நிச்சயம் டூ கல்யாணம்(!!)

வணக்கம் நண்பர்களே...வாழ்க்கைய திருமணத்துக்கு முன்...திருமணத்துக்கு பின் என்று பிரிக்கலாம்...அதனிலும் திருமணத்துக்கு இன்னாருக்கு இன்னார் என்று முடிவு செய்து விட்டு...அதை தள்ளிப்போட்டு செய்வதை பற்றிய பதிவு இது...

தெரிந்த நண்பரின் தம்பியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது...

என்ன தம்பி கல்யாணம் முடிவாயிடிச்சி சந்தோசம் தானே என்றேன்...

அட போங்கன்ணே நீங்க வேற...நிச்சயம் பண்ணி புட்டு கிட்ட தட்ட ஆறு மாசம் கழிச்சி கல்யாணம் வச்சி இருக்காங்க...கடுப்பா இருக்கு என்றான்...

யோவ் என்னய்யா சொல்ற...பொண்ணு வீட்ல பணத்துக்கு ஏற்பாடு பண்ண வேணாமா...அது தவிர சத்திரம் கெடைக்கனும்...இன்னும் பல விசயங்களை சரிவர பிளான் பண்ணி செய்யனும்யா...கல்யாணம்ங்கறது...

அவன் இடை மறித்தான்...

அண்ணே கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க...இன்னும் எம்புட்டு காலம்தான் இப்படி சொல்லிட்டே இருப்பீங்க...

சரிய்யா ஆசை இம்புட்டு இருக்க கூடாதுன்னு...நான் நக்கல் அடிக்க...

இல்லன்ணெ....இந்த ஆறு மாச இடை வெளில போனுக்கு மட்டும் எம்புட்டு செல்வாகும் தெரியுமா...அது இல்லாம இப்பவே உங்களுக்கு யாராரெல்லாம் நண்பர்கள்...அவிகளோட நீங்க எம்புட்டு நேரம் செலவு பண்ணுவீங்க...பெண் நண்பிகள் உண்டா...இப்படி அரிக்க தொடங்கிட்டாங்க...நான் கல்யாணம் பண்ணிக்கும் பொண்னு...என்றான்..

இதெல்லாம் சகஜம் தானே...


அட...நான் இதெல்லாம் கேக்கலயே..எனக்கு கேக்கவும் தோணல...என்னைப் பொறுத்தவரைக்கும்...திருமணத்துக்கு முன் அவங்களுக்கு இருக்கும் நண்பிகள்...நண்பர்கள்..அவங்க என்ன மாதிரி என்பது தேவையில்லாதது...அதுவும் இல்லாம நாம ஆம்பிளைங்க...எல்லாத்தையும் உளரிடுவோம்(!)...பிற்காலத்துல நம்மல சரியா மடக்குவாங்க...அவிங்க மட்டும் ரெம்ப உசாரா இருக்காங்க...நம்ம அப்பிடியில்லையே...இதுக்கெல்லாம் காரணம் இந்த ஆறு மாச இடைவெளி...முடிவு கொடுத்தமா ஒரு மாசத்துல முடிச்சமான்னு இருக்கனும்ணே...

இருக்கலாம்யா...அதுக்காக செலவு...

என் நண்பர் ஒருத்தருக்கு இப்படித்தான் நிச்சயம் பண்ணி 6 மாசம் கழிச்சி வச்சாங்க..கடைசில கல்யாணம் நடக்கல...

ஏன்யா...

அவரும் என்னைய போல பிபிஓ துறைல தான் இருக்காரு...திடுதிப்புன்னு 3 மாசத்துல வேலை பூட்ச்சி...அவரு இப்ப வேலை தேடிட்டு இருக்காரு...பொண்ணு வீட்ல வேலையில்லாதவருக்கு எம் பொண்ண தர மாட்டேன்னு மறுத்துட்டாங்க...இப்ப அவிங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸா இருக்காங்க...பெத்தவிங்களையும் பகைச்சிக்க முடியல...இன்னொரு பக்கம் மனுசன் வேலைதேடி அலையிறாரு...இப்பவே பிபி வந்துரிச்சி...எதுக்கு இப்படியெல்லாம் ஸ்ட்ரெஸ்...பையன் தேடும்போது இன்னா வேலை பாக்குறாங்கன்னு தெரிஞ்சி தானே கொடுக்குறாங்க...நாம என்ன கவர்மெண்ட் வேலைக்காரங்களா...அயல் நாட்டுக்காரேன் வேலையில்ல போடான்னா அடுத்த 15 நாள்ல பொட்டி கட்டிக்கினு வேறு வேலை தேடி ஓடும் நிலைமைல இருக்கவங்கன்ணே...

சரிய்யா அவைங்க சைடும் பாக்கனும்ல...பொருளாதார மேட்டர் இருக்குல்ல...

கல்யாணம் மட்டும் தான் பொண்ணு வீட்ல பண்ணப்போறாங்க...நகை ஏதும் போட வேண்டாம்னு கண்டிசனா சொல்லிபுட்டேன்...அப்புறம் என்ன...

சரிப்பா அதை உங்கப்பாரு கிட்ட சொல்லிடுறது தானே...

அவரு எங்க கேக்குறாரு...ஏன்டா அலையிறேன்னு சொல்லி சிரிக்கிறாரு...

ஹாஹா...

ஏன்ணே நீங்க வேற...

யோவ் அவரு காலத்துல அவங்க அப்பா..அம்மா முடிவு பண்ணிட்டு அவருகிட்ட ஓகேவான்னு கூட கேட்டாங்களோ இல்லியோ...இப்ப அப்பிடியெல்லாம் இல்லல்ல...அதான்!

அதுக்குன்னு இப்பிடியா...

சரி விடு...பேச பேச சரியாகிடும்..


ஏன் மக்களே...நிச்சயத்துக்கும்...கல்யாணத்துக்கும் இம்புட்டு இடைவெளி நல்லதா...!..முடிஞ்சா சொல்லிட்டு போங்க..

கொசுறு: ஜாலி மேன் ஜாலிமேன் தாலி கட்டுனா ஜாலி மேன் - ஒன்லி சாங்க்!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

15 comments :

 1. சட்டு புட்டுன்னு நிச்சயம் பண்ணுநோமா கல்யாணத முடித்தோமா என்று இருக்கணும் ,புள்ளைகள் பாவமிலே ...

  ReplyDelete
 2. இடைவெளி நிச்சயமா நல்லதல்ல...... சிலருக்கு அந்த இடைவெளில கூட வேற ஒரு காதல் வந்துடுதாம்..... கேள்விப்பட்டேனுங்க....!

  ReplyDelete
 3. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 4. நிச்சயத்துக்கும்.., கல்யாணத்துக்கும் இடையில் பேசி பேசியே இனம்புரியாத ஈர்ப்பு போய்டுதுன்னு நினைக்குறேன். கல்யாணத்து போது மெல்லிசான வெட்கம், இனம்புரியாத கிளுகிளுப்புலாம் இல்லைன்னுதான் என் கருத்து.

  ReplyDelete
 5. நீ பொருளாதாரம் பற்றி சொல்லி அவனை இனியும் கடுப்பேத்தாதே, கடிச்சி துப்பிறப் போறான் உன்னை...!

  ReplyDelete
 6. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. இந்த இடைவெளி பரஸ்பர புரிதல்களை கொடுத்தாலும் அந்த சகோதரர் சொன்ன மாதிரி வேறு மாதிரியான பிரச்சனைகளை கொண்டுவந்து விடும் தான்..

  ஆண்கள் வரப்போறவளுக்கு நல்லவனா இருக்கணும்ன்னு நினைச்சு எல்லாத்தையும் உளறிக்கொட்டிருவாங்க, அதுவே அவங்களுக்கு எண்டிங்க் பாய்ட் அஹா மாறிடும்ங்கிறத தெரிஞ்சுக்காம

  என்ன பொறுத்தவரை இந்த இடைவெளி அவசியம் தேவைதான்... ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பை தாண்டி வாழுறதுக்கு நிறைய விசயங்கள் இருக்கு, நான் இப்படித்தாங்கிற உண்மை முகம் காட்டும் அத்தனையும் சுகமான சுமைதான்....

  ReplyDelete
 9. கால இடைவெளியை சிலசமயம் தவிர்க்க முடியாது..தகவல் தொடர்பை அதிகமாக்காமல்.அளவோடு .நிறுத்திக் கொள்ளலாம்!

  ReplyDelete
 10. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் (www.tamiln.org) இணையுங்கள்.

  ReplyDelete
 11. இது பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது மாம்ஸ்.ஆனாலும் இடைவெளி பெரிதாக வேதையில்லை என்பதே என் கருத்து.

  ReplyDelete
 12. கல்யாணத்துக்கு தயார் இல்லாதவங்க, நிச்சயம் எதுக்கு மாம்ஸ் பண்றாங்க

  ReplyDelete
 13. நிச்சயத்துக்கும்...கல்யாணத்துக்கும் இம்புட்டு இடைவெளி நல்லதா...?

  நல்லது தான்னு நினைக்கிறேன்...நம்ம ஊர்ல எப்படின்னு கொஞ்சம் யோசிக்கணும்...

  ReplyDelete
 14. ரொம்ப நல்லதுங்க... ஏன் அந்த இனிமையான நாளை ஞாபகப்படுத்தினீங்க....?

  ReplyDelete
 15. தங்களது இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரிக்குச் சென்று காணவும்...

  http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_25.html

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி