(!) தவறான அனுகுமுறையை விமர்சிக்கவே...”மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது”

கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தேன்...அக் குழந்தையின் தந்தை எனக்கு நண்பர்...விழாவில் எனக்கு சில மன வருத்தங்கள்...

அந்த குழந்தைக்கு 4 வயது...அடிக்கடி ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது...அந்தக்குழந்தையை தொடர்ந்து கொண்டே இருந்தாள் தாய்....மற்றொரு புறம் மூத்த குழந்தை...அதாவது அவர்களின் முதல் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தான்...அக்குழந்தையின் செயல் பாடுகளை தாயும் தந்தையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை...

அக்குழந்தை மற்ற குழந்தைகள் போல் அல்லாமல் கொஞ்சம் மூர்க்கமாக இருந்தது...கையில் கிடைத்ததை வைத்து அடுத்தவரை அடிப்பது...சக நண்பர்களுடன் இயல்பாக பழகாதது என்று பல விசயங்களை கண்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது...அந்நேரங்களில் தாயும் தந்தையும்...”வீட்டுக்கு வா” உன்னை என்ன பண்றேன் பாரு என்று கடிந்து கொண்டனர்...

நான் அவனிடம்....பாருப்பா..என்ன ஆச்சி உனக்கு...பாத்தியா அப்பாவை கஷ்டப்படுத்தலாமா என்றேன்...

என்ன அங்கிள்...வீட்டுக்கு போனா முட்டி போட சொல்லுவாரு...அடிப்பாரு...அடிச்சிக்கட்டும் என்று இயல்பாய் சொன்னான்..எனக்கு அப்படியே என்னை பார்த்தது போலவே இருந்தது...!

அந்த இரண்டாவது குழந்தையின் பிறந்த நாள் விழாவை விமரிசையாக கொண்டாடிய அவர்களுக்கு...முதல் குழந்தை பற்றி கேட்ட போது...அவன் பெரிய பையனாகிட்டாங்க(6 வயது!)...இனிமே என்ன வேண்டிக்கெடக்கு என்று சொன்னார்களாம்...

வீட்டில் அதிகப்படியான செல்லம் சின்ன குழந்தை..அதற்க்கு எல்லாம் கெடைக்கிறது என்ற ஏக்கம் பெரியவனுக்கு...விளையாட கூட வெளியில் விட மாட்டார்கள்..என்று அவன் கூறியபோது எனக்கு கஷ்டமாக இருந்தது...நானும் இதைக்கண்டு இருக்கிறேன்..


இரண்டாவது குழந்தை வந்ததும்...முதல் குழந்தையிடம் அன்பை குறைத்துக்கொள்ளும்...நல்ல(!) பெற்றோர்கள் உண்டு இவ் உலகில்...சிறு வயதில் எனக்கு இளையவர் என்ன தவறு செய்தாலும்...என்னை போட்டு மிதிப்பார்கள்...ஏனெனில், அவர் குறை மாதத்தில் பிறந்தவர் என்றும்...அவருக்கு பலம் குறைவு என்றும்...சொல்லுவர்...என்ன தவறு நடந்தாலும்...பெரியவனே காரணம்...அவன் தான் மூர்க்கன் என்று அடித்து அடித்து...

ஒரு நிலையில் ”என்ன அடிக்க தானே போகிறீர்கள்...இருங்க...அதை செய்து விட்டு வந்து விடுகிறேன்” என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டேன்..

இன்னொரு நிலையில்...” என்னைய தொட்ட நீ செத்த” என்று பெற்ற தகப்பனிடமே எதிராக சொல்லும் அளவுக்கு போய்விட்டேனே என்று நினைத்து வெட்கப்படுகிறேன்...

இதற்கெல்லாம் காரணம்...இரு குழந்தையையும் ஒன்று போல் பராமரிக்க தெரியாத பெற்றோர்களே....பிற்காலத்தில் அவன் இப்படி ஆகிட்டானே என்று புலம்புபவர்களும்...இவர்களே...

அந்த குழந்தையை நான் பார்க்கும் போதெல்லாம்..அக்குழந்தையின் கரடு முரடான அன்பை கவனிக்கிறேன்...”அங்கிள் நான் உங்க வீட்டுக்கு வரட்டுமா..என்னை இங்க வெளையாடவே விட மாட்டேங்குறாங்க..எப்ப பாத்தாலும் அடிச்சிட்டே இருக்காங்க” எனும் அக்குழந்தையின் பரிதவிப்பு என்னை மிரளச்செய்கிறது...

எதை சொன்னாலும்...எங்களுக்கு தெரியும்ங்க...ரெண்டு புள்ள பெத்த எங்களுக்கு தெரியாதா...என்று வெளிப்படையாகவே சொல்லும் அந்த பெற்றோர்களிடம்...”அடேய் பாவிகளா...ஒரு இனிப்பான குழ்ந்தையை...முரடனாக செதுக்கி கொண்டு இருக்கிறீர்கள்” என்றும் ஒரு முறை சொல்லிப்பார்த்து விட்டேன்..இதன் காரணமாக நட்பையும் முறித்துக்கொண்டார் சில காலம்..!


இதில் இருந்து நான் சொல்ல வருவது..ஒன்னுதாங்க...பல வீட்ல குழந்தை இல்லயே என்று ஏங்கி தவிக்கிறாங்க....உங்க வீட்ல இரு குழந்தைகள் இருந்தால்....உங்க மாசற்ற அன்பை இருவரிடமும்...சரிநிகர் சமானமாக காட்டுங்கள்...ஏக்கத்தை நீங்களே அளித்து...பிஞ்சு உள்ளங்களிடம் நஞ்சை விளைவித்து விடாதீர்கள்..

கொசுறு: நாளைய சமுதாயம் நல்ல படியாக அமைய...நம் அன்பின் வெளிப்பாடே  மூலதனம்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

10 comments :

 1. உண்மை... உண்மை... உண்மை...

  பின்னாளில் பல பிரச்சனை உண்டாவதே இதனால் தான்...

  ReplyDelete
 2. அருமை சகோ ..அசத்திட்டிங்க ,பல உண்மைகளை ஒருங்கே கொண்டு வந்து சொல்லியிருக்கிங்க சகோ.நான் மழலைகளோடு இருப்பதால்,அந்த வலிகளை நிறைய கண்டுள்ளேன் சகோ.எனக்கும் அப்படி ஒரு பாதிப்பு இருந்தது சகோ..அற்புதமான இன்னர் வொய்ஸ் சகோ.

  ReplyDelete
 3. அன்பர்!

  தங்கள் வலைப்பதிவை www.domar.com என்ற தளத்தில் இணையுங்கள்..
  வெறும் ஒரு லட்சம் கட்டினால், மாதம் பத்தாயிரம் ஓவாய் சம்பாதியுங்கள்!

  நன்றி!

  ReplyDelete
 4. அருமையான விடயம் சொல்லியிருக்குறீங்க மாம்ஸ்

  உங்களுக்கு எத்தனை குழந்தைகள் மாம்ஸ்

  ReplyDelete
 5. நல்லதொரு தகவல் பகிர்வு. இதைப் புரிந்து கொண்டால், இனி எந்தப்பெற்றோரும் வித்யாசம் பாராட்டமாட்டார்கள்.

  ReplyDelete
 6. இந்த விஷயத்தை நான் என் குடும்ப உறுப்பினர்களுக்கு [[ரெண்டாவது குழந்தை பிறந்ததும்]] அடிக்கடி இப்போதும் சொல்வதுண்டு.

  ReplyDelete
 7. இதாம்யா உன்கிட்டே ,இப்படி எப்போதாவது ஒரு நல்ல போஸ்டிங் போட்டு கலக்கிருவே..

  ReplyDelete
 8. கடைசியா சொன்னீங்க பாருங்க அதான் உண்மை. குழந்தை இல்லாதவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். இந்த தவறை பெரும்பாலான பெற்றோர்கள் செய்கிறார்கள் என்பதே வருந்த தக்க உண்மை.

  ReplyDelete
 9. நாளைய சமுதாயம் நல்ல படியாக அமைய...நம் அன்பின் வெளிப்பாடே மூலதனம்!

  பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய பகிர்வுகள்...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி