திரும்பி பார்க்கிறாள்....!

வணக்கம் நண்பர்களே...அவள் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள்...சிறு வயதிலேயே கொஞ்சம் உடனே முடிவு எடுக்கும் பழக்கம் உடையவள்...வீட்டிலோ வறுமை...இரு இளையவர்கள் வேறு...தந்தைக்கு திடீரென்று ஏற்பட்ட விபத்தில் மருத்துவமனை வாசம் ஆகிவிட்டார்...குடும்பமோ கூட்டுக்குடும்பம் என்பதால் முடிந்த வரை தாத்தனும் பாட்டியும் உதவினர்...அவர்களின் வீட்டில் அடைக்கலமானார்கள் அவளின் குடும்பம்...

மாமனார் வீட்டில் அடைக்கலம் புகுந்த மாப்பிள்ளைக்கும் அவர் தம் பெண் பிள்ளைகளுக்கும் என்ன மதிப்பு கிடைக்குமோ(!) அவை தவறாமல் கிடைத்தது...

அந்த கூட்டு குடும்பத்தில் தாத்தாவின் மற்ற பிள்ளைகள் வரும்போது...அனைத்து வேலைகளும் வந்தேரிகளாகிப்போன இவர்களின் தலையிலேயே விழலாயின...அதிலும் இவள் எப்போதும் தன்னை வருத்திக்கொள்ள விரும்பாததால்(!)...வேலைக்கு செல்கிறேன் என்று தேடலானாள்...

கிடைத்தது வேலை...கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளலானாள்...மற்ற இரண்டு சகோதரிகளும் படித்தது முறையே 8 வது மற்றும் 10 வது வரையே...ஆனால் மூத்தவளான இவளை மட்டும் அந்த கஷ்டத்திலும் 12 வரை படிக்க வைத்து இருந்தனர் அந்த ஏழை பெற்றோர்...பின் வேலைக்கு சென்று கொண்டே அஞ்சல் வழியிலும் கற்கலானாள்...

தனக்கு கிடைக்கும் சம்பளப்பணத்தில் ஒரு பகுதியை குடும்பத்துக்கு கொடுத்து வந்தாள்...மற்ற இரு பெண்களும் கடினமான வேலைகளில் இயங்கினர்...அதுவும் மேல்நாடுகளுக்கு துணி தைத்து கொடுக்கும் வேலைகளில் தையல்காரர்களாக(!)...அவ்வளவு கஷ்டப்பட்டாலும் தமது சம்பளத்தை அந்த குடும்பத்தில் முழுவதுமாக கொடுத்து உயர்த்த பார்த்தனர்...

முதல் பெண் தன்னுடைய வேலை மிக கடினம் இல்லை என்றாலும்...அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்...மிகவும் கஷ்டப்படுவதாக காட்டிக்கொண்டாள்...உண்மையான சம்பளத்தையும் வீட்டில் சொல்ல வில்லை...தனக்கான துணிமணிகளையும் அலங்கார பொருட்களையும் வாங்கி வைத்துக்கொண்டாள்...

அந்த தந்தை கொஞ்சம் தேறி வந்தார்...அவர் மீண்டும் வேலைக்கு செல்லலானார்...வீட்டில் தனக்கு ஏற்படும் அவமானத்தை தன் குழந்தைகளுக்காக பொறுத்துக்கொண்டார்...பெண் பிள்ளைகளுக்கு எப்படி திருமணம் செய்வது என்பதை யோசிக்கலானார்...ஒவ்வொரு பெண்ணின் பேரிலும் வங்கியில் கணக்கு வைத்து அவர்களின் சம்பளப்பணத்தில் ஒரு பங்கை போட்டு வர சொன்னார்...பின் அதை வைத்து தோடு முதல் அவசியமான பொருட்களை அவர்களின் திருமணத்துக்கு வாங்கி வைத்து கொள்ளச்சொன்னார்...

அந்த காலக்கட்டத்தில் மூத்தவள் வீட்டில் செய்யும் உணவை புறக்கணிக்கலானாள்...சிறு வயது முதலே அவளின் உணவுப்பழக்கம் வித்தியாசமானது...வீட்டில் செய்யும் உணவை நேரத்துக்கு உண்பதும் கிடையாது...முடிந்தவரை வெளியில் சாப்பிட்டுக்கொள்வது அதுவும் சத்தானதாக இருக்காது...

ஒரு நாள் தந்தையிடம் கேட்டாள் “ நான் படித்தவள்...நீங்கள் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி திருமணம் செய்து வைக்கப்போகிறீர்கள்...எனவே நானே ஒருவரை தீர்மானித்து விட்டேன்...நீங்கள் ஆசி கூறினால் போதும்” என்றாள்...


தந்தையோ...உனக்கு பின் இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்...அவர்களின் எதிர்காலம் மிக கஷ்டப்படும்...கொஞ்சம் பொறு...நான் அவ்விருவருக்கும் முடித்து விடுகிறேன்..ஏனெனில் அவர்களுக்கு பெரிதாக தேட வேண்டியதில்லை..ஆனாலும் கொஞ்ச காலம் ஆகும் என்றார்...

அதை பொருட்படுத்தாது சண்டையிடலானாள்...உடனே நடக்க வேணும் என்று கூறி தான் காதலித்தவரை பெற்றோருடன் வீட்டுக்கு வர செய்தாள்...அவர்களும் வந்து பேசி முடித்தனர்...அந்த மாப்பிள்ளை எந்த பணமும் வேண்டாம் நானே எல்லாம் பார்த்துக்கொள்கிறேன்...திருமணம் மட்டும் உங்கள் செலவு என்று சொல்லிவிட்டார்...திருமணம் நடந்து முடிந்தது...

அன்றிலிருந்து பெற்றோரை மறந்தாள்...தனி குடித்தனத்தில் மாமனார்...மாமியாரை சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று கூறி அவர்களை அவர்களின் சொந்த ஊரிலேயே இருக்கச்செய்தாள்...மனைவியின் சொற்படி கேட்ட கணவன்...தாய் தந்தையை மறந்தான்..வருடத்துக்கு ஒரு முறை மட்டும் பார்க்க சென்றான்..

கொஞ்ச கொஞ்சமாக பணத்தில் முன்னேறி ப்ளாட் வாங்கினர்...கார் வாங்கினர்...சமுதாயத்தில் முன்னேறியதாக வாழத்தொடங்கினர்...

அந்த ஏழை தந்தை தன்னால் இயன்ற வரை இரு பெண்களுக்கும் மிக சாதாரண முறையில் திருமணம் செய்து வைத்தார்...அத்திருமணத்துக்கும் ஒரு விருந்தாளியாக வந்து சென்றாள்...மூத்தவள்..! எங்கே தொடர்பு அதிகப்படுத்திக்கொண்டால் உதவி கேட்பார்களோ என்று நினைத்தாள்....இருப்பினும் தன் மகப்பேறு நேரத்துக்கு மட்டும் தாயை அழைத்தாள்...அந்த ஏழைத்தாயும் எதையும் பொருட்படுத்தாது...தன் கடமையை செவ்வனே செய்து முடித்து சென்றாள்...


கொஞ்ச காலம் போனது...அந்த மூத்தவளுக்கு கால் மூட்டுகள் வலுவிழந்தது..படுத்த படுக்கையானாள்...குழந்தையை கவனிக்க ஆள் இல்லை..எவரும் உதவிக்கு வரவில்லை...மருத்துவமனை வாசம் நெடு நாள் எடுத்துக்கொண்டது...அழகு அவளை விட்டு சென்று கொண்டு இருந்தது...அவள் வசம் ப்ளாட் மட்டும் இருந்தது...கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு வீட்டுக்கே வருவதில்லை...குழந்தையை போர்டிங்க் ஸ்கூலில் சேர்த்து விட்டான்...மாத பணமாக சில ஆயிரங்கள் மட்டும் அனுப்பலானான்...

இன்று தனியாக எழுந்து சென்று தன் அன்றாட விசயங்களைக்கூட செய்து கொள்ள திணறிக்கொண்டு இருக்கிறாள்...

கொசுறு: சுய நலம் மட்டுமே வாழ்கை என்று நினைப்பது என்பது...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

5 comments :

 1. என்னதான் நம் நிலமை உயர்ந்தாலும் யாரையும் தூக்கி எறிந்து பேசக் கூடாது முக்கியமாக சுயநலம் அதிகம் இருக்க கூடாது இல்லையென்றால் இப்படித்தான்

  ReplyDelete
 2. சுயநலம் அழிவின் முதல்படி. .

  நல்ல கருத்துக்கள். .

  ReplyDelete
 3. இன்றைக்கும் பல இடங்களில் நடக்கிற உண்மை... (வேறு விதமாக)

  பலருக்கு உடனே புரிவதில்லை... (பணம் செய்யும் மாயம்) பட்டால் தான் பலருக்கும் புரிகிறது...

  சுயநலம் = நரகம்...

  ReplyDelete
 4. கொஞ்சம் பணத்தை பார்த்தவுடன் தலை கால் புரிவதில்லை.எல்லாவற்றிக்கும் பணத்தில் தீர்வு இல்லை.

  ReplyDelete
 5. என்ன செய்வது தனித்தீவு போல போய் பின் கானாமல் போவது மாம்ஸ்§

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி