காதல் என்ன கண்ண மூச்சி ஆட்டமா..!

வணக்கம் நண்பர்களே...காதல் ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் தொட்டு செல்கிறது என்பதை உணர்ந்தவர்கள் சிலரே....எமது நட்பு வட்டத்தில் தழுவிச்சென்ற விடயங்களை இங்கு பகிர்கிறேன்...

அவன் பின் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறான்...

முன்னே சென்று கொண்டு இருக்கிறாள் அப்பெண்...அவள் திரும்பி பார்க்காமலே சென்று கொண்டு இருக்கிறாள்...

கொஞ்ச நாட்களுக்கு முன்:

ஏன்டா மச்சி உனக்கு லவ்வர் இருக்காளா...

இல்லயே ஏன்...

என்னடா நம்ம க்ரூப்லயே லவ்வர் இல்லாத ஆளு நீதான்...ஏன் ஒரு பொண்ணும் உன்னைய லவ் பண்ணாதா....

நான் ட்ரை பண்ணலடா...

ஹாஹா...அதாவது உனக்கு வக்கு இல்ல...காதலி இருந்தா தான்டா கெத்தே...இல்லன்னா ஒரு பய மதிக்க மாட்டான்...ட்ரை பண்ணு...இல்ல ரெம்ப கஷ்டம்...

ம்ம்...(அன்று முடிவு செய்தான்...ஒரு பெண்ணையாவது(!) தன்னை விரும்பும் படி செய்து விடுவது என்று...சுற்றிலும் ஆண்..பெண் என்ற அன்பு வட்டங்கள் இருந்தாலும்...எந்த பெண்ணிடமும் அவனுக்கு காதல் வந்ததில்லை...தேடத்துவங்கினான்...கண்ணுக்கு தெரியாத காதலியை!..)

இன்று...

டேய் மச்சி இங்க எங்கடா போயிட்டு இருக்க...வா பைக்ல ட்ராப் பண்றேன்...

இல்லடா...நீ போ...

என்னடா...விசயம் சொல்லு...

இல்லடா அந்தா போறா பாரு...அவ கிட்ட பேச ரெம்ப நாளா ட்ரை பண்றேன் முடியல...

யாரு அந்த பொண்ணா..டேய் என்னடா ஆச்சி உனக்கு எவ்ளோ குண்டா இருக்கா...ஒரு பய பின்னாடி சுத்த மாட்டானேடா...என்னடா உன் லவ்வு...

இல்ல மச்சி எனக்கு அவளத்தான் புடிச்சிருக்கு...ஆனா அவகிட்ட பேச கூச்சமா இருக்கு...

டேய் வா போய் பேசிடுவோம்...அதோ அந்த ஐஸ்க்ரீம் பார்லர்ல உக்காந்து இருக்கா பாரு...

ஆரம்பம்....

ஹாய்...

யாரு நீங்க..எனக்கு எதுக்கு ஹாய் சொல்றீங்க...

நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்...பர்சனலா..

எங்கிட்டயா என்ன விசயம்...உங்களை எனக்கு யாருன்னே தெரியாது...எங்கிட்ட என்ன பேச வேண்டி இருக்கு...

என்னங்க கிட்ட தட்ட 3 மாசமா உங்க பின்னாடியே வந்துட்டு இருக்கேன்...

அப்படியா...சரி என்ன பேசனும்..

நான் உங்கள விரும்பறேன்...அத சொல்லத்தான் வந்தேன்..

ஹாஹா...என்னை கிண்டல் பண்றீங்களா...கெளம்புங்க...எனக்கு தெரியும் நீங்க கிண்டல் பண்றீங்கன்னு...ஏற்கனவே என்னை பலர் குண்டு...பூசணிக்கான்னு கிண்டல் பண்ணுவாங்க...பழகிப்போச்சி...இப்ப நீங்க புதுசா இப்படியா என்று சிரித்தாள்..

ச்சே என்னங்க இப்படி சொல்லிட்டீங்க நான் கிண்டலுக்கு சொல்லலீங்க...உண்மையாத்தான்...

அப்படியா...அப்படியே இருக்கட்டும்...நான் கெளம்பறேன் எனக்கு வீட்டுக்கு போகனும் நேரம் ஆச்சி....

அப்ப நாளைக்கு கிண்டில மீட் பண்ணுவோமா...உங்கள தினம் அங்க ரெயில்வே ஸ்டேசன்ல மதியம் பார்ப்பேனே...

ஓ...சரி நாளை மீட் பண்ணுவோம்...

அவள் சென்று கொண்டு இருந்தாள்...

டேய் லூசு...உனக்கு கண்டிப்பா வேற பொண்ணு கிடைக்கும்டா ஏன்டா இப்படி!

டேய் மாப்ள...இவளைதான்டா எனக்கு புடிச்சிருக்கு...காரணம்லாம் சொல்ல தெரியல...


எப்படியோ ஒழிஞ்சி போ...

அடுத்த நாள் கிண்டி...

எப்படி இருக்கீங்க...

நலமா இருக்கேன்...சொல்லுங்க என்ன மறுபடியும் கிண்டல் பண்ண போறீங்களா...

ஏங்க என்னைய புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்க...

இன்னொரு பெண் அங்கு வந்தாள்...

ஏய் மிஸ்டர் என்ன உங்களுக்கு ப்ராப்ளம்....ஏன் என் அக்காவ டிஸ்டர்ப் பண்றீங்க...

அலோ...ஏங்க சத்தம் போடுறீங்க...ப்ளீஸ்...

என்ன பேசனும் உங்களுக்கு...அவளுக்கு சீக்கிறத்துல மேரேஜ் நடக்கப்போகுது...ஏன் இப்படி அவளோட லைஃப்ல குறுக்கிடுறீங்க...

ப்ளீஸ் நான் நேரா உங்க பேரண்ட்ஸ் கிட்ட வந்து பேசுறேன்...

வேண்டாம்...இதெல்லாம் நடக்காது நாங்க ரெம்ப ஆச்சாரமான குடும்பம்...

அவள் தன் அக்காளின் கரத்தை கெட்டியாக இழுத்த படி சென்று விட்டாள்...ட்ரெயின் ஏறி...அவனும் பின் தொடர்ந்தான்...

மற்றொரு நாள் அந்த பெரியவரை வழி மறித்தான்:

சார் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்...

யாரு தம்பி நீ...உன்னய நான் இதுக்கு முன்ன பார்த்தது இல்லயே...

சார் என் பெயர் சேகர்...நான் உங்க பெண்ணை விரும்புறேன்..தயவு செய்து புரிஞ்சிக்கங்க...

எனக்கு இரண்டு பெண்கள் தம்பீ...மூத்தவளுக்கு அடுத்த மாதம் திருமணம் ஆகப்போகுது...இரண்டாமவளை சொல்றியா...வேணாம் தம்பி எனக்கு இதெல்லாம் பிடிக்காது...

சார் நான் உங்க மூத்த பொண்ணைத்தான் விரும்புறேன்...

டேய் அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகப்போகுதுன்னு கவலைல இருந்தேன் இப்பத்தான் ஒரு நல்ல மாப்ளை கெடைச்சிருக்காரு...கவர்மெண்ட் உத்தியோகம்....குமாஸ்தாவா இருக்காரு...நீ ஏன்யா அவ வாழ்க்கை கெடுக்க பாக்குற...ஒரு ஏழை தகப்பனா கேட்டுக்கறேன்..ப்ளீஸ் விட்டுடு...உனக்கு கோடி புண்ணீயமா போகும்...அழுது கொண்டே சென்று கொண்டு இருந்தார்...

மீண்டும் அவளை சந்தித்தான்...


சேகர்...விட்ருங்க...என் வாழ்க்கை என் பெற்றோர்கள் முடிவுப்படிதான் நடக்கும்...ஒன்னு மட்டும் சொல்றேன்...உங்கள எனக்கு ரெம்ப பிடிச்சிருந்தது..ஆனா இப்ப மறக்க முயற்சிக்கிறேன்...நீங்க என் பின் தொடர்ந்த காலத்தில் இருந்து உங்களை கவனிச்சிட்டு வந்தேன்...நீங்க எப்படி என்னைப்போன்ற குண்டான பெண்ணை விரும்புறீங்கன்னு இன்று வரை எனக்கு புரியாத புதிர்தான்...நாம சந்திக்கறது இதுவே கடைசி முறையா இருக்கட்டும்...உங்கள் வாழ்க்கை நல்ல படியாக அமைய என்னோட வாழ்த்துக்கள்...வரட்டுமா...

திக்கித்து நின்றான்...

கொசுறு: இப்படி காதல்கள் பல தொடரும்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

6 comments :

 1. இது இருபதாம் நூற்றாண்டில் நடந்த காதல் ஆச்சே...!

  ReplyDelete


 2. காதலில் ஜெயிக்கணும் என்றால் பெண் பின்னால் போக கூடாது ..பெண்தான் நமக்கு பின்னால் வரணும் அதாகப்பட்டது பொண்ணுக்கு முன்னால் நாம் போகனும்


  இப்படிக்கு
  காதல்மன்னன்

  ReplyDelete
 3. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
  இப்படிக்கு
  தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 4. கதை நல்லாருக்கு.. சுவாரஸ்யமா போகுது.. ஆனா கொஞ்சம் பழைய கதையா இருக்கே....

  ReplyDelete
 5. பழசோ,புதுசோ சொல்ல வந்த விஷயந்தானே முக்கியம். நல்லாருக்கு.

  ReplyDelete
 6. அருமையான தளம். நான் தங்கள் தளத்தின் பின்தொடர்பவர்கள் பகுதியில் இணைகிறேன். என் தளம்

  தமிழ்மொழி.வலை ( www.thamizhmozhi.net )

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி