மணக்கும் குகை - Perfume Pagoda (வியட்நாம் அழகு)

வணக்கம் நண்பர்களே....

நமக்கு சிறு வயது முதல் சந்தோசம் என்பதே சிற்றுலாவில்தான் என்பதால் மிகவும் விரும்பி செல்வோம்...அத்தகைய அழகிய ஓர் பயணத்துக்கு உங்களை அழைத்து செல்கிறேன்...இது தொடர் அல்ல..எனவே சந்தோசமாக தொடருங்கள்..


ஹனோய் - வியட்நாமின் தலை நகரம்...இந்த இடத்தில் இருந்து நாங்கள் செல்ல முயற்ச்சித்த இடம் 70 கி.மீ தூரத்தில் இருந்த நிங்பிங் எனப்படும் இடமே...இந்த கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ என்று எண்ணிக்கொண்டே பயணப்பட்டோம்...கார் பயணம் 60 கி.மீ தூரம்...போகும் வழியில் எங்கும் பச்சை அன்னை வாரிக்கொஞ்சிக்கொண்டு இருந்தாள் இந்த தேசத்தை....எங்கு காணினும் பச்சை பசேல் எனும் புல்வெளிகளும்...நெற்பயிர்களும் மனதை ரம்மியமாக்கின...கார் பயணம் முடித்து....குட்டி துறைமுகம் சென்றடைந்தோம்...அந்த படகுத்துறையில் இருந்து படகின் மூலம் 5 கி.மீ படகு பயணம் ஆரம்பமானது...படகை செலுத்தியவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது...மிக கடினமான பணி என்பதும்.. அனைவரின் பாதுகாப்பும் அவர் வசம் என்பதும் தெளிவாக புரிந்தது...இருபக்கமும் காடு....நடுவே நதியில் பயணம்...இயற்கை அழகை ரசித்துக்கொண்டே பயணப்பட்டோம்..இடையிடையே சிறு ஆமைகள் நீச்சலடித்து சென்றன...உல்லாச உலகம் எமக்கே சொந்தம் செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா....
1 மணிநேர படகு பயணம் முடிவுக்கு வந்தது...வந்து சேர்ந்த இடம் Thien Tru அதாவது சொர்க்கத்தின் சமையலறை....பகோடா (கோபுரத்துடன் கோயில்) என்று அழைக்கப்படுகிறது...எல்லாம் புத்தர் கோயில்கள் தான்...அந்தக்கால அரசர்களால் கட்டப்பட்டவை...மிகவும் பழமை வாய்ந்தவைகள்...2000 வருட பழமை வாய்ந்தவை என்று கண்டு கொண்டோம்...அங்கிருந்து நடைப்பயணமாக செல்ல ஆரம்பித்தோம்....மீண்டும் குறுக்கிட்டது கேபிள் கார் பயணம்...அது ஒரு 20 நிமிடம் தொடர்ந்தது...மேலே செல்ல செல்ல கொஞ்சம் அச்சம் கொண்டான் மகன்...கொஞ்ச நேரத்தில் எவ்வளவு அழகா இருக்குள்ள என்று சமாளித்தான்...

இடையிடையே நடைப்பயணத்தில் பேசிக்கொண்டு வந்த “கைடு” கூறினார்....நீங்கள் மொத்தமாக 1000 படிக்கட்டுகளை போக வர கடப்பீர்கள் என்று...ஆம் கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது...வழுக்கும் படிக்கட்டுகளாயிற்றே...கேபிள் கார் பயணம் முடிந்தது...அளவளாவிக்கொண்டே நெட்டாக நடந்து போய் சேர்ந்தோம்...அங்கிருந்து செங்குத்து கீழாக ஒரு 100 படி இறங்க வேண்டும் என்றார்...அடங்கோ...அப்போதுதான் அந்தக்காட்சி கண்ணில் பட்டது...இது தான் அந்தக்குகை...நடுவில் ஒரு தனி கல் தொங்கிக்கொண்டு இருந்தது...குகையின் நுழைவுவாயில் அது அதன் இருபுறமும் இரு வழிகள்...ஒன்று மட்டுமே போக அனுமதி(நரகம் போகும் வாசல்!)...அதாவது வாழ்வில் தவறான காரியங்கள் செய்து இருந்தால் இந்த சிறு வழி போகும் போது நாம் பயப்படும்படி தோன்றும் என்பது நம்பிக்கை...நான் சென்று பார்த்தேன் ஒன்னும் தெரியல...இன்னொரு பக்கம்(சொர்க்கம் போகும் வாசல்!) அடைபட்டு இருக்கிறது..அனுமதி இல்லை(இங்கயுமா அவ்வ்!)...நேரே உள் நுழைந்தால் அழகிய மலர்களுடன் புத்தர் சிறு சிலை வடிவில்...மிக ரம்மியமான மணம் எங்கும் பரவியது...இந்த இடத்துக்கான் பின் வரலாறு என்னவெனில்...புத்தர் இங்கு வந்து குளித்து சென்றதாகவும்...கொஞ்ச காலம் தங்கி தபஸ் செய்ததாகவும் சொல்லப்படுகிறது...எனவே வியட்நாமியர்கள் வழிபாடு செய்கிறார்கள்...இங்கு ஆண்டுக்கு மூன்று மாதம் மிக கூட்டமாக இருக்கும்...அதிலும் வியட்நாமிய புத்தாண்டு பிப்ரவரி இறுதியில் வரும்...அப்போது கண்கொள்ளாக் கூட்டம் இங்கு வந்து வழிபடுவார்கள்...உள்ளே இருக்கும் இரு தொங்கு கல்களில் ஒன்று வணங்கினால் பண வரவு எனவும்..இன்னொன்று திருமணம் மற்றும் புத்ர பாக்கியம் எனவும் சொன்னார்கள்.கடவுள் நம்பிக்கை அதிகரித்து காணப்படும் இடங்களில் இதுவும் ஒன்று...உள்ளே செல்ல ஆரம்பித்ததும் சில்லென்ற சிறு குளிர் படர்வதை உணர்ந்தேன்...ஒரு வித அமைதியான நிலைக்கு மனம் போனது...சிறிது நேரம் அங்கே உட்கார்ந்தேன்(5 நிமிட தியானம்!)...மனைவியும் குழந்தையும் ஒவ்வொரு கல்லாக பார்த்துக்கொண்டு இருந்தனர்..குகையின் உள்ளே சொட்டு சொட்டாக வரும் நீரை எடுத்து நம்மூர் மக்கள் போலவே தலையில் தடவிக்கொள்கின்றனர்...பலே பலே...அரை மணிக்கு பிறகு அங்கிருந்து கிளம்பினோம்...மீண்டும் நடை பயணம் ...மீண்டும் கேபிள் கார்...மீண்டும் படகு பயணம்...கார் பயணம் வழியாக வீடு வந்து சேர்ந்தோம்....மிகவும் அழகிய பயணம் கொஞ்சம் சிரமத்துடன் போன திருப்தியை அளித்தது...

கொசுறு: இயற்கை அழகுக்கு எந்த வித செயற்கை அழகும் ஈடாகாது அல்லவா!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

10 comments :

 1. ஆமைகளை இன்னுமா விட்டு வச்சிருக்காங்க! :)

  ReplyDelete
 2. ஆமா, நீங்க எந்த கல்லைத் தொட்டீங்க? ஹா ஹா ஹா.

  ReplyDelete
 3. அதான் நீங்க அடிக்கடி சொர்க்கத்தை பார்க்கிறீங்களே, அங்க போயுமா சொர்க்கத்தைப்பார்க்க முயற்சி பண்ணுனீங்க! :)

  ReplyDelete
 4. அருமையான பயணம், அழகிய படங்களுடன்.

  ReplyDelete
 5. Irukkom...irukkom.....

  Aanaal....

  Sari athai vidungal.....
  Nalamaa anaivarum....????

  ReplyDelete
 6. அருமையான படங்களுடன் இனிமையான பயணம்...

  உல்லாச உலகம் உமக்கே சொந்தம்...! Enjoy...

  ReplyDelete
 7. //உள்ளே இருக்கும் இரு தொங்கு கல்களில் ஒன்று வணங்கினால் பண வரவு.... //


  உடனே ஒரு 5 லக்ஷம் அனுப்பவும் ,details இன்பாக்ஸ் இல் .

  ReplyDelete
 8. வந்து பார்க்க வேண்டிய ஆவலை தூண்டுகிறது...அங்க வந்தா கூட்டிட்டு போவிகளா..?

  ReplyDelete
 9. அருமையான அனுபவப் பகிர்வு! வியட்நாமை ஆங்கிலப் படம் ஒன்றில் பார்த்த நினைவு, தமிழில் வியட்நாம் பற்றி ஒரு படங்களுடன் ஒரு பதிவைப் படிப்பது இதுவே முதன்முறை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. அருமையான விபரிப்பு மாம்ஸ் !!வியாட்னம் போகாத குறையை தீர்க்கும் பதிவு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி