Mai Chau - வியட்நாம்..பயணம்..- அடேங்கப்பா -2

வணக்கம் நண்பர்களே...முதல் பாகத்துக்கு http://www.vikkiulakam.com/2013/02/mai-chau.html

அந்த அன்புடன் கூடிய வோட்காவை வாங்கும் முன் எனதருமை மனைவியின் முகத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டேன்...”ம்ம் நடக்கட்டும்னாங்க”...

இப்பதான் கொஞ்சம் தைரியத்துடன் வாங்கி குடித்தேன்...குளிர் அதிகமாக வீசிக்கொண்டு இருந்தது...உணவை முடித்துக்கொண்டு...ரூம் நோக்கி திரும்பினோம்...அந்த தம்பதியரின் வாழ்த்துக்களுடன்...

அறையில் ஹீட்டர் இல்லை...ரெம்ப கடினமாக இருப்பதாக மகன் சொல்லிக்கொண்டு இருந்தான்...

“என்னப்பா நாம திரும்ப எவ்வளவு நாள் கழிச்சி வியட்னாம் போவோம்” என்றான்....

இல்லடா கண்ணு இதுவும் வியட்நாமில் ஒரு ஊர்தான் என்றேன்...

என்னவோ போன்னு சொல்லிட்டு கார்டூன் சேனலில் மூழ்கிப்போனான்...

நாங்கள் தூங்கி விட்டோம்...

அடுத்த நாள் காலையில் எழுந்த போது மணி 6 ஆகி விட்டு இருந்தது...அந்த பனியில் காலையில் உணவு தேடி அலைய கிளம்பினோம்..ஒரு பேக்கரியில் சில கேக்குகள் கிடைத்தன...பிஸ்கட் ஒரே ஒரு பேக்கட் மட்டுமே இருந்தது...அதை வாங்கி எனது மகனிடம் கொடுத்து விட்டு இரு கேக்குகளை இருவரும் பகிர்ந்து உண்று விட்டு ரூமுக்கு வந்தோம்...

இப்ப கெளம்புனா சரியா இருக்கும் என்று எண்ணி அறையின் உரிமையாளரிடம்...சொல்லப்போகும் போது...அவர்தம் மொழியில் கூறியது புரியாமல் கவனித்தேன்..என் மகன் உடனே மொழி பெயர்த்தான்...

“சார் குடும்பத்துடன் செல்கிறீர்கள்...பார்த்து போங்க கொஞ்சம் ஆபத்தான நேரம் இப்போ...ரோடு நல்லாத்தான் இருக்கும்...ஆனாலும் பனி அதிகம்னு” அவர் எச்சரித்ததாக கூறினான்...

சரி என்ன செய்யலாம்னு வீட்ல கேக்க...என் வீட்டுக்காரம்மாவும்..”எவ்வளவோ பாத்துட்டோம்..இத பாக்க மாட்டமா...வாங்க” என்றதால் தைரியத்துடன் கெளம்பினோம்...


கிட்ட தட்ட 20 கிமீ தூரம் சென்று விட்டேன்...பனி கடினமாகியது...எதிரே எதுவுமே தெரியவில்லை...

பனி மூட்டமாக இருந்தது...பைக்கின் ஹெட் லைட்டை ஆன் செய்து கொண்டேன்...அதன் வழியாக வரும் சூட்டின் மூலம் பத்து அடிக்கு கொஞ்சம் மங்களாகவே தெரிந்தது...

பனிப்பொழிவு இருந்ததாலும்...மனைவியும்..மகனும் பயந்து விடப்போகிறார்கள்...எதிரில் என்ன வருகிறது என்பது தெரியாமல் என்பதாலும்...

முழுவதும் மூடும்படியான ப்ளாஸ்டிக் கவர் கொடுத்து இருந்தார்கள் பைக் உபயத்தார்...அதை எடுத்து முழுவதுமாக மூடிக்கொண்டு எனது முகம் மட்டும் தெரியும் படியாக கட் செய்து போர்த்திக் கொண்டேன்...

கொஞ்ச தூரம் போயிருப்பேன்...

ஏங்க குழந்த தூங்குறான்..எனக்கு நீங்க இந்த முகம் அளவுக்காவது கட் பண்ணி விடுங்க...கீழேயே பாத்துட்டு வர்றது தலை சுத்துது என்று சொன்னதும்...வண்டியை நிறுத்தி கட் செய்து விட்டேன்...

இப்போ அவளும் முன்னே பார்க்கலானால்...

யோவ் எப்படிய்யா வண்டி ஓட்ற...ஒன்னுமே தெரியல என்றாள்...

“ஹாஹா...நமது வாழ்க்கையும் இப்படித்தான்” என்று தத்துவம் சொல்லிக்கொண்டே..உள்ளூர சிறு உதரலுடன் பயணிக்கலானேன்...ஏனெனில் நான் போய்கொண்டு இருப்பது மலைப்பாதை...கீழே அதள பாதாளம்...என்பது தெரிஞ்சா இவிங்க எவ்வளவு டென்சன் ஆவாங்கன்னு தெரியும்...

இன்னும் எவ்வளவு நேரம் இவ்ளோ மெதுவா வண்டி ஓட்டுவீங்க என்றாள்...

ஹாஹா இதோ வந்துடிச்சி என்று சொல்லியே வண்டி ஓட்டி வந்தேன்...(சபரி மலை போகும் போது கன்னி சாமிகளிடம் கூறுவது போல...அவ்வ்!)

திடீரென்று ப்ரேக் போட்டேன்..எதோ எனக்கு உள்ளூர உறைத்ததால்...

ஒரு சின்ன கரிய உருவம் ரோட்டில் குறுக்கே ஓடி மறைந்தது...

என்னாங்க அது என்றாள்...

எதாவது பூனையா இருக்கும் என்றேன் உண்மை தெரியாமலேயே...

இவ்ளோ பெரிய கண்டுபூனையா...என்றாள்...


பேசாம வா..நானே அல்லு இல்லாம வண்டி ஓட்டிட்டு வரேன்...என்றேன்

சரி சரி பாத்து ஓட்டுங்க என்றாள்..கொஞ்சம் அதட்டலாக...

கொஞ்ச தூரத்தில் மலைமுகட்டில் ஒரு சின்ன குடில் போல இருந்தது...அதில் கொஞ்சம் உணவு கிடைக்கும் என எண்ணி நிறுத்தினோம்...

கொசுறு: சின்ன சின்னதாக பிரித்து எழுதுகிறேன்..இல்ல டைப்புறேன் பொறுத்தருள்க...

தொடர்வேன்...

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

10 comments :

 1. // “ஹாஹா...நமது வாழ்க்கையும் இப்படித்தான்” என்று தத்துவம் சொல்லிக்கொண்டே. //

  ய்ய்ய்ய்ய்ய்ய்....

  ReplyDelete
 2. உங்க தளத்துக்கு வரும்போது ஏதோ ஊசர்நேம் பாஸ்வேர்ட் கேக்குது... விளம்பரம் எதுனா வச்சிருக்கீங்களா...

  ReplyDelete
 3. ரொம்ப தி(ரி)ல்லாத்தான் போகுது...

  ReplyDelete
 4. @Philosophy Prabhakaran
  Philosophy Prabhakaran said...
  உங்க தளத்துக்கு வரும்போது ஏதோ ஊசர்நேம் பாஸ்வேர்ட் கேக்குது... விளம்பரம் எதுனா வச்சிருக்கீங்களா...

  >>

  அதான் எனக்கு புரியல...நான் ஒன்னும் விளம்பரம் வைக்கலியே...

  ReplyDelete
 5. நன்றி mobile view வச்சிட் டீங்க

  ReplyDelete
 6. வாழ்க்கை தத்துவம் அருமை! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 7. உங்க தளத்துக்கு வரும்போது ஏதோ ஊசர்நேம் பாஸ்வேர்ட் கேக்குது... விளம்பரம் எதுனா வச்சிருக்கீங்களா//

  I get the same in my blog too..If I findout I will let you know Vikkiji...

  Keep going...Hopefully the vacation was as nice as your blogging...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி