பிரிவு பிறப்பதில்லை...உருவாக்கப்படுகிறதா!

வணக்கம் நண்பர்களே...இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களின் சொற்கேட்டு நடக்கும் பிள்ளைகள் குறைவு...அதுவும் திருமண விசயத்தில் என்பது யதார்த்தமாகிப்போய்க்கொண்டு இருக்கிறது...இருந்தாலும் இப்போதும் சில பிள்ளைகள் பெற்றோரின் சொல் படி நடந்தும்...

அந்த இளைஞ்சன் முடித்தது எஞ்சினியரிங்க்...படிக்கும் காலத்திலே ஹாஸ்டலில் தங்கி படித்து வந்து இருக்கிறான்...எப்போதும் படிப்பு படிப்பு என்று இருந்து இருக்கிறான்...சின்ன சின்ன ஆசைகளையும் தவிர்த்து விட்டு தன் தாய் தகப்பனின் விருப்பத்தையும் தன் இஷ்ட படிப்பையும் சரியாக முடித்திருக்கிறான்..

வேலை கிடைத்து வாழ்க்கை பயணம் ஆரம்பம்...24 வயதில் திருமணம்..பெண்ணுக்கு 23 வயது...

அந்த பெண் வீட்டில் கேட்கும் முன்பே...இவன் வீட்டில் சொல்லி விட்டார்கள்...எங்களுக்கு சீர் செனத்தி எதுவும் தேவையில்லை...பெண் படித்தவள் பண்பானவள் என்பதே போதும் என்றார்கள்...

திருமணத்தையும் மணமகன் வீட்டாரே செலவு செய்து நடத்திக்கொண்டனர்...அனைவரும் சென்று வாழ்த்து சொன்னார்கள்...

”ஏய் பையன் நல்ல பையனா இருக்காப்ல...மாமா மாமி எல்லோருமே ரெம்ப அன்பானவங்களா இருக்காங்க...உனக்கு நல்ல சந்தோசமான வாழ்க்கை அமைஞ்சிருக்கு மகிழ்ச்சியாக்கி கொள்” என்றனர்...

மருமக பெண் படித்த பெண் என்பதில் மிக பெருமை அந்த விவசாய குடும்பத்திற்க்கு...வீட்டுக்கு வந்த மருமகளை மகளாகவே பார்த்தனர்..ஒரு வேலை செய்ய விடாமல் மாமியே எல்லாவற்றையும் பார்த்து கொண்டாள்...

சென்னையில் வேலை...வீடு 80கிமீ தொலைவில் இருந்த போதும்...தினமும் சென்று வரலானான்...காலையில் அவன் செல்வதோ 6.30க்கு அந்த அதிகாலையில்(!) எழுந்து கணவனை வழியனுப்ப முடியவில்லை அந்த பெண்ணுக்கு...இது 3 மாதங்களாக தொடர்ந்திருக்கிறது...8 மணிக்கு எழுந்து வந்து மாமி கொடுக்கும் காபியய் ருசித்துக்கொண்டு ஆரம்பிக்கும் நாள் இரவு சீரியல்கள் முடியும் வரை தொடர்ந்திருக்கிறது...மகனின் அறையில் மட்டுமே ஃப்பேன் போட்டு இருந்த வீடு இப்போது ஏசி முதற்கொண்டு எல்லாவற்றையும் மகனின் அறையில் மருமகள் வந்து விட்டதால் செய்து கொடுத்து இருந்தார்கள்...(இன்வெர்ட்டர் உற்பட!)

எந்த வேலையும் நான் செய்கிறேன் கொடுங்கள் என்று கேட்கவே இல்லை மாமியிடம்...

கொஞ்ச நாள் கழித்து...கணவன் மனைவியிடம் ”என் தாய்க்கு 50 வயதுக்கு மேலே ஆகிறது...எல்லா வேலையும் அவளே செய்கிறாள் நீ எனக்கு காபி கூட கொடுக்க மாட்டேங்கறியே” என்றதற்க்கு...


”உங்க மாட்டுக்கார குடும்பத்துக்கு படிச்ச பொண்ணு கெடைச்சதே பெரிய விசயம்...என்னையும் சாணி அள்ள சொல்றீங்களா” என்றாள்...

அதிர்ச்சியாகி போய் விட்டான் கணவன்...இவளை நான் எப்போது சாணி அள்ள சொன்னேன்...வீட்டில் இப்படி சோம்பேறியாய் இருப்பது தவறு என்று தானே சொன்னேன் என்று தலையில் அடித்து கொண்டான்...

காலங்கள் உருண்டது அவளும் கர்ப்பமானாள்...அவள் தாய் வீட்டில் ஃப்போனில் விசாரித்ததோடு சரி...நேரடியாக வர வில்லை....கர்ப்ப காலத்தில் ஆகும் செலவுகள் அத்தனையும் கணவன் வீடே ஏற்றது...தன் மகனின் வாரிசு வரப்போகிறது என்பதால் மாமி அவளை அலுங்காமல் பார்த்து கொண்டாள்....இருப்பினும்...தினமும் நடைப்பயிற்சி செய்யம்மா உடலுக்கு நல்லது என்றதற்க்கு...

படிக்காத இவர்களுக்கு என்ன தெரியப்போகிறது என்று மனதில் நினைத்துக்கொண்டு ஏதும் சொல்லாமல் அமைதியாக தான் உண்டு சீரியல் உண்டு என்று இருந்தாள்...

பிரசவத்திற்க்கு சென்னைக்கு கூட்டி சென்றார்கள்...அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தையும் பிறந்து விட்டது...

கணவன் சொன்னான்...”மூன்று மாதத்தில் நான் வெளிநாடு போகிறேன்...நீ அடுத்த மூன்று மாதத்தில் வந்து விடு” என்று...

”வெளிநாடு செல்ல வேண்டியது இல்லை...அங்கு சென்றால் என்னால் சமைச்சு போடல்லாம் முடியாது” என்றாள்...


இப்படியே இரு என்று தாய் வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டான்...தாய்வீட்டில் அறுவை சிகிச்சைக்கு இவ்வளவு செலவாகிவிட்டது என்ற புலம்பலைத்தவிர அன்பு கிடைக்கவில்லை...மனதுக்குள் அழுது கொண்டு இருக்கிறாள்...கைக்குழந்தையுடன்..அவள்...

கொசுறு: காலம் நமக்கு கொடுக்கும் மிகப்பெரிய கொடை அன்பானவர்கள்...அவர்களை தவறவிட்டால்...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

8 comments :

 1. இப்படியும் சில கொழுப்பு நிறைந்த பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், காலம்தான் அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கவேண்டும்....!

  அன்புக்கும் ஒரு அளவு உண்டா இல்லையா அதுவும் இந்த காலத்தில்...?

  ReplyDelete
 2. இந்த காலத்தில் கூட இப்படியும் இன்னும் படித்த பெண்கள் இருப்பார்களா என்று நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது

  ReplyDelete
 3. காலம் நமக்கு கொடுக்கும் மிகப்பெரிய கொடை அன்பானவர்கள், அவர்களை தவறவிட்டால், கேள்விக்குறிதான்... வேறென்ன சொல்லமுடியும், படிப்பு மட்டுமே வாழ்வதற்கான அறிவைத் தராது என்பதை காட்டிவிட்டார் இந்த சகோதரி...

  ReplyDelete
 4. பாடப்புத்தகங்களைப் படித்தவள் வாழ்கையை படிக்கவில்லை. அது சரி விக்கி அன்ன நீங்களாவது சொல்லிக்கொடுத்திருக்கலாமே???!!!

  ReplyDelete
 5. வாழத்துடிக்கும் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைவதில்லை.கிடைக்கும் வாழ்க்கையை கோட்டை விடும் சில அறிவிலிகள்!

  ReplyDelete
 6. இது போல் (திமிர் என்பது) புரியாமல்... தவிர்க்காமல்... பிறகு கஷ்டப்படுபவர்கள் பல பேர் இருக்கிறார்கள்...

  ReplyDelete
 7. படித்த படிக்காத பெண்கள் யாராக இருந்தாலும் புகுந்த வீட்டினரை எதிரியாக பார்க்கும் மனோபாவம் பரவலாக இருக்கிறது.

  மாமியாரை தன் தாயை போல் நேசித்தால் மட்டுமே அங்கே நிம்மதி நிலவும். அன்பு செய்வது எப்படி என்பதும் மறந்து விட்டது.

  இவரை போன்ற பெண்கள் பட்டு திருந்துவார்கள்...

  குடும்ப உறவுகளை பற்றி தொடர்ந்து எழுதும் உங்களுக்கு என் பாராட்டுகள் விக்கி.

  ReplyDelete
 8. உறவுகளின் அருமை பிரிவில்தான் தெரியும்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி