வணக்கம் நண்பர்களே...சினிமா என்பது ஒவ்வொரு தமிழனோட ஆரம்பத்தில் இருந்து(!) ஆட்கொள்கிறது என்று நினைக்கிறேன்...அதுவும் சென்னை போன்ற நகரங்களில் சினிமாக்களின் காதல் அதிகம்...ஆனா டைரடக்கரா வர்றவங்கள்லாம் சென்னை வாசிகளாக இருப்பதில்லை...

அப்போல்லாம் குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டால்...வீட்ல இருக்க தாய் குலங்கள் சிலர் சினிமாவுக்கு சென்று விடுவார்கள்...குழந்தைகள் பள்ளி முடிஞ்சி வீட்டுக்கு வரும்முன் அவர்கள் வந்து விடுவார்கள்...

குறிப்பாக 11.30 மணிக்காட்சிதான் என்பதால்...என்னைப்போன்ற அப்பாவிக்குழந்தைகளுக்கு அம்மா சினிமாவுக்கு போறதே தெரியாது...அப்படிப்பட்ட அப்பாவியான(!) நான் முதல் படம் என்று போனது...ஒரு சோக்கானவரின் படம்(!)...அதற்க்கு கூட்டி போனது எனது டீச்சரும் அவர் மகளும் என்பது தான் சுவாரஸ்யம்...மாந்தோப்பு ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும் போது அந்த ஆசிரியைக்கு என் மேல் தனிப்பாசம் உண்டு...ஏன்னா எது கேட்டாலும் மூஞ்சிய அப்பாவியா வச்சிகிட்டு தெரியும்னும் சொல்லமாட்டேன்..தெரியாதுன்னும் சொல்லமாட்டேன் என்பதால்...

என்னடா இப்படி இருக்க...இவனுக்குள் எதோ ரெம்ப சோகம் இருக்கு போலன்னு நெனைச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்..

அன்று பெரும் மழை...ஸ்கூலுக்கு திடீரென்று விடுமுறை விட்டுட்டாங்க...நான் எப்போதும் பள்ளி முடிஞ்சி டீச்சர் வீட்டுக்கு போயிட்டு ட்யூசன் முடிஞ்சி வீடு வருவதே வாடிக்கை...

அன்று பள்ளியின் திடீர் விடுமுறையால்...என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது..டீச்சர்..வாடா என்று என் கைய பிடிச்சி இழுத்துட்டு போனாங்க அவங்க வீட்டுக்கு...அங்க போனதும் சட்டுன்னு மழை நின்னுடுச்சி...அவங்க வீட்ல இருந்த டீச்சரின் மகள்...எங்கயாவது போவோம்னு அடம் பிடிச்சிட்டு இருந்தாங்க...(கல்லூரி படித்துக்கொண்டு இருந்தார் அவர்)

எப்பவும் போல லீவு விட்டதும் மழை விட்டுவிடும்(!) என்பது அப்போதும் வாடிக்கை(!)...சரி சினிமாவுக்கு போகலாம்...இவனையும் கூட்டிகிட்டு போகலாம்னு ப்ளான் பண்ணாங்க...

நாங்க போகும் போது படம் ஆரம்பித்து இருந்தது...

அது படா சோக்கானவரின்(!) படம் என்பதால் உள்ளே நுழைந்த போதே விசில் சத்தம் காதை பிளந்து கொண்டு இருந்தது...

இடம் தேடிப்பிடித்து உக்காந்துட்டோம்...

அந்த படத்தில் அவரு என்னென்ன செய்றாரோ அதுக்கெல்லாம் விசில் பறந்து கொண்டு இருந்தது...!

ஒவ்வொரு முறை அவர்கள் விசுலுக்கும்...எனக்கு ஒரு வித இனம் புரியாத பயம் வந்து சென்று கொண்டு இருந்தது...

டீச்சர் நான் பாத்ரூமுக்கு போயிட்டு வரேன் என்றேன்...

பார்த்து போயிட்டு வா அந்தப்பக்கமா...என்றார்...

நான் அங்கு சென்றதும்...மணம்(!) பிச்சிக்கிட்டு வந்தது...அப்படியும் வந்த வேலையய் முடித்துக்கொண்டு வெளியே வந்தேன்...இரு இளைஞ்சர்கள் என்னை பிடித்து நிக்க வைத்து...

ஏன்டா...அந்த பொண்ணு யாரு..உன் அக்காவா...பாத்தா அப்படி தெரியலியே...நீங்க எங்க இருக்கீங்க...என கேள்விகள் அடுக்கிக்கொண்டே சென்றனர்...

நான் என்ன சொல்வது என்று புரியாமல்...

அவங்க எங்க டீச்சரோட பொண்ணு....ஏன் கேக்குறீங்க என்றேன்...

ஓ அவங்க பேரு என்ன என்றதும்..

க்றிஸ் அக்கா...

முழுசா என்னடா...

எனக்கு தெரியாது...நான் அப்படித்தான் கூப்பிடுவேன்...அவங்க அப்படித்தான் கூப்பிட சொல்லி இருக்காங்க என்றேன்..

நீ எங்க இருந்து வர்ற...

அவனின் கைப்பிடியில் இருந்து உதறிக்கொண்டு உள்ளே சென்றேன்..ஓடி வந்து அவன் என்னைப் பிடிக்கையில்...அந்த நிகழ்ச்சியை டீச்சரும்...அவங்க பெண்ணும் பார்த்து விட்டார்கள்...நேரே வந்த டீச்சர்...

டேய் என்னடா சின்னப்பையன் கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கீங்க என்றார்...

ஏய் சர்தாம் போ...என்று கெட்ட வார்த்தை எதோ சொன்னான்...

பளீர் என்று அவன் கண்ணத்தில் அறை விழுந்தது...டீச்சரின் தயவால்..

உடனே கூட்டம் கூடியதால் அவர்கள் அவமானம் தாங்காமல் ஓடி விட்டனர்...

கூட்டத்தின் ஊடே...


என்னடா...என்ன ஆச்சி என்று குரல்...

அம்மாவும்...அக்காவும்(மாமி) எதிரே நின்றனர்...

அவங்களுக்கு...அப்பாகிட்டயும்...மாமா கிட்டயும் சொல்லிடுவேனோங்கற பயம் கொஞ்சம் கூட இல்லையேன்னு நெனைச்சிகிட்டேன்..

கொசுறு: வீட்டுக்கு போகும் போது சாக்லேட்டுகளும் பிஸ்கட்டும் வாங்கி கொடுத்த போது தான் அவர்களின் பயம் புரிந்தது...ஹாஹா!...வாழ்க ஜெயராஜ்...இன்று இருக்கோ இல்லியோ!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

12 comments :

 1. நல்லா படம் பார்திருக்கீங்க,ஹா ஹா. அப்பவே அப்படியா!

  ReplyDelete
 2. நல்லா படம் பார்திருக்கீங்க,ஹா ஹா. அப்பவே அப்படியா!

  ReplyDelete
 3. ஹா... ஹா... அதன் பிறகு கேட்காமலே சாக்லேட்டுகளும் பிஸ்கட்டும் நிறைய கிடைக்குமே...!

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா ஹா நாசமாபோச்சுபோ....

  ReplyDelete
 5. டேய் அண்ணே....அந்த அக்கா பெயரை இன்னும் நீ முழுசா சொல்லல, எனக்காவது சொல்லிரு.

  ReplyDelete
 6. மாம்ஸ் அப்பவே காலேஜ் பொண்ணுங்க கூட படம் பார்க்க போயிருக்காங்கன்னா பாருங்க! சூப்பர் மாம்ஸ்!

  ReplyDelete
 7. ஜெயராஜ் இன்று இல்லை - இடிகப்பட்டுவிட்டது

  ReplyDelete
 8. ஹா...ஹா...

  Regarding the popup ...

  First backup your template...

  Then go to

  Template ----> Edit Html ---->
  Expand Widgets

  Search for...(CTRL F)
  googlecode.com

  Remove the code starting from

  -- < script (the first one above googlecode.com)

  ....googlecode.com.....

  till you reach the first
  --- < / script>

  Confused...? Feel free to ping me Vikki...

  ReplyDelete
 9. அம்மாவையும் அக்காவையும் எத்தனை நாள் ப்ளாக்மெயில் பண்ணி பிஸ்கட் சாக்லேட் வாங்கி சாப்பிட்டீட்ங்க என்ற விபரம் இல்லையே.......................

  ReplyDelete
 10. அக்கா பேர் தான் சொல்லல,சோக்கானவர் பேராவது சொல்லலாமே மாம்ஸ்

  ReplyDelete
 11. யோவ் விக்கி... இதுல தியேட்டர் பத்தின மேட்டர் ரொம்ப கம்மியா இருக்கேய்யா...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி