வணக்கம் நண்பர்களே...
உலகத்துலயே எளிதான விசயம் அடுத்தவர்க்கு அறிவுரை வழங்குவது(!)...கடினமானது அந்த அறிவுரைப்படி தான் நடக்காதது(!)...இதைப்பற்றிய பதிவே இது...

எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நடந்த சம்பாஷனை தான் இந்த பதிவுக்கு காரணம்...

அது ஒரு மாலை நேரம்...

அனைவரின் வருகைக்காக காத்திருந்தோம்...சரியாக 6 மணிக்கு சந்திப்பதாக சொல்லி இருந்தார்கள்...எனவே...சரியான நேரத்துக்கு போய் காத்திருப்பதை தொடரும் நானும்(!) சிலரும் அங்கு முன்னமே வந்து இருந்தோம்...நண்பர்களுடன் பேச்சு ஓடிக்கொண்டு இருந்தது...

என்னப்பா வேலை எல்லாம் எப்படி இருக்கு...

முன்ன போல இல்லப்பா...ரெம்ப படுத்துறாங்க...பயணங்கள் அதிகரிச்சிடுச்சி...

அப்படியா...அப்ப செம வேட்டைன்னு சொல்லு...

என்னது வேட்டையா அப்படின்னா...

அட என்னைய்யா....இங்கன தான் ரெம்ப கம்மியான ரேட்ல கெடைக்குமே...

எதை சொல்றீங்க...சரக்கையா....

ஆமா...

அதுக்கென்ன ஒரிஜினல் நெறைய கெடைக்குது...எல்லாம் ப்ராண்டடும் குறைஞ்ச விலையில் கெடைக்குதே...

(அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்த மூவரும் என்னைப்பார்த்து கொள்(!!!) என்று சிரித்து விட்டனர்!)

யோவ் எதுக்குய்யா சிரிக்கிறீங்க...

அட நீ மனுசனாய்யா...நாங்க சொன்னது பெண்களை...!

அடப்பாவிகளா...

ஏன் நீ ரெம்ப யோக்கியமா...

எனக்கு சரக்கு உண்டு...இது போல விசயங்கள் கிடையாது...

அடப்பாவி...அனுபவிக்க தெரியாத ஆளுய்யா...

இருக்கலாம்...

(அதற்குள் அடுத்து ஒரு மணி நேரத்தில் வீட்டு பெண்களும் இரவு உணவுக்கு வருவதை நண்பர் ஞாபகப்படுத்தினார்...சீக்கிரம் மீட்டிங்கை முடிச்சிக்கனும்னு சொன்னார்!)

ஏம்பா...உங்கூட்டுல எப்படிப்பா நேரத்த ஓட்ராங்க...

நான் மாசம் இவ்ளோன்னு கொடுத்துடுவேன்...வேலைக்காரங்க போட்டு வச்சிருக்கோம்...அவிங்க வீட்ல வேலை எல்லாம் பாத்துப்பாங்க...புள்ளிங்க பாட்டுக்கு ஸ்கூலுக்கு போயிடும்...இவிங்களுக்கு வேலையே இல்ல...ஜாலியா ஊர சுத்திட்டு வர்றாங்க...

தனியாத்தானே...

இல்ல கூட்டமா இங்கு இருக்கும் பெண்கள் கூடத்தான்...!

இல்லய்யா பாய்ஃப்ரண்டுல்லாம் இல்லயா...

ஏய் என்ன திமிரா...நக்கலா பேசுற...

என்னங்கடா...நீங்க மட்டும் மார்கழி மாச பிராணி(!) கணக்கா திரியிறீங்க...

அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்...

“நாம கோவலனா இருக்கலாம்...ஆனா மனைவி மட்டும் கண்ணகியா இருக்கனும்ங்கறது...எவ்வளவு கேவலமான எண்ணம்யா”

நிறுத்து...இதோட...

ஏன் நிறுத்தனும்...ஆனா ஊனா சுதந்திரம் கொடுத்திருக்கோம் பெண்களுக்குன்னு கூவுறீங்களே...நீங்க யாரு அதை கொடுக்க...எங்க பாரு மேய்ஞ்சிட்டு வர்றத நிறுத்துங்கடா...

டேய் நீ சொல்லாத...உன்னையப்போல நாங்க குடிக்கரது இல்ல....

ஹாஹா...நானாவது வீட்டோட இருக்கேன்...நீங்க என்னடான்னா நல்லதுக்கு துட்டு செல்வு பண்ண மாட்டீங்கறீங்க...இப்படிப்பட்ட விசயங்களில் மனசாட்சிய அடகு வைக்கிறீங்களேப்பா...

உனக்கு இப்ப என்ன பிரச்சினை..

நீங்கள்லாம் பெண்கள் இப்படி இருக்காங்க...அப்படி இருக்காங்கன்னு பேசுறதுக்கு வக்கு இல்லன்னு சொல்ல வந்தேன்...அம்புட்டுதான்...

சரி இனி உங்கிட்ட இந்த விசயம் பற்றி பேசமாட்டோம்...

(அடுத்த ஒரு மணிநேரம் கழித்து...அவரவர் மனைவியுடன் நின்று ஃபோட்டோவுக்கு சிரித்தபடி ஃப்போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்!)

கொசுறு: நாம் செய்யும் கேவலமான விசயங்கள் யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொள்ளலாம்...ஆனால், மனசாட்சியே நம்மை கொன்று விடும் என்பதை மறுக்க இயலாது...சமத்துவம் என்பது எந்த வகை என்று புரியாதவர்களில் ஒருவனாகிய நான்!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

2 comments :

  1. மிகவும் உண்மை .. தன குடும்பத்தை தவிர மற்றவர்களை தவறாக பார்க்கும் பழக்கம் மனிதர்களிடம் அதிகமாக உள்ளது . இதுவே தவறுக்கு வழிவகுக்கின்றது

    ReplyDelete
  2. யாருக்காக இது யாருக்காக?

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி