பிரிவு எனப்படுவது யாதெனின்...!

வணக்கம் நண்பர்களே...நம் நண்பர்கள், சொந்தங்களில் நடக்கும்...நடந்து கொண்டிருக்கும் ஒரு விடயமே இது...

ஃப்போன் அழைப்பு மணி...எடுத்தேன்...

ஹலோ...என்ன மாப்ளே நல்லா இருக்கியா...என்னய்யா ஆச்சி 3 நாளா போன் எடுக்கல...தங்கச்சி எப்டி இருக்கா...குழந்தை எப்டி இருக்கு....

இல்ல மாமா...இப்பத்தான் வந்தோம்...

எங்க ஊருக்கு போயி இருந்தியா...

பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த எதிர் தரப்பு ஃபோனில் விம்மி அழும் அழுகை கேட்டது...

டேய் ஏன்டா அழுவுற...என்ன ஆச்சி...

என்ன மாமா பண்றது எல்லாம் விதி...இது வரைக்கும் போலீஸ் ஸ்டேசன் போகாத நான் இப்ப அங்கிருந்து தான் வர்றேன்...மொத்த குடும்பமும் ஒரு நாள் முழுக்க அங்கனதான் உக்காந்து இருந்தோம்...எல்லாம் உங்க தங்கச்சியால தான்...

என்னடா சொல்லுற..

என்னத்த சொல்லுறது...எல்லாரையும் வரதட்சனை கேட்டாங்கன்னு சொல்லி கேஸ் கொடுத்திட்டா...

ப்ளாஷ் பேக்...

அந்த குடும்பத்தில் இரு மகன்கள்...இருவரும் நன்கு படித்தவர்கள்...மூத்தவன் மிகவும் பொறுமைசாலி...அப்பாவி...வெளிஉலகம் அதிகம் அறியாமல் வாழ்ந்து வந்தான்...இளையவன் ஹாஸ்டலில் தங்கி படித்தவன்...தைரியசாலி...புத்திசாலியும் கூட...

இந்த நிலையில் மூத்தவனுக்கு பிபிஓ வில் வேலை கிடைத்தது....சம்பளம் 15,000 ரூபாயை தாண்டவில்லை....அவனுக்கு பிறக்கு வேலைக்கு சேர்ந்த இளையவன் சீக்கிறத்தில் 40,000 ரூபாயை கடந்து விட்டான்...எனினும் அண்ணனுக்கு ஒரு சின்ன தயக்கம் கூட வராமல் பார்த்துக்கொண்டான்...

இந்நிலையில் மூத்தவனுக்கு பெண் பார்த்தனர்...நிறைய பெண்கள் பார்த்தும் சரிவர அமைய வில்லை...கடைசியில் ஒரு பெண் முடிவானது...அந்த பெண் MBA படித்தவள்...இவன் M.com முழுவதுமாக முடிக்கவில்லை என்பதையும் சொல்லிவிட்டான்....எனினும், இரு வீட்டாரும் சம்மதத்துடன் மணம் முடித்தனர்....அப்பெண் மாதம் 25,000 ரூபாய்கள் சம்பாதித்து வந்தாள்...

திருமணம் ஆகி சில மாதங்களிலேயே இருவருக்கும் மனத்தாங்கல்கள் ஆரம்பமாயின...நான் வேலைக்கு செல்லும் பெண் என்னால் வீட்டு வேலைகள் எதுவும் செய்ய முடியாது என்று ஆரம்பித்து பல சின்ன சின்ன விசயங்கள் பெரிசுபடுத்தப்பட்டன...இதற்க்கும் மகனை பெற்ற தாயும் தகப்பனும் ஒன்றுமே பெரிது படுத்தாமல் வீட்டு வேலைகளை செய்து வந்தனர்...


சம்பாரிக்கும் பணத்தில் ஒரு ரூபாய் கூட கணவனுக்கு கொடுக்க முடியாது என்று சொல்லி...பேங்கில் சேமித்தும்...தன் அக்காவுக்கு உதவ வேண்டி தர இயலாது என்று சொல்லி விட்டாள்...அதற்கும் சரி என்று விட்டு விட்டனர்..

இந்நிலையில் இளையவன் கார் வாங்கினான்...ப்ளாட் வாங்கினான்...

நாமும் வாங்க வேண்டும் என்று மூத்தவனின் மனைவி நச்சரிக்க ஆரம்பித்தாள்...என்னால் அவ்வளவு பணம் கட்ட இயலாது என்று வேண்டாம் என்றான் கணவன்...என் பணத்தில் கட்டுகிறேன் என்று வாங்கிப்போட்டாள் ஃப்ளாட்டை...

காரை அடிக்கடி சின்னவனிடம் கேட்க தயங்கினான் பெரியவன்...இதற்கிடையில் தன் கணவனை வீட்டில் சரி வர மதிக்கவில்லை என்று சண்டை பிடித்தாள் மனைவி...பிரச்சினை பூத கரமாகியது...கணவன் மன்றாடினான்...தனி குடித்தனம் வேண்டாம் நம்மால் சமாளிக்க முடியாது என்று...கேட்கவில்லை மனைவி...

தாய் தந்தை தம்பியை விட்டு வர மறுத்த கணவனை...போலீசில் புகார் அளித்தாள் மனைவி...வரதட்சனை கேட்டு மிரட்டுகிறார்கள்...தினமும் குடும்பமே சேர்ந்து அடிக்கிறார்கள் என்று...அது தவிர சிகரட்டால் சுட்டதாக வடு வேறு...சிகரட்டே பிடிக்காத அந்த கணவன் மீது...

இன்று...

சரிப்பா எல்லாம் பேசி சரி பண்ணுவோம்...

என்னத்த சரி பண்றது மாமா...இந்த ஆட்டம் ஆடுனா...இப்போ அவளுக்கு வேலையும் போயிடிச்சி...என்ன பண்ணப்போறா...இப்படி என்னை அசிங்கப்படுத்தாதேன்னு காலில் விழுந்து கூட கேட்டு பாத்துட்டேன்...அவள் கேஸ் குடுப்பதற்க்கு முன்...இனி அவளுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி அழுதான்...


தம்பதியர் பிரியலாம்(!)...பெற்றோர்கள் பிரியலாமா...பெண்குழந்தை அதுவும் 1 வயது தான் ஆகிறது...என்னடா உலகம் இது...

இருவருக்கும் கொடுத்த கவுன்சிலுங்கும் தோல்வி...

என்ன செய்யலாம்..தங்களின் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகிறது நண்பர்களே...நேரம் இருப்பின் சொல்லிட்டு போங்க...

கொசுறு: நல்லதோர் வீணை செய்தே...அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...சொல்லடி சிவசக்தி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

17 comments :

 1. நானாக இருந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிய மனைவியை சொர்க்கத்திற்கு அனுப்பி விட்டுதான் மறுவேலை பார்ப்பேன்

  ReplyDelete
 2. திருமணங்கள் சொர்க்கத்துக் நிட்சயிக்கப்படுகின்றன என்று சொல்லுவர்கள் பெரியவர்கள். சொர்க்கம் என்பது ஒன்றும் வெளியில் இல்லை. எம் மனந்தான் அது. திருமண வாழ்க்கை சிறக்க பரஸ்பர புரிந்து கொள்ளலும் பரஸ்பர விட்டுக்கொடுப்பும் மிக மிக அவசியம். இந்த சம்பவம் படிக்கும் பலருக்கு பாடமாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.

  ReplyDelete
 3. //தம்பதியர் பிரியலாம்(!)...பெற்றோர்கள் பிரியலாமா...பெண்குழந்தை அதுவும் 1 வயது தான் ஆகிறது...//

  இது போன்ற தம்பதிகள் பலர் வீட்டிலும் இந்த அவலம் தான் !! தாங்கள் பெற்றோர்கள் என்பதையே மறந்துவிடுகிறார்களா ?! வேதனை !!

  இந்த பெண் செய்த தவறுகளை ஆரம்பத்தில் தட்டி கேட்டு இருக்கவேண்டும், வளர விட்டு இருக்க கூடாது. ஆண்கள் விட்டுகொடுக்கிறதாக எண்ணி பிரச்னையை வளரவிட்டு விடுகிறார்கள்.

  இந்த நிலைக்கு வந்தபின் கவுன்சிலிங் வேஸ்ட், ஒருவேளை அதில் சமாதானம் ஆனாலும் பட்ட காயங்கள், வடுக்கள் நினைவுபடுத்தி கொண்டே இருக்கும். தன் கோபத்தை, இயலாமையை அந்த குழந்தையின் மீது காட்டக்கூடிய நிலைக்கும் போகலாம். பெண் குழந்தையின் மனது மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம்.

  விவாகரத்து பெட்டர்.
  ...

  விக்கி இது என்னோட தனிப்பட்ட கருத்து மட்டுமே.

  நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை எழுதி வருவதை பாராட்டுகிறேன். படிக்கும் பலரையும் யோசிக்க வைக்கும். நன்றி.

  ReplyDelete
 4. குழந்தைக்காக சேர்ந்தாலும் பிரச்சனை வரும் என்றே தோன்றுகிறது! குழந்தையை வளர்க்கும் பொறுப்பை மனைவி ஏற்று கொண்டாலும் சரிவராது என்றும் தோன்றுகிறது! ஒண்ணுமே புரியலை! பாவம் அந்த குழந்தை!

  ReplyDelete
 5. மிக ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டிய விஷயம்.

  ReplyDelete
 6. அந்தக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது...

  ReplyDelete
 7. அருமையான பதிவு மாம்ஸ்..
  தெளிவு படுத்தப்பட வேண்டிய
  செய்திகள் ஆயிரம் இருக்கிறது இதில்..

  ஆனால் சிறுகச் சொன்னால்
  " வான்கோழி மயிலாக ஆசைப்படுதல் குற்றமே.....
  அதற்கான தகுதியை முதலில் வளர்த்து
  அதன் அருகில் இருக்கலாமே தவிர....
  அதன் உருவில் மாற இயலாது........
  நம்மால் என்ன முடியுமோ அதான் முடியும்......
  இறக்கை கட்டி வானில் பறக்க முடியுமோ....???""

  சிந்திக்க வேண்டும் தம்பதியினர்...
  வீம்பு பிடிவாதம் வறட்டு கௌரவம் விடுத்து
  நல்வாழ்க்கை வாழ்ந்திட
  வழிவகை செய்திடல் வேண்டும்....

  ReplyDelete
 8. கவுசல்யாவின் கருத்தே என் கருத்தும்.....விவாகரத்து"தான் இதற்க்கு பெஸ்ட் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 9. கவுசிலிங் கொடுத்து சரி பண்ணும் காலத்தை கடந்த மேட்டர் இது...! ஆனால் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தால் சரியாகும்னு நினைக்கிறேன், என்ன கொஞ்சம் பொய்யான நாடகம் ஆடவேண்டும், சிம்பிள்...!

  ReplyDelete
 10. /////சம்பாரிக்கும் பணத்தில் ஒரு ரூபாய் கூட கணவனுக்கு கொடுக்க முடியாது என்று சொல்லி...//////

  வீட்டு வேலையும் செய்ய மாட்டாங்க, காசும் கொடுக்க மாட்டாங்க...... என்ன அக்கிரமம் இது? ரொம்ப கேவலமா திட்ட தோனுது......!

  ReplyDelete
 11. ஹிம்...என்னத்த சொல்றது மாம்ஸ்

  //தம்பதியர் பிரியலாம்(!)...பெற்றோர்கள் பிரியலாமா...பெண்குழந்தை அதுவும் 1 வயது தான் ஆகிறது//

  ரொம்பவும் மனஉளச்சலை தருது மாம்ஸ்

  ReplyDelete


 12. இதுவரை மேற்சொன்ன அனைவரின் கருத்துக்களுமே தவறானது என்பது என் எண்ணம்

  தனிக் குடித்தனம் ஒன்றும் நடைமுறை சாத்தியமில்லாததோ அல்ல மிகப் பெரிய குற்றமோ அல்ல

  பெற்றோர், ஊட்டி வளர்த்தனர், நேற்றுவரை ஆளாக்கி திருமணம் செய்து வைத்தனர். அவர்களை பேணுவது கடமை மறுக்கவில்லை

  தான் நினைக்கும் தீர்வுக்காக எந்த செயலையும் செய்வது ஆபத்து. அதற்கு மரண தண்டனை என்பது அதனினும் கொடிது

  ஆலோசனைகள், அறிவுரைகளால் தீர்வு ஏற்படவில்லை. இதுவே தவறான முன் வைப்பு. எதை நோக்கி ஆலோசனையும், அறிவுரையும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் பல்வேறு தீர்வுகள் உள்ளன. எந்த தீர்வு யாருக்கு நன்மை பயக்கும் என்பது அவசியம்.

  இங்கே இவர்கள் வாழ வேண்டுமா என்பதை விட கூட்டுக் குடும்பத்தில் ஒரு பகுதி இன்னொரு குடும்பமாக வேண்டுமா என்பது?

  அடுத்து பொருளாதாரம் சார்ந்து பிரச்சனைகள், இதில் இங்கு பெண் ஊதாரி என்று வேறு காட்டப் பட்டுள்ளது. இன்னொன்று உள்ளது. இங்கே அந்த ஆணுக்கு தன்னம்பிக்கை மிக்க் குறைவு. அதைப் பற்றி எந்த ஆணும் கருத்து வைக்கவில்லை

  தம்பதியர் பிரியலாம், பெற்றோர் பிரியலாமா? காரணம் குழந்தை............

  தீர்வு

  தம்பதியர் பிரியக் கூடாது என்றால், தனிக் குடித்தனம் தவறில்லை, வாழ விடுங்கள். வாழ்ந்து முடித்தவர்கள் வழிக் காட்டுங்கள் தள்ளியிருந்து. 1948 ஆம் மு.வரதராசன் எழுதிய கள்ளோ? காவியமோ என்ற புதினத்தில் மிக அருமையாக சொல்லியிருப்பார், அவர்கள் வாழ்க்கையை கற்றுக் கொள்ளட்டும் தனிக் குடித்தனம் வைத்து விடுங்கள், தள்ளி இருந்து வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள் தவறு செய்யும் போது திருத்துங்கள் என்பார்.

  கசப்புகள் தீர காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

  தனிக் குடித்தனத்தில் அவர்கள் தேவையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். பெற்றோருக்கு வேலை குறைவு. முதியோர்களின் உழைப்பு என்பது அவர்களுக்கானது மட்டுமே ஆகும். நோயோ, அவசரத் தேவையோ பெற்றோருக்கு பிள்ளை அருகில்தான் இருக்கிறது, மேலும் சொந்தங்கள், நண்பர்கள்

  எனவே தனிக் குடித்தனம் வைத்து தம்பதியரை வாழ வையுங்கள். பெற்றோருக்கு சமாதானம் சொல்லுங்கள்.


  ReplyDelete
 13. தங்கள் செய்தி உண்மையாய் இருப்பின், எனது முயற்சிகள் தேவைப்படின், சம்பந்தப்பட்டவர்கள் சென்னையில் இருப்பின் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உதவ தயாராக இருக்கிறேன்

  ReplyDelete
 14. தங்கள் செய்தி உண்மையாய் இருப்பின், எனது முயற்சிகள் தேவைப்படின், சம்பந்தப்பட்டவர்கள் சென்னையில் இருப்பின் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உதவ தயாராக இருக்கிறேன்

  ReplyDelete
 15. Felt bad for the kid...

  BTW,உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் ...

  ReplyDelete
 16. இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
  என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும் !.......

  ReplyDelete
 17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி