சீரக குழம்பு - துணைவி ஸ்பெஷல்!


வணக்கம் நண்பர்களே...சீரக குழம்பு பற்றி கேட்ட நண்பர்களுக்காக...

சீரகம் 3 தேக்கரண்டி, 
வெங்காயம் 1, 
தக்காளி 1, 
புளி கரைசல் - எலுமிச்சம் பழம் அளவு, 
குழம்பு மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
மஞ்சப்பொடி- தேவையான அளவு, 
உப்பு தேவையான அளவு, 
நல்லெண்ணெய் தேவையான அளவு (அல்லது தங்களுக்கு பிடித்த எண்ணெய்!),
கடுகு - ஒரு தேக்கரண்டி..

செய்முறை: முதலில் வெங்காயம் மற்றும் தக்காளி - சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..

 சீரகம் 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு வெறும் வாணலியில் பொன் முருகலாக வறுத்துக்கொள்ளவேண்டும்...பின்பு அதை சூடு ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்...

பின்பு வாணலியில்(கடாயில்!) எண்ணெய் ஊற்றி..சூடேரியவுடன் கடுகு போட்டு...பொறிந்தவுடன்...சிறிய துண்டுகளாக வெட்டிய வெங்காயத்தை முதலில் போட்டு வதக்கவும், பிறகு சிறிய துண்டுகளாக வெட்டிய தக்காளியை போட்டு வதக்கவும்...நன்கு வதங்கியவுடன்..புளிக்கரைசலை ஊற்றவும்...மிளக்காய் தூள் தேவையான அளவு மற்றும் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை தூவவும்..பச்சை வாசனை மணம் மாறும் வரை பொறுத்திருக்கவும்...இறுதியில் நன்கு வதங்கியவுடன் பொன் முருகலாக வதக்கி வைத்திருக்கும் சீரகத்தைய் போடவும்...ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்...

சுவையான சீரக குழம்பு ரெடி...

நீங்கள் விரும்பினால் நளபாகம்(!) தொடரும்...

கொசுறு: இக்குழம்பு எப்படி வைப்பது என்று கேட்டுக்கொண்ட நண்பர்களுக்காக இங்கு டைப்பப்பட்டது...அதை விடுத்து...வீட்டில் நான் ரெகுலராக சமைக்கிறேன் என்று நீங்களாக நினைத்துக்கொண்டால்(!) அதற்க்கு நான் பொறுப்பல்ல..!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

40 comments :

 1. //நீங்கள் விரும்பினால் நளபாகம்(!) தொடரும்...//

  செய்யுற வேலையை சொல்லிப்புட்டு,
  ஜமாளிபிகேஷனும் கூடவே.

  ReplyDelete
 2. நிறைய பேருக்கு(!) உதவும்.

  ReplyDelete
 3. ’சீரகம்’ என்பது அகத்தை சீராக வைக்க உதவுவது. அதாவது நம் உடலின் செரிமான இயக்கம் சீராக உதவுவது.

  ReplyDelete
 4. அண்ணே கோத்து விட்ராதீக..அவ்வ்!

  ReplyDelete
 5. சீரகம்... = சீர்+ அகம்
  அகத்தை சீராக வைத்துக்கொள்ள
  நமக்கு கிடைத்த மாபெரும்
  மருத்துவ குணம் அடங்கிய
  பொருள்...
  வீட்டுக்கு போன உடனே
  முயற்சி செய்து பார்த்துர வேண்டியதுதான்
  மாம்ஸ்...

  ReplyDelete
 6. ச்சே ச்சே
  உங்களை
  நாங்களெல்லாம் அப்படி
  நினைக்க மாட்டோம் ...
  நீங்க வல்லவரு நல்லவரு...

  ReplyDelete
 7. @FOOD NELLAI
  ’சீரகம்’ என்பது அகத்தை சீராக வைக்க உதவுவது. அதாவது நம் உடலின் செரிமான இயக்கம் சீராக உதவுவது.

  >>>>

  ம்ம்..புரியிதுன்ணே...நல்லதுதானே..
  .......

  ReplyDelete
 8. நான் சொல்ல நினைச்சேன், அன்புத்தம்பி மகேந்திரன் வந்து சொல்லிட்டாரு. ஹா ஹா ஹா

  ReplyDelete
 9. @மகேந்திரன்
  மகேந்திரன் said...
  சீரகம்... = சீர்+ அகம்
  அகத்தை சீராக வைத்துக்கொள்ள
  நமக்கு கிடைத்த மாபெரும்
  மருத்துவ குணம் அடங்கிய
  பொருள்...
  வீட்டுக்கு போன உடனே
  முயற்சி செய்து பார்த்துர வேண்டியதுதான்
  மாம்ஸ்...

  >>>>>>>>>>

  செய்ஞ்சி பாத்துட்டு சொல்லுங்க மாப்ளே...
  ..........
  ச்சே ச்சே
  உங்களை
  நாங்களெல்லாம் அப்படி
  நினைக்க மாட்டோம் ...
  நீங்க வல்லவரு நல்லவரு...

  >>>>>>>>>

  யோவ் ஏன்யா கலாய்க்கிற...மீ பாவம்...அவ்வ்!

  ReplyDelete
 10. //விக்கியுலகம் said...

  ம்ம்..புரியிதுன்ணே...நல்லதுதானே..
  .......//
  சந்தேகமின்றி விக்கி.

  ReplyDelete
 11. @FOOD NELLAI

  FOOD NELLAI said...
  நான் சொல்ல நினைச்சேன், அன்புத்தம்பி மகேந்திரன் வந்து சொல்லிட்டாரு. ஹா ஹா ஹா

  >>>>>>>>>>>

  எந்தனு மஹானு பாவு...அவ்வ்!

  ReplyDelete
 12. @FOOD NELLAI

  FOOD NELLAI said...
  //விக்கியுலகம் said...

  ம்ம்..புரியிதுன்ணே...நல்லதுதானே..
  .......//
  சந்தேகமின்றி விக்கி.

  >>>>>>>

  புரிந்துணர்வுக்கு நன்றின்ணே

  ReplyDelete
 13. நான் ஏதும் சொல்லலைப்பா... அப்புறமா நான் குழந்தைய குளிப்பாட்டுறத பத்தி ஏதாவது சொல்ல அத யாரும் யார் எண்டு கேட்க அது .... பிறகு அவை சீராக குழம்பு... குளிப்பாட்டுறது... எல்லாத்தையும் முடிச்சு போட்டு ஒரு முடிவுக்கு வர... வேண்டாம் விட்டுடுவம். நான் ஒண்டுமே சொல்லலைப்பா....

  ReplyDelete
 14. @Muhunthan Rajadurai

  Muhunthan Rajadurai said...
  நான் ஏதும் சொல்லலைப்பா... அப்புறமா நான் குழந்தைய குளிப்பாட்டுறத பத்தி ஏதாவது சொல்ல அத யாரும் யார் எண்டு கேட்க அது .... பிறகு அவை சீராக குழம்பு... குளிப்பாட்டுறது... எல்லாத்தையும் முடிச்சு போட்டு ஒரு முடிவுக்கு வர... வேண்டாம் விட்டுடுவம். நான் ஒண்டுமே சொல்லலைப்பா....

  >>>>>>>>>>

  ஹாஹா...குழந்தைன்னா இருக்கரதுதான்..அதைக்குளிப்பாட்டுறதுதான்...இதெல்லாம் ஜகஜமப்பா!

  ReplyDelete
 15. கொசுறு../// நான் நம்பிட்டேன்....மாம்ஸ்..

  ReplyDelete
 16. சமையல் பண்ணுனா தப்பா !!,உண்மையை சொல்ல பயபடாதே வெங்கட்...

  ReplyDelete
 17. மாம்ஸ் வீட்ல நீங்க சமைச்சிட்டு மேடம் பேர போட்டு எஸ்கேப் ஆகறீங்களா?அடுத்து துணி துவைப்பது, கோலம் போடுவது எப்படி? பதிவு போடுங்க.

  ReplyDelete
 18. மாம்ஸ் நளபாகம் அருமை!
  உங்கள் சேவை தொடரட்டும்..! அடுத்தது பாம்பு சூப் வைப்பது எப்படி போடுங்க...!ஹிஹி!

  ReplyDelete
 19. ஒருவேளை எதிர்காலத்தில் நாமலும் இப்படி சமையல் குறிப்பு எழுதவேண்டி வருமோ?

  ReplyDelete
 20. மிகவும் உபயோகமான பதிவு - இது என் துணைவி கமெண்ட்.  துணைவி பேர் போட்டு நீரு மட்டும் தான் எஸ்கேப் ஆவீரா?

  ReplyDelete
 21. யோவ், சீரக குழம்பால் என்ன நன்மைகள்னும் பதிவுல சொல்ல வேண்டாமா?.கமெண்ட்லயாவது சொல்லும்யா!

  பித்தத்தை தெளியவைக்குமா?
  அட்லீஸ்ட் மப்பையாவது தெளிய வைக்குமா?

  ReplyDelete
 22. //துணைவி ஸ்பெஷல்! //

  கலக்குவோய்... எங்க தலமேரி, மனைவி, துணைவி...

  ம்ம்ம்ம்... நடத்தும்வோய்!!!

  :-)

  ReplyDelete
 23. @கோவை நேரம்

  கோவை நேரம் said...
  கொசுறு../// நான் நம்பிட்டேன்....மாம்ஸ்

  >>>>>>>>>>>

  யோவ் மாப்ள...நெசத்த...நெசம்னும் சொல்லலாம்...நீர் சொல்றாப்லயும் சொல்லலாம்!

  ReplyDelete
 24. @KESAVA PILLAI'GOPS'

  KESAVA PILLAI'GOPS' said...
  சமையல் பண்ணுனா தப்பா !!,உண்மையை சொல்ல பயபடாதே வெங்கட்...

  >>>>>>>>>

  கேசவரே...நாம் உண்ணுற விசயத்துல எதுக்கு பொய் சொல்றது..அதுவும் இல்லாம இது வெஜ் ஆச்சே...நான்வெஜ்தான் நான் செய்வேன்..அவ்வ்!

  ReplyDelete
 25. @! சிவகுமார் !
  ! சிவகுமார் ! said...
  மாம்ஸ் வீட்ல நீங்க சமைச்சிட்டு மேடம் பேர போட்டு எஸ்கேப் ஆகறீங்களா?அடுத்து துணி துவைப்பது, கோலம் போடுவது எப்படி? பதிவு போடுங்க.

  >>>>>>>>

  யோவ் உனக்கு தெரியாத...நான் மாமிச பட்சணின்னு...ஹிஹி..இது வெஜ்யா...சரி சீக்கிறத்துல...துணி துவைப்பதும்...கோலம் போடுவதும்...செய்முறை போடுறேன்..நோ பிராப்ளம்ங்கறேன்!

  ReplyDelete
 26. @வீடு சுரேஸ்குமார்
  வீடு சுரேஸ்குமார் said...
  மாம்ஸ் நளபாகம் அருமை!
  உங்கள் சேவை தொடரட்டும்..! அடுத்தது பாம்பு சூப் வைப்பது எப்படி போடுங்க...!ஹிஹி!

  >>>>>

  பாம்பு சூப்...சிறுசா...பெருசா..அவ்வ்!

  ReplyDelete
 27. @K.s.s.Rajh
  K.s.s.Rajh said...
  ஒருவேளை எதிர்காலத்தில் நாமலும் இப்படி சமையல் குறிப்பு எழுதவேண்டி வருமோ?

  >>>>>>

  கண்டிப்பாக வரும்...குறித்துக்கொள்ளவும்...நாள்காட்டியில்..ஹிஹி!

  ReplyDelete
 28. செங்கோவி said...
  மிகவும் உபயோகமான பதிவு - இது என் துணைவி கமெண்ட்.  துணைவி பேர் போட்டு நீரு மட்டும் தான் எஸ்கேப் ஆவீரா?

  >>>>>>

  அடடா...மாப்ளே செங்கோவி...இதுல நல்லா பாரும்யா..வெஜ் அயிட்டம்யா...நாம எங்கிருந்து வெஜ் சமைக்கறது..ஹிஹி...
  ..............
  செங்கோவி said...
  யோவ், சீரக குழம்பால் என்ன நன்மைகள்னும் பதிவுல சொல்ல வேண்டாமா?.கமெண்ட்லயாவது சொல்லும்யா!

  பித்தத்தை தெளியவைக்குமா?
  அட்லீஸ்ட் மப்பையாவது தெளிய வைக்குமா?

  >>>>>>>>>

  மேலே சங்கரலிங்கம் அண்ணே சொன்ன கருத்துக்களை வாசிக்கவும்..அது தவிர சரக்கடிப்பவர்களுக்கு சுர்ருன்னு இருக்கும்...அவ்வ்!

  ReplyDelete
 29. @வெளங்காதவன்™

  வெளங்காதவன்™ said...
  //துணைவி ஸ்பெஷல்! //

  கலக்குவோய்... எங்க தலமேரி, மனைவி, துணைவி...

  ம்ம்ம்ம்... நடத்தும்வோய்!!!

  :-)

  >>>>>>>>

  யோவ் நான் என்னா நாலா வச்சி இருக்கேன்...ராசுகோலு...ஒன்னுதான்யா...குடும்பத்துல குண்டு போடாம இருக்க மாட்டாக போல!

  ReplyDelete
 30. தொடர்ந்து நன்றாக சமைக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 31. அட... சூப்பர்... இது போல் தொடர வாழ்த்துக்கள்... ஹிஹி...

  ReplyDelete
 32. யோவ் இது சீரக ரசமா இல்ல சீரக கொழம்பா?

  ReplyDelete
 33. ஹி ஹி சமையல் குறிப்பு நன்றாக இருக்கிறது. யாருமே சொல்லாத நேரத்தில் வாலண்டியராக எதுக்கு கொசுறு? நான் நம்பிட்டேன் மாப்ள.

  ReplyDelete
 34. @பன்னிக்குட்டி ராம்சாமி
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தொடரட்டும் வோய்......

  >>>>>>>

  சரி சரி தொடரட்டும் ஓய்!

  ReplyDelete
 35. @koodal bala

  koodal bala said...
  தொடர்ந்து நன்றாக சமைக்க வாழ்த்துக்கள்!

  >>>>>>>

  வாழ்த்துக்களுக்கு நன்றி...மீண்டும் கொசுறை பார்க்கவும்..என்னே உலகம் இது..!

  ReplyDelete
 36. @திண்டுக்கல் தனபாலன்

  திண்டுக்கல் தனபாலன் said...
  அட... சூப்பர்... இது போல் தொடர வாழ்த்துக்கள்... ஹிஹி...

  >>>>>>>>>

  நன்றிங்கோ

  ReplyDelete
 37. @பன்னிக்குட்டி ராம்சாமி
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் இது சீரக ரசமா இல்ல சீரக கொழம்பா?

  >>>

  யோவ் சரியா கவனியும் குயம்பு..அட குழம்புதாம்பா...மப்புல இருந்தியோ!

  ReplyDelete
 38. @பாலா
  பாலா said...
  ஹி ஹி சமையல் குறிப்பு நன்றாக இருக்கிறது. யாருமே சொல்லாத நேரத்தில் வாலண்டியராக எதுக்கு கொசுறு? நான் நம்பிட்டேன் மாப்ள.

  >>>>>

  அடடா...ரைட்டு...நம்பித்தான்யா ஆகோனும் மாப்ளே!

  ReplyDelete
 39. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி