தமிழ் + மற்ற மொழி = பொழப்பு! - (எதிர்காலம்!)


வணக்கம் நண்பர்களே...காலத்திற்கேற்றாற் போல வாழ்க்கை சக்கரம் மாறி வரும் நிலையில்...எமக்கு தோன்றிய தாழ்மையான கோர்வையே இப்பதிவு...

இக்கால கட்டத்தில் அறிவை வளர்க்க கல்வி என்பது போய்...வயிற்றுப்பிழைப்புக்கு கல்வி தான் முக்கியம் என்றாகிவிட்டது...அதிலும் மொழியாய் நுழைந்த ஆங்கிலம் இன்று பிழைப்பாய் பலரின் வாழ்க்கையய் புரட்டிப்போட்டிருக்கிறது...

”எம் பையன் இன்னாம்மா இங்க்லீஸ் பேசுறான் பாரு...புள்ள பொழச்சிக்கும்” எனும் நிலையில் தான் சமூகம் உள்ளது...

சில தனியார் பள்ளிகளில் தமிழில் உரையாடினால் தண்டனை அளிக்கப்படுவதும் நடந்து தான் வருகிறது...

இதற்கெல்லாம் என்ன அடிப்படை காரணம்...

அடுத்த தலைமுறை ஆங்கில புலமை(!) பெறவில்லையெனில் புறக்கணிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தான்...

ஒவ்வொரு வேலை வாய்ப்புக்கு செல்லும் போதும்...கேட்க்கப்படும் ஆங்கில உரையாடல்களில் தயக்கம் காட்டினால்...உடனே வெளியேற்றப்படுவது நடக்கிறது...

எங்கும் தமிழ்...எதிலும் தமிழ் என்று முழங்கி பிரயோஜனமில்லை...அதை சமூகத்தின் ஒவ்வொரு இடத்திலும் பதிய வைக்க வேண்டியது நிர்வாகத்தாரின்(!) கடமை...

சுற்றுப்புற பொருளாதார அடிப்படைகள் அனைத்தும் தாய்மொழியில் அரவணைப்பாக கொடுக்காததும்..அதை பெரிதாக கண்டு கொள்ளாமல்...”தமிழா...நீ...இப்படியே அடிமையாய் கிடடா” என்றும் நிலை கொண்ட மானிடர்களின் குரூர மனப்பான்மையே இந்நிலைக்கு காரணம்...

ஓவ்வொரு தனியார் பள்ளியிலும் முதல் மொழி ஆங்கிலமாகவும்...அடுத்த மொழி என்ன வேண்டும் என்று கேட்கப்படும் நிலை மாறி...அது தமிழ் மொழியாக மட்டுமே இருக்கப்படவேண்டும்...அதன் மதிப்பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்பட வேண்டும்..

நிர்வாகத்தால்(!) நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களின் தகுதியய் அடிக்கடி சோதிக்க வேண்டும்...அவர்களினால் உருவாக்கப்படும் அடுத்த தலைமுறை...இப்பெரும் சமூகத்தின் அங்கங்கள் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்...

நிற்க...


நிர்வாகத்தால்...வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர இயலவில்லை...தொழில் முனைவோர்க்கு பொருளுதவி தரவும் இயலவில்லை...எங்காவது திரைகடல் ஓடி திரவியம் தேடிக்கொள்ளுங்கள் என்றே நிர்வாகம் செயல் படுகிறது...இப்படிப்பட்ட நிலையில்...சொந்த ஊரில் தாய்மொழியில் பேசினால்...வேலை வாய்ப்பு மறுக்கப்படும் சூழ்நிலையே நிலவுகிறது...

உலகில் நமது தனித்துவத்தை எந்த மொழியாலும் அழித்து விட முடியாது...உலக போட்டியில் நாம் ஓடிக்கொண்டு இருக்க அனைத்து மொழிகளும் தேவை...இதை உணர்ந்தால் தான் நம் அடுத்த தலைமுறை தப்பிக்கும்...50 ஆண்டுகால குட்ட குட்ட குனிந்து கிடக்கும் சமூகம்...அதை குட்டியவர்களின் வாழ்க்கையோ அயல் மொழியில் தான் சென்று கொண்டு இருக்கிறது...

விழிப்பீர்...

அனைத்து மொழியும் கற்பீர்...அன்னை மொழியை காப்பீர்..

ஜெய் ஹிந்த்

கொசுறு: இவை எமது தாழ்மையான கருத்துக்களே...எல்லோருக்கும் இது பொருந்த வேண்டும் என்பதில்லை...நன்றி...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

11 comments :

 1. // உலக போட்டியில் நாம் ஓடிக்கொண்டு இருக்க அனைத்து மொழிகளும் தேவை... //

  உணர வேண்டிய வரிகள் பல... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கு நன்றி சார்

   Delete
 2. உம்மை விளையாட்டு பிள்ளையாவே நினைத்திருந்தேன் ...தப்பு... தப்பு. நல்ல பதிவு.

  ReplyDelete
 3. அருமையான கருத்துப் பகிர்வு மிக்க நன்றி சகோ !!

  ReplyDelete
 4. நல்ல கருத்துக்கள்! தாய்மொழி மட்டுமே இன்று சோற்றுக்கு உதவாது என்பது உண்மைதான்! பலமொழியும் கற்போம்! தமிழ் மொழியை மதிப்போம்! அருமையான பதிவு! நன்றி!

  ReplyDelete
 5. எனது எண்ணங்களை உங்களது பதிவு அப்படியே பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறது

  ReplyDelete
 6. நல்லா சொன்னீங்க நன்றி அண்ணா

  ReplyDelete
 7. KESAVA PILLAI'GOPS' said...
  உம்மை விளையாட்டு பிள்ளையாவே நினைத்திருந்தேன் ..//  யாரு விளையாட்டு பிள்ளையா...? இவனா...? அடடா நம்பி ஏமாந்து தொலச்சிராதீங்கப்பு.

  ReplyDelete
 8. அனைத்து மொழியும் அனைவரும் கற்க வேண்டுமா?

  தேவைபடுபவர்கள் தேவையான மொழியை கற்றுக் கொள்ளட்டும்

  தேவையில்லாமல் எந்த மொழியையும் யாரும் யாரிடமும் திணிக்க வேண்டாம்.

  மொழி தெரியவில்லை என்றால் முன்னேற்றம் இல்லை என சொல்ல வேண்டாம்.

  அவரவர் அவரவர் தாய்மொழியை வளர்ப்போம்.

  நன்றி

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி