மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் - 28.2.13

வணக்கம் நண்பர்களே...முதலில் அறிவியலை பாமரனுக்கும் புரியும் படி கொண்டு சேர்த்த...என்றும்...இளமை..எழுத்தினில் புதுமை என்று வாழ்ந்து மறைந்த எம்மான் சுஜாதா அவர்களுக்கு எமது அஞ்சலிகள்...

நெடு நாளாக தூங்கிக்கொண்டு இருந்த மானிட்டர் மூர்த்தி விழிக்க வேண்டி வந்தது...இனி அதிரடிகள் தொடரும்..

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக தோழா ஏழை நமக்காக...

வாய்யா மானிட்டரு எப்படி இருக்க....

வணக்கம்யா விக்கி ரெம்ப நாளு ஆச்சி இந்தப்பக்கம் வந்து...ஊட்ல ரெம்ப வேலை...அதேன்...

நாட்டு நெலம எப்படி இருக்கு...

ங்க்கும் எங்கிட்டு போறது...அம்மாம்பெரிய டேங்கர்(!) லாரியய ஏமாத்தி தட்டிபுட்டாங்க...

என்ன சொல்றே...

அட ஏம்பா தெரியாத மாதிரி கேக்கறே...அதான் நம்ம கப்புடன்ன தலையிலேயே தட்டிட்டாப்ல அவரு ஆளே...

அட தெரியாம பட்டு இருக்கும்யா...

யோவ் மண்டைல நச்சின்னு ஒன்னு வச்சா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கவும் இருக்கலாம்ல...


சரி சரி...நியூட்டனின் விதி போல விடு...

ஆமாம் நீ எந்த ஸ்கூல்ல படிச்ச...

நான் விவேகானந்தர் ச்சுகூல்லதான் படிச்சேன்...ஏன் கேக்குற...

இல்ல நீ படிச்சி இம்புட்டு பேசுறதுக்கு விவேகானந்தர் தானே காரணம்...அதேன் கேட்டேன்...

அட நீ வேற...10 வது படிக்கும் போதே படிப்பை நிறுத்தி இருக்க வேண்டியது...படிப்பு போதும்னு முடிவு பண்ணிட்டேன்...எங்கப்பாரு தான் எம்ஜிஆரு பாட்ட எல்லாம் போட்டு காட்டி...என்னைய விழிக்க வச்சாருபா...

அது இன்னா பாட்டு...

”நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...நம் நாடு என்னும் தோட்டத்தில(!) நாளை வளரும் முல்லைகளே”ன்னு...

ஓ...ஆமா பச்சை பில்டிங்க்ல ஓவர் சத்தமா இருந்துதாமே...

அதுவா சீக்கிறத்துல வாக்க புடுங்கனும்ல நம்மகிட்ட இருந்து அதேன்..ஆளாலுக்கு பில்டப்பு கொடுக்குறாங்க...


சாவும் போது தண்ணி ஊத்தாம குப்புற படுத்துகிட்டு குடும்பத்தோட கிலுகிலுப்ப வெளாடிட்டு இருந்தவங்க எல்லாம் இப்ப என்னடான்னா உதார் விடுறாங்க...பாலு ஊத்தி வாக்குவாங்கலாமுன்னுட்டு...ஆனாலும் முன்னாள் அரசரு(!) செம கேடிபா...என்னா மாதிரி செஸ்கேம் ஆடுறாப்ல...இந்தாளுக்கு கீழ இருக்குற ஆட்டு மந்தைகங்க இருக்கே அய்யயோ...மிடியல...ஆளாலுக்கு நட்ட நடு சென்டரு வேசம் போட்டுகிட்டு...கோமாளி கணக்கா கூவிட்டு இருக்குதுங்க...பழையதை(!) எப்படியாவது மறக்கடிக்கனும்னு இவிங்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்து இருப்பாங்க போல...!

அந்தூரு நமக்கு எதிரியில்லன்னு அவரு கூவிக்கினாரே...அதுக்கு இன்னான்ற...

ஹெஹெ ஏன் சொல்லமாட்டாப்ல...இங்கன ஒரு புள்ள தீய வச்சி கொளுத்திகிட்டு செத்தப்போ....இட்லிக்கு(!) போன் போட்டு கவலப்படாதீங்க நாங்க இருக்கோம்னு வெளம்பரம்(!) கணக்கா கூவி தன் ஊட்ட காப்பாத்துனாங்க இல்ல...அதேன்...என்ன நடந்தாலும் செஸ் கிங்(!) இருக்காரு...அவரு பாத்துப்பாருன்னு நெனைச்சிதான் இம்புட்டு பேச்சும்...நீ குத்துறாப்ல குத்து...நாங்கத்துறாப்ல கத்துறேன்னுதேன்...

ஏம்பா ஆங்கில படங்களை பல இடங்களில் உருவி தான் பண்ணாப்ல போலயே செய்ஞ்சி காமிப்பாரே...அவரு படம் செம ஹிட்டாமே...

ஹாஹா...அதான் முதல்ல எப்படிடா போட்டத எடுக்கப்போறோம்னு மண்டைய பிச்சிகிட்டாராம்...அப்புறம் ஆடுனதுதான் மாஸ்டர் ப்ளான் திரைக்கதை யுக்தியாம்...சரியா வேற ஒர்க்கவுட் ஆனதுல மஹா திருப்தியாம்...

ஏன்யா உனக்கு இம்புட்டு காண்டு...

இதே கல்லு மண்ணுன்னு நம்மள திட்டும்போது சூடு சொறனை இல்லாம கைத்தட்டுற பக்கும் நமக்கு மட்டும் தானே உண்டு...பொதுவா பேசிட்டு எல்லாரும் சமம்னு போகுற புண்ணாக்கு பய புள்ளிங்க நாம தானே அதேன்...காண்டு!

இந்த வார தத்துவம்: 


                                           தேடல் இருக்கும் வரையே வாழ்க்கை

ஆரோக்கியம் சொல்வது என்ன...

உருளைக்கிழங்கு தெரிந்து கொள்வோம்; உருளைக்கிழங்கு புரதம் உள்ள முக்கிய உணவாகும்...உண்மையில் உடனே ஜீரணம் ஆகக்கூடிய உணவுப்பொருள்....நம் வீடுகளில் ஆட்டுக்கறியுடன் உருளை ஏன் சமைக்கிறார்கள் தெரியுமா...உருளைக்கிழங்கு எளிதில் ஜீரணம் ஆகி வயிற்றுப்பாதையில் எந்த சிரமமும் இல்லாமல் ஆட்டுக்கறி செல்ல வழிசெய்கிறது...முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க பச்சையாக உள்ள கிழங்கை நசுக்கி முகம் முழுவதும் பூசிக்கொண்டு இரவில் தூங்க சென்றால்..முகம் பிரகாசமடையும்...இதை உடல் பருமன் அதிகம் உள்ளோர் சாப்பிட வேண்டாம் என்பதும் சரியே...

கொசுறு: இனி இம்சைகள் தொடரும்..

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

5 comments :

 1. உருளைப்பற்றிய பயனுள்ள செய்தி பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. கடைசியா சொன்ன டிப்ஸ் நல்லா இருக்கு

  ReplyDelete
 3. கலக்கல் பகிர்வு! நன்றி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி