Mai Chau - வியட்நாம்..பயணம்...அடேங்கப்பா!


வணக்கம் நண்பர்களே...

முதலில் எமது இந்த தளத்தை தொடர்ந்து இயங்க வைக்க உதவிய திரு. சம்பத்குமார் அவர்களுக்கு நன்றிகள்...http://www.cuteparents.netஇனி பயணத்துக்கு செல்வோம்...

அதற்க்கு முன் இதை பாருங்கள்... 


விடுமுறை ஆரம்பிக்கும் முன்னரே வீட்டில் குடைய ஆரம்பித்து விட்டார்கள் சுற்றுலா போகலாம் என்று....கிட்டதட்ட 10 நாட்களுக்கு குறைவில்லாமல் ஜாலிடே...அலைஸ் ஹாலிடே இருந்ததால்(!) யோசிக்கலானேன் எங்கே செல்லலாம் என்று...அப்படி யோசிக்கும் போது பதிவில் போட்டு “ஐயா...சாமீ நான் அந்த ஊரு பாத்ததில்ல...எம்புட்டு ஆகும்...எதாவது முடிஞ்சா உதவுங்கன்னு(!) கேக்குறதுக்கு நாம என்ன பிச்சைக்கார பதிவரா(!)...இல்லயே எதோ கொஞ்சம் சூடு சொறனை இருக்குற பதிவராச்சே(!)...” சரின்னு இங்கிருந்து 165 கி.மீ தூரத்தில் இருக்கும் Mai Chau எனும் அழகிய இடத்துக்கு போவதாக முடிவு பண்ணினோம்...

சரி போகலாம்னு முடிவு பண்ணதும்...எப்படிப்போகலாம்னு யோசிக்கும் போது...பைக்கில் செல்லலாம்னு முடிவு செய்ஞ்சோம்...

வாடகைக்கு எடுத்துகிட்டு கெளம்பலாம்னு முடிவு பண்ணோம்...கிட்ட தட்ட மாலை 4 மணி ஆகிவிட்டு இருந்தது...குளிர்காலம் வேறு...சரி அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படின்னு விபரம் தேடினோம்...24 டிகிரின்னு காட்டியது..சரிதேன் கெளம்பலாம்னு கைல இருந்த கைப்பேசியில் மேப் ப்ளானை சரிசெய்து கொண்டு கிளம்பினோம்...

சிறிய பையில் இரு நாட்களுக்கு தேவையான சில உடுப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு...மலை பிரயாணத்துக்கு தயாரானோம்...ரிஸ்க் எடுக்கறது வேண்டாம்னு சொன்னாலும் கேக்கலயே வீட்ல இருக்கவுங்க...”யோவ் என்ன எப்ப பாரு பீலா விடுற....வாய்யா..அந்த ரிஸ்க் எப்படி இருக்கும்னு பாக்கலாம்னுட்டாங்க”...அவ்வ்...

கைப்பேசியில் இருக்கும் கூகுள் மேப்பை வைத்து கொண்டு முன்னேறினோம்...30 கி,மீ தாண்டி இருப்போம் சில்லென்று காற்று வீச தொடங்கியது...13 டிகிரிக்கு வந்து விட்டது கால நிலை...மூன்று பேர் சென்றதால் நிதானமாகவே ஓட்டி சென்றோம்...புரியாத பாஷையில்’ வழி கேட்டுக்கொண்டே சென்று கொண்டு இருந்தோம்...கிட்ட தட்ட 70 கிமீ தாண்டிய போது வந்தது தான் Hoa Binh எனப்படும் இடம்...இது இந்த மாவட்ட தலைநகரம்...ஆனால் சின்ன டவுன்...இருட்ட ஆரம்பிச்சிடுச்சி...சரி ரூம போடுவோம்னு ஒரு அறைய வாடகைக்கு எடுத்தோம்...$15 என்றார் அறை உரிமையாளர்....தெருவோரங்களில் பூட்டுகள் மட்டுமே எங்களை வரவேற்று இருந்தது...கடைகள் புது வருட கொண்டாட்டம் காரணமாக பூட்டப்பட்டு வெறிச்சோடிக்கிடந்தன...அடுத்து உணவு தேடி கிளம்பினோம்...ஒரு கடையில் கொஞ்சம் ரொட்டி பிஸ்கட் பாக்கெட் கிடைத்தது...அதை மனைவியிடமும் குழந்தையிடம் கொடுத்துவிட்டேன்...

நாம எங்க போனாலும் எதை வேணாலும் சாப்பிடும் ”ஜென்மம்” என்பதால்....வாய்க்கு ருசியா தேடலானேன்...ஒரு பக்கத்து கடையில் மணம் நாசியை துளைத்தது...என்னடான்னு பார்த்தா...சின்ன உணவு குடில்...அதிலிருந்து தான் வாசனை வந்தது..என்னாபா இருக்குன்னு கேட்டது...அண்ணே உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டாங்க அந்த இணை...

பார்த்தா கோழி கறி மட்டும்தேன் இருந்தது...சரி கொடுங்கன்னு...அதனுடன் கொஞ்சம் நூடுல்ஸை வறுத்து கொடுத்தனர்...

அண்ணே நீங்க அண்டோவா (இந்தியாவா!)ன்னு கேட்டாங்க...

ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க என்றேன்...அதான் உங்க மனைவி நெத்தில பொட்டு வச்சி இருக்காங்களே என்றார்...

அட என்றேன்...

வோட்கா குடிக்கிறீங்களா...இந்த பனிக்கு நல்லா இருக்கும்...என்றார்...

உங்களுடன் பயணிக்கிறேன்...

தொடரும்....
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. அண்டோவா... நல்லவேளை அனகோண்டவா என்று கேட்கவில்லை...!

  ReplyDelete
 2. @திண்டுக்கல் தனபாலன்
  வருகைக்கு நன்றி நண்பரே...அது ”அன்டோ” alies Ando என்று அழைப்பார்கள்...ஹாஹா!

  ReplyDelete
 3. திரு. சம்பத்குமார் அவர்களுக்கு என் கண்டனங்கள்...-:)


  தொடருங்கள்...உடன் பயணிக்கிறேன்...

  ReplyDelete
 4. அட்வென்ச்சர் ட்ரிப் போல இருக்கு.... நீங்க அட்வென்ச்சர் வேண்டாமுன்னு சொன்னாலும் உங்க வீட்டுல இருக்குறவங்க கேட்க மாட்டாங்க போல...

  ReplyDelete
 5. //வோட்கா குடிக்கிறீங்களா...இந்த பனிக்கு நல்லா இருக்கும்...என்றார்...///

  குடிக்கிறதுக்கு நமக்கு சொல்லித்தாராங்களா....அவங்ககிட்ட நீங்க சொல்லியிருக்கணும் நான் "டாஸ்மாக் டெம்பில் நகரத்தில்" இருந்து வந்தவன் என்று


  நீங்க குடிச்சீங்களா இல்லையா ரொம்ப சஸ்பன்ஸா சொல்லாமல் விட்டு விட்டு போய்விட்டீங்களே

  ReplyDelete
 6. ஏன் சார் குட்டி பதிவ போட்டிருக்கீங்க நீண்ட பதிவாவே போட்டிருக்கலாமே இந்த மாதிரி வெளிநாட்டிலே பிக்னிக் போனா எந்த மாதிரி அனுபவம் கெடைக்கும் தெரிஞ்சுக்க ஆவலாய் இருக்கேன்

  ReplyDelete
 7. மாம்ஸ்... கேட்க மறந்துவிட்டேன்... மிங்குவா தீவுகளுக்கு சென்றிருக்கிறீர்களா ? ஆமாம், என்றால் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்...

  ReplyDelete
 8. இணைய வழியாக எம் தொழிலை முன்னெடுத்து செல்லும்,
  எங்கள் சங்கத்து உறுப்பினரை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்துள்ளீர்கள்.
  இது குறித்து சர்வ தேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

  இப்படிக்கு,
  பிச்சைக்காரர்கள் நல வாழ்வு சங்கம்,
  தமிழ்நாடு.

  ReplyDelete
 9. @ரெவெரி

  ரெவெரி said...

  திரு. சம்பத்குமார் அவர்களுக்கு என் கண்டனங்கள்...-:)


  தொடருங்கள்...உடன் பயணிக்கிறேன்..

  >>>>>

  ஹா ஹா வருகைக்கு நன்றி மாப்ளே ரெவரி...

  ReplyDelete
 10. @Philosophy Prabhakaran
  Philosophy Prabhakaran said...

  அட்வென்ச்சர் ட்ரிப் போல இருக்கு.... நீங்க அட்வென்ச்சர் வேண்டாமுன்னு சொன்னாலும் உங்க வீட்டுல இருக்குறவங்க கேட்க மாட்டாங்க போல..

  >>>>>>

  ம்ம்ம் இப்பல்லாம் நம்மல வீட்ல இருக்குறவங்கதான் எங்க போலாம்னு ரெடியா இருக்க்காங்க...அதுவும் அட்வென்ச்சரா இருக்கனும்னு ஆசப்படுறாங்க..வருகைக்கு நன்றிய்யா

  ReplyDelete
 11. @Avargal Unmaigal
  Avargal Unmaigal said...

  //வோட்கா குடிக்கிறீங்களா...இந்த பனிக்கு நல்லா இருக்கும்...என்றார்...///

  குடிக்கிறதுக்கு நமக்கு சொல்லித்தாராங்களா....அவங்ககிட்ட நீங்க சொல்லியிருக்கணும் நான் "டாஸ்மாக் டெம்பில் நகரத்தில்" இருந்து வந்தவன் என்று


  நீங்க குடிச்சீங்களா இல்லையா ரொம்ப சஸ்பன்ஸா சொல்லாமல் விட்டு விட்டு போய்விட்டீங்களே

  >>>>>

  ஹாஹா அடுத்த பதிவில் சொல்லப்போறேன்...வருத்தம் வேண்டாம்..நண்பா வருகைக்கு நன்றி...

  ReplyDelete
 12. @minnal nagaraj

  minnal nagaraj said...

  ஏன் சார் குட்டி பதிவ போட்டிருக்கீங்க நீண்ட பதிவாவே போட்டிருக்கலாமே இந்த மாதிரி வெளிநாட்டிலே பிக்னிக் போனா எந்த மாதிரி அனுபவம் கெடைக்கும் தெரிஞ்சுக்க ஆவலாய் இருக்கேன்

  >>>>

  நான் கொஞ்ச நாள் கழிச்சி மீண்டும் பதிவுலகம் வந்து இருக்கேன்..அதோட என் பதிவுகள் முடிஞ்ச வரை படிக்கிறவங்க மூன்று நிமிடத்துக்கு மேல் நிற்க்காத வண்ணம் பாத்துப்பேன்..ஹாஹா..அடுத்த பதிவில் விளக்குகிறேன்...பிக்னிக் பற்றி..வருகைக்கு நன்றி...சகோ

  ReplyDelete
 13. @Philosophy Prabhakaran
  Philosophy Prabhakaran said...

  மாம்ஸ்... கேட்க மறந்துவிட்டேன்... மிங்குவா தீவுகளுக்கு சென்றிருக்கிறீர்களா ? ஆமாம், என்றால் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்...

  >>>>

  மாப்ளே எங்கிருக்குன்னு சொல்லும்யா...கேள்வி பட்டதா இருக்கு..அதேன் கேட்டேன்...ஆங்கிலத்தில் டைப் பண்ணுங்க இடத்தை...

  ReplyDelete
 14. @உலக சினிமா ரசிகன்
  லக சினிமா ரசிகன் said...

  இணைய வழியாக எம் தொழிலை முன்னெடுத்து செல்லும்,
  எங்கள் சங்கத்து உறுப்பினரை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்துள்ளீர்கள்.
  இது குறித்து சர்வ தேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

  இப்படிக்கு,
  பிச்சைக்காரர்கள் நல வாழ்வு சங்கம்,
  தமிழ்நாடு.
  >>>>>

  ரெம்ப நாளாச்சி நண்பா...தங்களை பதிவில் சந்தித்து எப்படி இருக்கீங்க...ஹாஹா...கேஸ் வேணுமா கேஸ் கேஸ்னு கேக்கறீங்க போல...அவ்வ்!

  ReplyDelete
 15. பயண அனுபவம் சுவையாக உள்ளது! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
 16. புதிய மோட்டார் சைக்கிள் டைரிகள்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி