அவர்களின் இரவு > தும் தஹா!

வணக்கம் நண்பர்களே...
இது ஒரு குடி..மடி(!) பதிவு...எனவே நல்லவர்கள் என்று நினைத்துகொண்டு இருப்பவர்கள் இந்தப்பதிவை தவிர்த்து விடவும்..!

நம்மூருல இருந்து வந்து இருந்த ஒரு பெரியமனுசன்(!)னின் வற்புறுத்தலால் ராசாக்கள் குடிக்கும் இடத்திற்க்கு செல்லவேண்டி வந்தது...

வீட்டில் இன்று நேரம் ஆகும் என்று சொன்னதும்...”இரவு வெளியே எங்கும் தங்க வேண்டாம்...எந்நேரம் ஆனாலும்(!) வந்து சேருங்கள்” என்று படார் என்று கன்னத்தில் அறைந்தது போல சொன்னாள் மனைவி...

சரி நமக்குதான் சூடு சொறனை போயி ரெம்ப நாட்கள் ஆயிடிச்சே என்று எண்ணிக்கொண்டு அவர் பக்கம் திரும்பினேன்...

”ஏன்பா இங்க அதெல்லாம் இல்லியா”...என்றார்...

அதுன்னா...

அதாம்பா அது...

அடேய் பெரிய மனுசா...67 வயசுல ஏன்யா இப்படி...என்று நினைத்துக்கொண்டு..

சார் எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்ல...குடி தவிர வேற கெட்ட பழக்கம் கிடையாது என்றேன்...

ஹாஹா என்று சிரித்தவர்...எனக்கு வேணுமே என்றார்...

என்னடா இது வம்பா போச்சி...சரி இருய்யா என்று மூன்று நட்சத்திர ஓட்டல் நடத்தும் நண்பருக்கு ஃப்போனை போட்டேன்...அவரும் யோவ் இங்கன இம்புட்டு நாளா இருந்துகிட்டு இது(!!!) கூட தெரியலியே என்று அந்த விடுதியின் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பினார்...(என்ன எழவுடா இதெல்லாம் ஒரு பொழப்பு!)

அங்கு செல்லும் போதே நேரம் இரவு 11யை கடந்து இருந்தது...அங்கு உள்ளே சென்றதும்..

ஒரு வட்ட வடிவ நீண்ட O வடிவ அமைப்பில் பலர் அமர்ந்து இருந்தனர்...

அட பார் தானே என்று நினைத்துக்கொண்டு போய் அமர்ந்தேன்...அவருடன்...

விலைப்பட்டியல் பார்த்த போது தலையய் சுற்றியது...என்னடா இது இம்புட்டு விலையா...என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே...அந்த புண்ணியவானே ஆர்டர் செய்து விட்டார்...ரெண்டு கப்...!

திடீரென்று வண்ண விளக்குகள் விட்டு விட்டு எரிய ஆரம்பித்தன...5 பெண்கள் அரை ஆடைகளுடன்(!) வந்து அந்த O வடிவ அமைப்பின் நடுவில் இருந்த மூன்று கம்பிகளை தழுவிக்கொண்டு ஆடலானார்கள்...

“அடங்கப்பா சாமீ...இது என்னடா புது ஆட்டமா இருக்கு என்று வாயை பிளந்து கொண்டு பாமர தொனியில் பார்க்கலானேன்...(தூ...டேய் டேய் இங்கு வந்தது சரியா தவறா என்று என் அறிவு பட்டி மன்றம் நடத்திக்கொண்டு இருந்தாலும்...!.. ஏற்கனவே ஒரு முறை பெல்லி நடனம் பாக்க போயி வீட்ல கழுவி ஊத்துனாங்களே...மறந்து பூட்ச்சாடான்னு நெனைச்சிக்கிட்டே!)

இதுதான் பேரிக்கா ஸ்டைல் நடனமாம்...ஆடிக்கொண்டே வந்தவள் திடு திப்புன்னு ஆடைய தூக்கி போட்டு நின்றாள்...விளக்குகள் அணைந்தன...மீண்டும் வெள்ளை விளக்குகள் உயிர் பெற்ற(!) போது அப்படி ஒரு நடனம் அங்கு நடந்ததற்க்கான அறிகுறியே இல்லை...

சரிய்யா நேரம் ஆச்சி கெளம்புவோம்னு சொல்லும் போது...40 வயது மதிக்கத்தக்க பெண்(!) வந்திருந்த பெரிய மனுசனுடன் உரையாடினாள்...அவரும் தலையய் ஆட்டிக்கொண்டே அவள் பின் செல்ல முற்பட்டார்...

யோவ் எங்கயா போறே...

நீ என் பின்னாடியே வா என்று கூட்டி போனார்...அங்கன பல பெண்கள் அரை நிர்வாணத்துடன் உட்கார்ந்திருந்தனர்...என்னமோ இந்த துணில எது பிடிச்சிருக்குதுன்னு கேக்கற மாதிரி அந்த பெண் கேட்க...இவரும் ஒன்னை சுட்டிக்காட்டி சொல்ல...

நான் அய்யா சாமீ...நீ எல்லாம்(!) முடிஞ்சதும் கீழ இறங்கி வந்தா டாக்ஸி கிடைக்கும்...அங்க நீர் தங்கி இருக்கும் ஹோட்டல் கார்டை காட்டினால் அங்கு கொண்டு விட்டு விடுவார்...என்றேன்...

என்னப்பா உனக்கு என்றார்....

சாமீ ஆள விடு...நானும் இங்கு இம்புட்டு நாளா இருக்கேன்...இங்கெல்லாம் வந்தது இல்ல...என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு ஓடி வந்தேன்...

சாப்பிடும் உணவுக்கு $2 அதிகமாக போய் விட்டது என்று கோவித்துக்கொண்ட அந்த கோடீஸ்வரர்(!)....அந்த விடுதியில் இழந்தது $300...பணம் மட்டும் அல்ல...!

கொசுறு: இது எமது அனுபவம்...தங்களின் கருத்தை முடிந்தால் இட்டு செல்லுங்கள்...

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

5 comments :

 1. விக்கி மாம்ஸ்..

  I was the designated driver for my friends for all these when I was kind of single...

  Looks like all men are dogs except you and me....-:)

  ----------------

  You have not fixed this yet....?


  Regarding the popup ...

  First backup your template...

  Then go to

  Template ----> Edit Html ---->
  Expand Widgets

  Search for...(CTRL F)
  googlecode.com

  Remove the code starting from

  -- < script (the first one above googlecode.com)

  ....googlecode.com.....

  till you reach the first
  --- < / script>


  ReplyDelete
 2. அந்த விடுதியில் இழந்தது பணம் மட்டும் அல்ல...
  என்பது மிகவும் உண்மையே மாம்ஸ்...

  ReplyDelete
 3. நீங்களும் என்னை மாதிரி அப்பாவியா இருக்கிறீர்களே

  ReplyDelete
 4. Eqozhudum vizhippunarvodu irungal sabalam sangadatil azhti vidum

  ReplyDelete
 5. அந்தாளு அட்ரஸ் கேட்கும்போதே நீங்க கெளம்பி இருக்கணும்... ஆர்வ குறுகுறுப்பில் கடைசி லெவல் வரைக்கும் போயிட்டு பச்சபுள்ள மாதிரி பொலம்புறத பாரு :)

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி