அலுவலகம் Vs வீடு = மன அழுத்தமா!


வணக்கம் நண்பர்களே...தங்களை மீண்டு(!)ம் சந்திப்பதில் மகிழ்ச்சி....

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் நகர்ப்புற மக்கள் ஆண் பெண் பேதமில்லாமல் வேலைக்கு செல்லும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்...அதுவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையவும்...முடிந்த வரை சந்தோஷ வாழ்வுக்கும் இரட்டிப்பு வேலை வாய்ப்பு தேவைப்படுகிறது..

பல நாட்களாக கவனித்து வந்ததில் எமது நண்பர் வட்டத்தில சிலர் சிறிய வயதில்...அதாவது 40 வயதுக்குள்ளேயே மரணத்தை தழுவி வருகின்றனர்...அவர்களின் வேலை விற்பனை சம்பந்தப்பட்ட மற்றும் மீடியா வகைகளை சார்ந்ததே...

இதில் மன அழுத்தம் மிகுந்து காணப்படுவதாக சொல்கின்றனர்...இவை தவிர அனைத்து வேலைகளிலும் மன அழுத்தம் காரணமாக கெட்ட பழக்க வழக்கங்கள் அதிகமாகி(!) உயிர்ப்பலி ஏற்படும் அளவுக்கு செல்கிறது...இதில் பாதியளவு மன அழுத்தம்....வேலை சம்பந்தப்பட்டது என்றாலும்...வீட்டிலும் மிகப்பெரிய அளவில் கணவன் மனைவி இடையே சண்டைகள் அனுதினம் நடந்தவாறு இருக்கிறது...


இருவரும் பட்டதாரிகள் என்று இருக்கும் குடும்பங்களில்(!) ஏன் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அதிகம் வருகின்றன...

”தான்” எனும் எண்ணமே காரணம்...அது ஆணாகட்டும் பெண்ணாகட்டும்...ஒருவர் பேசும்போது அதில் என்ன விசயம் இருக்கிறது...சரியா தவறா என்று ஆராய்வது குறைந்து விட்டது...அவரை பேச விடாமல் தங்களின் இருப்பை இரு பாலாரும் பதிய வைக்க முயற்ச்சிப்பதே மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது...

இக்கால கட்டத்தில்...அலுவலக பிரச்சினைகளை வீட்டில் விவாதிப்பது என்னைப் பொறுத்தவரை சரியாகப்படவில்லை...அப்படி வீட்டில் விவாதித்து அது வேறு வடிவம் எடுத்து இருவரையும் குறி பார்க்கும் என்பது எமது தாழ்மையான கருத்து...

அலுவலகத்தில் பிரச்சினை என்று வீட்டுக்கு வந்தால் வீட்டிலும் ”இது சரியில்ல...அத ஏன் கவனிக்கல” என்று ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்த முற்படுகின்றனர்...இதற்க்கு காரணம்...அலுவலகத்தில் தம்மை குத்திக்கிழித்தவரை எதிர்த்து தாக்க இயலாத நடைமுறையினால்(!) அந்த கோபத்தை மற்றும் இயலாமையை வீட்டில் காட்டி மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம்...


முடிந்த வரை அலுவலக விசயங்களை வீட்டிற்கு வரும் முன் செருப்பை கழட்டி விட்டு வருவது போல் வாசலிலேயே விட்டு வந்தால் பல வீடுகள் அன்புடன் நீண்ட நெடுகாலம் பயணிக்கும் என்பது எமது தாழ்மையான பார்வை...முயற்ச்சிப்போமே...தங்களின் கருத்துக்களையும் முடிந்தால்...நேரமிருந்தால் பதியுங்கள்...

கொசுறு: மிக நெருங்கிய நண்பர்களை இழந்ததால் தோன்றியது...நேரம் இருக்கும் போது எதாவது ஒரு விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்...உலகை அந்த நேரம் மறக்க செய்யும் அற்புதமே விளையாட்டு...மீண்டும் மிகுந்த புத்துணர்ச்சியுடன் எழுவீர்கள்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

8 comments :

 1. //முடிந்த வரை அலுவலக விசயங்களை வீட்டிற்கு வரும் முன் செருப்பை கழட்டி விட்டு வருவது போல் வாசலிலேயே விட்டு வந்தால் பல வீடுகள் அன்புடன் நீண்ட நெடுகாலம் பயணிக்கும் //

  அலுவலக விஷயங்களை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன் மறக்கவேண்டும். நன்றி...

  ReplyDelete
 2. ஸ்கூல் பையன் said...
  //முடிந்த வரை அலுவலக விசயங்களை வீட்டிற்கு வரும் முன் செருப்பை கழட்டி விட்டு வருவது போல் வாசலிலேயே விட்டு வந்தால் பல வீடுகள் அன்புடன் நீண்ட நெடுகாலம் பயணிக்கும் //

  அலுவலக விஷயங்களை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன் மறக்கவேண்டும். நன்றி...

  >>>>

  நண்பரே தாங்கள் விற்பனை வேலையில் இருந்தால் புரியும் என்று நினைக்கிறேன்..ஞாயிறு கூட டார்கெட் எனப்படும் சொல் வைத்தே கொல்வார்கள்...அதனால் இது 8 மணி நேர அலுவலக ஆட்களுக்கு 25% பொருந்தும்...புரிதலுக்கு நன்றி!

  ReplyDelete
 3. தங்களின் பார்வை சரியே...

  சில நண்பர்கள், அதை தீர்க்கும் வழி தெரியாமல், வேறு கெட்ட வழிகளுக்கு செல்ல முயன்று... பழக்கம் வழக்கமாகி... விரைவில் போய் சேர்வதுண்டு... தவறு யார் மேல்...? எது மேல்...?

  ReplyDelete
 4. நானும் விற்பனைத் துறையில்தான் இருக்கிறேன். எனது வேலை நேரம் முடிந்ததும் ஒரு நொடி கூட வேலை செய்யும் இடத்தில் இருக்க மாட்டேன் சில சமயங்களில் சில கஸ்டமர்கள் அதிக நேரம் எடுத்து கொள்வார்கள் அப்போது என் வேலை முடியும் நேரமாக இருந்தால் நான் கஸ்டமரிடம் bye சொல்லி விட்டு கிளம்பிவிடுவேன் ஒரு நொடி கூட தாமதிப்பதில்லை அதனால் நான் பல சேல்களை இழந்து இருக்கிறேன். விற்பனையை நாந்தான் இழப்பேன் ஆனால் கம்பெனி இழக்காது காரணம் அடுத்துள்ள சேல்ஸ்மேன் அந்த விற்பனையை முடித்துவிடுவான் . நான் இழப்பதால் எனது வருமானம் குறையும் காரணம் எங்கள் வருமானம் கமிஷன் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. பொருளை விற்றால் மட்டும்தான் கமிஷன் இல்லையென்றால் ஒன்றுமில்லை நாங்கள் வேலை பார்க்க்கும் ஒவ்வொரு நொடியும் டென்ஷந்தான். எங்களுக்கு பிரச்சனை போட்டி கம்பெனிகளும் அவர்களின் விலையும் மட்டுமல்ல எங்களுடன் பல்லாண்டுகளாக உடன் புரியும் சேல்ஸ்மேன்களும்தான். நாங்கள் விற்றால்தான் வருமானம் என்பதால் ஒவ்வொருத்தவரும் ஒன்றாக சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும் வேலை நேரத்தில் கண்கள் கண்கொத்தி பாம்பாக சுழன்று கொண்டிருக்கும் எல்லைபடையில் வேலை செய்பவர்களாது சில நிமிடங்கள் கண்னை சிமிட்டுவார்கள் ஆனால் நாங்கள் கண்னை சிமிட்டக்கூட பல முறை யோசிப்போம் காரணம் நாங்கள் கண்ணை சிமிட்டும் நேரத்தில் கஸ்டமர் யாரவது வந்து வேறு ஒருவன் தட்டிக் கொண்டு போய்விடக்கூடாதே என்றுதான். எங்களது விற்பனையை Sales per hour என்ற முறையில் கணக்கிடுவார்கள். அது குறைந்தால் வறுத்து எடுப்பாரகள். இந்த மீட்டிங்க் தினசரி நடக்கும் அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 மணி நேரம் இந்த வறுத்து எடுக்கும் மீட்டிங்கும் நடக்கும் பிரஷர் பிரஷர்தான் எப்போதும் இப்படி இருந்த போதிலும் நான் எல்லாவற்றையும் மிக எளிதாக எடுத்து கொண்டு குடும்பந்தான் முக்கியம் என்று டென்ஷன் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதை எதற்காக இவ்வளவு விரிவாக சொல்லி இருக்கிறேன் என்றால் எனது வேலைநேரம் முடிந்த நொடியில் வேலையில் வரும் பிரச்சனைகளையும் அங்கேயே வைத்து விட்டு கிளம்பிவிடுவேன். அதுமட்டுமல்லாமல் வேலை நேரம் முடிந்தது வீட்டிற்கு வந்த பின் எந்த வித ஆபிஸ்கால்களையும் அது எவ்வளவு முக்கியமாக இருந்தாலும் அட்டெண்ட் செய்வதில்லை

  வார இறுதியில்சனிக்கிழமை இரவு நண்பர்கள் குடும்பத்தை டின்னருக்கு எனது வீட்டிற்கு அழைத்துவிடுவேன் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவேன் குடும்பதாருடன் ஞாயிற்று கிழமை முழுவதும் குடும்பத்தாருக்கு மட்டுமே...

  அவ்வளவுதாங்க....நான் செய்வது மற்றதை எல்லாம் கடவுள் கவனித்து கொள்வார் என்று நம்பி வாழ்க்கையை நடத்துகிறேன் ஒரு கவலையும் இல்லாமல்

  ReplyDelete
 5. சரியான விஷயம்தான் மாப்ளே. எல்லாரும் மன இறுக்கத்தை விடுவிக்கும் வழிமுறைகளோடு வாழ பழகிக்கனும்.....

  ReplyDelete
 6. @திண்டுக்கல் தனபாலன்
  திண்டுக்கல் தனபாலன் said...
  தங்களின் பார்வை சரியே...

  சில நண்பர்கள், அதை தீர்க்கும் வழி தெரியாமல், வேறு கெட்ட வழிகளுக்கு செல்ல முயன்று... பழக்கம் வழக்கமாகி... விரைவில் போய் சேர்வதுண்டு... தவறு யார் மேல்...? எது மேல்...

  >>>>>>

  வருகைக்கு நன்றி...வாழ்க்கையின் தேடலில் கிடைக்கும் ஏமாற்றம்...

  ReplyDelete
 7. @Avargal Unmaigal

  வருகைக்கு நன்றி நண்பரே....தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி...வீட்டிலும் தொலைபேசியில் கொல்லும்(!) பாஸ்கள் இருக்கிறார்கள்...சொந்த அனுபவம்...ஆஃப் செய்தால் வேலை போயிடும் நண்பா!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி