காதல் எனும் கன்னித்தீவு....!(அரே ஓ சம்போ!)

வணக்கம் நண்பர்களே...


சில மாதங்களாக பதிவுகள் எழுதுவதை நிறுத்தி வைத்து இருந்தேன்...ஆனாலும் யாரும்...ஏன்யா எப்பேர்ப்பட்ட நல்ல(!) கருத்துக்களை உலகுக்கு சொல்ல வேண்டிய நீ ஏன் நிறுத்தி வச்சிருக்கன்னு(!) கேக்கல...சரி அவங்கதான் கேக்கல...நமக்கு எங்க போச்சி புத்தி(!)...அதானால் மீண்டும் இம்சிக்க வந்திருக்கிறேன்...அரே ஓ சம்போ...

காதல்...

இந்த வார்த்தை உச்சரிக்கும் போதே ஒரு வித சுகமான மூச்சு உள்ளிருந்து எழும்புவதை தடுக்க இயலவில்லை...அன்புக்கு எத்தனை பெயர்கள்...அதில் ஒவ்வொருவரும் வித்தியாசமான கோணலில் பார்க்கிறோம்...!

அந்த டீன் ஏஜ் எனும் கால கட்டத்தில் வரும் ஈர்ப்பை காதல் என்று எடுத்துக்கொள்வது எப்படிப்பட்டது என்பதை பிற்க்காலங்களில் உணர்கிறோம்...பிற்க்காலங்களில் நாம் அந்த பழைய நிகழ்ச்சிகளை நினைத்து ஒரு வித வெட்கத்துடன் சிரித்துக்கொள்வோம்...நாம இப்படியெல்லாம் வழிஞ்சிருக்கோமே என்று...

அதே நேரத்தில் காதல் எனும் ஒரு உன்னதமான சொல்லை உதவி எனும் சொல் மூலம் அடக்கி தன் வயப்படுத்தவே பெரும்பாலும் முயற்ச்சிக்கிறோம்...!

காதல் மற்றவர்களுக்கு எப்படியோ...என்னைப்பொறுத்தவரை கண்ணில் தொடங்கி கல்லரை வரை செல்லக்கூடியது...

காதலிக்கும் போது நம்மை அறியாமல் பறக்கும் பட்டாம்பூச்சிகள்....நமது சந்தோச உணர்வுகளே...அதே மணம் பற்றி நினைக்கும் போது தான் பொருளாதாரம் எனும் விசயம் தலை தூக்கும்...

இப்போ இருக்கும் காதல் பெரும்பாலும்.

”இன்னிக்கி காதலலெல்லாம் ரெம்பத்தான் மாறிப்போச்சி...கண்ண பாக்குது....கைய கோக்குது...ரூமு கேக்குது(!)...எல்லாம் முடிஞ்ச பின்னும் ஃப்ரெண்டுன்னு சொல்லிகிட்டு...வாழுறவங்க ரெம்ப பேருடா...

இதுக்கு பேரு ஃப்ரெண்ட்ஷிப்பா...கள்ளக்காதல்...

காதல் தோத்துட்டா...இப்ப சாவதே இல்ல...அட ஒன்னு தோத்துட்டா...ரெண்டு இருக்குதே புள்ள...இப்பல்லாம் தேவதாசு எவனும் இல்ல...!


அவன் பொழுது போக்குக்கு ஒரு ஃப்பிகர பாக்குறான்...அவ செலவு பண்ணத்தான் ஒரு லூச தேடுறா...ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறான்....ரொம்ப புளிச்சி(!) போச்சின்னா...கை குலுக்கி பிரியிறான்....!

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்,....அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்(!)...காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்...அது எப்போதுமே போதையான நிலவரம்..!

தும்மலப்போல வந்துப் போகுது இப்ப காதலு...காதலுன்னு சொல்லுறாங்க...கண்டபடி சுத்துறாங்கே...டப்பு குறைஞ்சா...மப்பு குறைஞ்சா தள்ளிப்போறாங்கே...”

இப்பவும் உண்மைக்காதல் என்பது குறிஞ்சிப்பூ போல இருக்கு...

அப்படி இருக்குறவங்களுக்கு எப்பவுமே நமது ஆதரவு உண்டு...

உடல் பசிக்காகவும்(!) டைம் பாசுக்காகவும் ஏங்கும் பனாதைகளின் சுத்தலுக்கு பேரு காதல் என்ற அர்த்தம் கொண்டால்(!) அதை விட கேவலம் ஏதுமில்ல...

கன்னித்தீவு போல...ஆணும், பெண்ணும் ஓவ்வொரு ஆளா தாவி(!)...தொடர்ந்து கொண்டே இருப்பது எவ்வளவு கொடுமையானது....!


கொசுறு: இவை எம்முடைய தனிப்பட்ட கருத்துக்கள்...இளைய சமுதாயத்தின் அன்பு எப்போதும் மாசுபடக்கூடாது என்று விரும்பும் நபர்களின் எண்ணவோட்டத்தில் ஒரு துளீ...அவ்வளவே...” காதலித்தல் தவறு இல்லை...அதை ஊறுகாயா தொட்டுக்கொண்டு...பொருளாதாரத்துக்கும்...நேர விரயத்துக்கும் மட்டுமே தொடருவது...கேவலம்!”..ஜூன் போனா ஜூலைன்னு மகரந்தத்தை தேடும் வண்டு போல போவது எம்புட்டு கொடூரமானது...சிந்திப்பீர் செயல்படுவீர்!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

22 comments :

 1. இந்த வார்த்தை உச்சரிக்கும் போதே ஒரு வித சுகமான மூச்சு உள்ளிருந்து எழும்புவதை தடுக்க இயலவில்லை//

  2much bro...

  ReplyDelete
 2. மாம்ஸ mobile view ைவத்தால் என்ன மாதிரி உள்ளவர்கள் வாசிக்க எளிதாகும்

  ReplyDelete
 3. மாம்ஸை பதிவு போடவைத்த காதலர் தினத்திற்கு ஒரு நன்றி

  ReplyDelete
 4. அங்கங்கே பாடலுடன் உண்மை நிலவரங்கள்... Blogs-அவ்வப்போது வாங்க-(என்னைப்போலே-ஹிஹி...)

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி ரெவரி மாப்ளே...

  ReplyDelete
 6. @முத்தரசு
  அதையும் கொஞ்சம் சொல்லிட்டு போவுமய்யா...!

  ReplyDelete
 7. @K.s.s.Rajh

  இனி அடிச்சி ஓட்றேன் மாப்ளே!

  ReplyDelete
 8. @திண்டுக்கல் தனபாலன்
  தலைவரே வருகைக்கு நன்றி...கண்டிப்பா வாரேன்...

  ReplyDelete
 9. Welcome Back! :-)

  ’காதல்’ பத்தி சப்ஜாடா எழுதி, என்னைப் போன்ற ’இளைய தலைமுறையினருக்கு’ வழிகாட்டிய நீவிர் வாழ்க! :-)

  இன்னொரு வாட்டி நீங்க இடைவெளி வுட்டா, அனாவசியமா நான் ‘காதல்’ பத்தி எழுத வேண்டி வரும்! :-)

  ReplyDelete
 10. @சேட்டைக்காரன்

  சேட்டை தாராளம எழுதுங்க..உங்க எழுத்துக்கு நான் ரசிகன்...நானும் இனி முடிஞ்ச வரை எழுதறேன்..சாரி கிறுக்குறேன்!

  ReplyDelete
 11. //சில மாதங்களாக பதிவுகள் எழுதுவதை நிறுத்தி வைத்து இருந்தேன்...ஆனாலும் யாரும்...ஏன்யா எப்பேர்ப்பட்ட நல்ல(!) கருத்துக்களை உலகுக்கு சொல்ல வேண்டிய நீ ஏன் நிறுத்தி வச்சிருக்கன்னு(!) கேக்கல..///

  அதுதான் உங்க பேஸ்புக்குல உங்க கருத்துகளை பிடிச்சு லைக் பட்டனை தட்டுகிறோமே அது கண்ணுல படலியா தலைவரே


  ReplyDelete
 12. கண்ணதாசனுக்கு அப்புறம் நீங்கதான் காதலைப் பற்றி உண்மைகளை சொல்லி இருக்கீங்க. அதனால் இன்று முதல் நீங்கள் பதிவுலகின் கண்ணதாசன் என்ற பட்டத்தை தருகிறோம். இனிமேல் இந்த பட்டத்தை சொல்லி உங்களை அழைக்காதவர்களை மனோவின் அருவாள் கவனித்து கொள்ளும் எனப்தையும் இங்கே தெரிவித்து கொல்கிறேன்  ReplyDelete
 13. ///
  இப்பவும் உண்மைக்காதல் என்பது குறிஞ்சிப்பூ போல இருக்கு...

  அப்படி இருக்குறவங்களுக்கு எப்பவுமே நமது ஆதரவு உண்டு...///

  எனக்கு ஆதரவு தரும் உங்களுக்கு நன்றி

  ReplyDelete
 14. விக்கி ராக்ஸ்.

  ReplyDelete
 15. இதயத்திலிருந்த வந்து விழுந்துள்ள வார்த்தைகள். உணர்ந்தால் உவகையே.

  ReplyDelete
 16. @Avargal Unmaigal

  அதுதான் உங்க பேஸ்புக்குல உங்க கருத்துகளை பிடிச்சு லைக் பட்டனை தட்டுகிறோமே அது கண்ணுல படலியா தலைவரே
  >>>>>

  நன்றிங்கோ...
  ............................
  கண்ணதாசனுக்கு அப்புறம் நீங்கதான் காதலைப் பற்றி உண்மைகளை சொல்லி இருக்கீங்க. அதனால் இன்று முதல் நீங்கள் பதிவுலகின் கண்ணதாசன் என்ற பட்டத்தை தருகிறோம். இனிமேல் இந்த பட்டத்தை சொல்லி உங்களை அழைக்காதவர்களை மனோவின் அருவாள் கவனித்து கொள்ளும் எனப்தையும் இங்கே தெரிவித்து கொல்கிறேன்
  >>>>>>>>
  அதுக்காக கொன்னுபுடாதீங்க சாமீ!
  ..................................
  எனக்கு ஆதரவு தரும் உங்களுக்கு நன்றி
  >>>>>>>>>>>
  எப்பவுமே என் ஆதரவு உங்களுக்கு உண்டுங்கோ நண்பா

  ReplyDelete
 17. @FOOD NELLAI
  இதயத்திலிருந்த வந்து விழுந்துள்ள வார்த்தைகள். உணர்ந்தால் உவகையே.

  >>>
  அண்ணே வருகைக்கு நன்றி...

  ReplyDelete
 18. டேய் அண்ணே...பேய் கீயின்னு சொல்லிட்டு டாபிக் மாத்திட்டே என்னாச்சுய்யா...?

  ReplyDelete
 19. உடல் பசி...[[காமம் மட்டும்]] காதல் இல்லவே இல்லை....

  அன்பு...அதனால் வரும் நேசம் பாசம் அழகு...அதுவே காதல்....கட்டிபிடித்து முத்தம் கொடுப்பது பெரிய விஷயமே இல்லை....ஆனால் முத்தத்தின் நடுவே "முகரும்" ஒரு செகண்ட் உண்டு அது [தான்]காதல் அன்பு பாசம்....நான் சரியா சொல்றேனா...?

  புரியுரவிங்களுக்கு புரியும்....!

  ReplyDelete
 20. வருக..வருக..பதிவுலகத்துக்கு நல்லகாலம் பொறந்துடுச்சு, நல்லகாலம் பொறந்துடுச்சு!

  ReplyDelete
 21. உண்மை காதல் குறைந்துவரும் நேரத்தில் சரியான பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி