டீச்சர்ஸ் - வியட்நாம்..(பொழுது புலர்ந்தது!)

வணக்கம் நண்பர்களே...பல நாட்கள் ஆயிற்று வியட்நாம் பற்றி எழுதின்னு நினைக்கிறேன்...அதிலும் இந்த விசயம் என்னை ஆச்சரியப்படுத்தியதனால் பகிர்கிறேன்..

ஆசிரியர்கள் - இதில் மொழி ஆசிரியர்களுக்கு என்று தனி வரவேற்ப்பு உண்டு...அதுவும் ஆங்கில ஆசிரியர்கள் என்றாலே..தனி மரியாதை இங்கு(நம்மூரிலும்!)...

என்னுடைய சில அமெரிக்க நண்பர்கள் ஆங்கில ஆசிரியர்கள்...இவர்கள் போதிப்பது...ஆங்கிலம் வியட்நாமியர்களுக்கு...ஏனெனில், வியட்நாம் மற்ற நாடுகளைப்போல அல்ல என்பது என் கருத்து...வீரம் வெளைஞ்ச மண்ணுன்னு சொல்லுவாங்களே...அதுதான்...பல நூறு ஆண்டுகள் சீனர்களுடன் இடைவிடாத போர்...அவர்களுக்கு அடுத்து பிரெஞ்சு காலனி எதிர்த்து போர்...போகும் போது இந்தாடா வச்சிக்கன்னு பேரிக்கா காரன் கிட்ட கோத்து விட்டு போயிட்டாங்க ப்ரெஞ்சுக்காரங்க....அதுலயும் ஜெயிச்சி வந்தாங்க வியட்நாமிய மக்கள்...மீன்பிடி தொழிலையும்...விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த மக்கள்...எப்படி சாதிச்சிருக்காங்க பாருங்க...

சரி விஷயத்துக்கு வர்றேன்...வியட்நாமிய மொழி என்பது கிட்ட தட்ட சில நூறு ஆண்டுகள் பழமையானது...இப்போ உலக மயமாக்கலில்(!)...ஆங்கிலம் தேவை என்று உணர்ந்து அதை கற்க ஆரம்பித்து இருக்கின்றனர்...அதிலும் இங்கு பள்ளிகள்னு போனா...அரசு பள்ளிகள் மற்றும் இண்டர் நேசனல் பள்ளிகள் மட்டுமே...

அரசு பள்ளிகளில் வியட்நாமிய மொழியிலேயே பயிற்று விக்கப்படுகிறது...ஒரு பாடம் ஆங்கிலமும்...இன்னொரு பாடம் ஃப்ரெஞ்சும் கற்பிக்கப்படுகிறது...(மொத்தம் 6 பாடத்தில்!)..கட்டணம் - $50(மதிய உணவும் குழந்தைக்கு அளிக்க வேண்டும் என்றால் $100...பொதுவாக குழந்தைகள் பள்ளி தரும் உணவையே உண்கின்றனர்)

அடுத்து இந்த இண்டர்நேஷனல் பள்ளிகளில் ஆங்கிலம் பயிலவே அதிக செலவாகிறது...குறைந்த பட்சம் ஒரு குழந்தை நம்மூரில் செல்லும் முதல் வகுப்புக்கு மட்டும்..இங்கு $500 முதல் $600 மாதத்துக்கு கல்விச்செலவாகிறது(ரூபாய் - 25,000 - 30,000 இந்திய ரூபாயில்!)...

இது இப்படி இருக்க இந்த பள்ளிகள் ஏற்க்கும் ஆசிரியர்கள்...பிறப்பிலேயே ஆங்கில மொழி வழக்கம்(!) கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்று நினைக்கிறார்கள்...இதில் என்னைப் பொறுத்தவரை இந்தியர்களின் ஆங்கிலம் மிக தெளிவாக இருக்கும்...ஆனாலும் இவர்கள் ஆங்கிலேயர்களையே தேடுகின்றனர்...இந்த பள்ளிகளை நடத்தும் வெளி நாட்டினர்!


இதில் காமெடியான விஷயம் என்ன வென்றால்...பல ஆங்கில ஆசிரியர்கள் டிகிரி(இளநிலை கல்வி!) கூட முடிக்காமல் இங்கு வந்து வேலை செய்கிறார்கள்...இவர்களுக்கு $1000 முதல் $1500 வரை சம்பளமாக கிடைக்கிறது...நம்மூர்ல தான் டிகிரி முடிக்காம கஷ்டப்படுறவங்க நெறைய பேரு இருக்காங்கன்னா...பேரிக்காலயும் நெறைய பேரு இருக்காங்க போல...பணவீக்கம் அதிகமாக போய் விட்டதாகவும்..”பாமா” வந்து ஒன்னும் கிழிக்கலன்னும்(!)...நம்மூரு அரசியல விட கயிவி கயிவி ஊத்துறாங்க...

சரி விடுங்க...இதில் சொல்ல வரும் விஷயம் என்னன்னா...ஒரு காலத்துல இந்த நாட்டுக்காரங்கள ரெம்ப இளக்காரமா நெனைச்ச பெரியண்ணன் நாடு...இப்ப தன் ஆட்கள இங்க அதிகமா அனுப்பி வைக்குது...அதுவும் சரியான தகுதி இல்லாதவைங்களன்னு நெனைக்கும் போது(!)...இந்த பள்ளிகளை நடத்தும்..அப்பாடக்கர்கள் கவனிக்க வேண்டியது...கல்வியின் தரத்தை...அதை பயிற்றுவிப்பவர்களின் தரத்தை என்பது முக்கியமான விஷயம்...


எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மிகவும் அலுத்துக்கொண்டார்...என்னய்யா இது இம்புட்டு செலவு செய்ஞ்சிம் ஒன்னும் பிரோஜனம் இல்லயே...கல்வி ரெம்ப மட்டமா இருக்கேன்னாரு...

கொசுறு; எங்கேயோ தொடங்கி எங்கேயோ வந்துட்டேன்...எனவே..சொல்ல வந்தது..ஆங்கிலம் என்பது ஒரு மொழி...அந்த மொழியய் தாய் மொழியாய் இல்லாதவனே நச்சுன்னு பேசுறான் என்பது என் கருத்து....(உதவி - ஜார்ஜ் பெர்னாட்ஷா!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

11 comments :

 1. ஆங்கில மொழி கற்பதிலும், கற்பிப்பதிலும் இத்தனை விஷயங்களா?

  ReplyDelete
 2. ஒருவேளை, பேரி(க்க)ளம் பெண்கள் கற்றுக்கொடுத்தால், நல்லாருக்குமோ!

  ReplyDelete
 3. @FOOD NELLAI

  ஆங்கில மொழி கற்பதிலும், கற்பிப்பதிலும் இத்தனை விஷயங்களா?

  >>>>

  ஆமான்ணே...

  ....

  ஒருவேளை, பேரி(க்க)ளம் பெண்கள் கற்றுக்கொடுத்தால், நல்லாருக்குமோ!

  >>>>>

  ஹிஹி..அவிகளும் இருக்காய்ங்க...

  ReplyDelete
 4. பேரிக்காகாரன்கிட்டே ஆங்கிலம் கற்பதை விட அந்த கர்மத்தை படிக்காமலேயே இருந்துட்டு போகலாம்...விஷயங்கள் சொன்னமைக்கு நன்றி அண்ணே...!

  ReplyDelete
 5. FOOD NELLAI said...
  ஒருவேளை, பேரி(க்க)ளம் பெண்கள் கற்றுக்கொடுத்தால், நல்லாருக்குமோ!//

  இது யாரையோ தாக்குனாப்ல இருக்கே...!

  ReplyDelete
 6. ///இந்தியர்களின் ஆங்கிலம் மிக தெளிவாக இருக்கும்...///

  உண்மைதான் இந்தியர்களின் ஆங்கிலம் மிக தெளிவாக இருக்கும் ஆனா அவர்களுக்கு தேவை அமெரிக்க ஆக்ஸெண்டில் பேசப்படும் ஆங்கிலம்தான் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் போல

  ReplyDelete
 7. பிரிட்டிஷ் ஆங்கிலமா இல்லை அமெரிக்கன் ஆங்கிலமா எது என்று சொல்லுங்கள் ,நான் வருகிறேன் (பாடம் படிக்க ).

  ReplyDelete
 8. விளக்கம் - இப்போ தான் தெரியுது...

  ReplyDelete
 9. விக்கி இப்பதான் கொஞ்சம் புரியற மாதிரி எழுத ஆரம்பிச்சிருக்காப்ல....

  ReplyDelete
 10. அன்னாரவர்களின் ஆங்கில ஆய்வு குறித்து உயர்வுய்கிறேன்... இதை ஏன் தாங்கள் முனைவர் தகுதிக்கு அனுப்பக்கூடாது?

  #ங்கொய்யால... மப்பப் போட்டுட்டு வந்துய் வாந்தி எடுத்து வச்சிருக்கு... எதுக்கும் வாயத் தொடச்சிட்டு வீட்டுக்குப் போய்யா...
  :))

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி