The Salesman - விற்பனைக்கு(!) பிரதிநிதி!

வணக்கம் நண்பர்களே...இயல்பான வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் மிகப்பெரிய திருப்புமுனையே...அதை உன்னிப்பாக காண்போருக்கு மட்டுமே விளங்கும்...

வயிற்றுப்பிரச்சினை தீர்க்க ஒவ்வொருவரும் தேடும் வேலைகள் ஏராளம்...அதிலும் கலைக்கல்லூரி மாணவர்கள் பாடுதான் திண்டாட்டம்...

என்ன படிச்சிருக்க...

பி.ஏ சார்...

இதுக்கு என்னா கலெக்டர் உத்தியோகமா கொடுப்பாங்க...

(அட முண்டகலப்ப அதுக்கும் இளங்கலை இங்கிருந்து தானே வரனும்!)

சார் கோச்சிக்காதீங்க...எனக்கு வேலை வேணும் அதான்...

இதுக்கு முன் அனுபவம் வேணும்பா...அது உங்கிட்ட இல்லயே...

சார் ஒரு தடவ சொல்லி கொடுத்தீங்கன்னா கத்துப்பேன்...

இந்த பொருள்(!) மக்கள் கிட்ட பிரபல்யம் இல்லாதது...இதை கொண்டு போயி கடைக்காரர் கிட்ட எப்படி பேசி விக்கிறதுங்கறது என்பதே தனிக்கலை....அதெல்லாம் உன்னைய ப்போல ஆளுக்கு வராது கெளம்பு...

இல்ல சார்...சொல்லி கொடுங்க கத்துக்கறேன்...

வேலை இல்ல போடாங்கறேன்...

ஏய் யாரப்பா அது...(மேலாளர்!)

அட இந்தப்பயலுக்கு எதுவும் முன் அனுபவம் இல்ல சார்...இவனை எப்படி வேலைக்கு எடுப்பது...

ம்ம்ம்...ஏன் தம்பீ என்ன படிச்சிருக்க...

பி.ஏ சார்...

இங்க வா...நான் சொல்லித்தரேன்...(போதிக்கப்பட்டது!)...

முத விசயம் உனக்கு கோவமே வரக்கூடாது (வச்சாருயா ஒபனிங்கலயே ஆப்ப!)...சூடு சொறனையல்லாம் விட்ரனும்...அப்பத்தான் உன்னால வேலை செய்ய முடியும்..சிலர் கேவலமா திட்னாலும் சிரிச்ச படி மூஞ்சிய வச்சிக்கனும்...இதான் முதல் க்ளாஸ்(சீயர்ஸ்!)

“சரி சார்...நீங்க சொன்னா ஓகே சார்”

ஒரு நாளைக்கு 60 கடை ஏறி இறங்கனும் 40 டிகிரி சூரிய குளியலில்(!)...வாழ்க்கை எவ்வளவு கடினமானது...மூனு வேலை உணவு வேண்டி...கிழிஞ்ச சாக்சை மாட்டிகிட்டி ஒவ்வொரு கடையிலும் பேசிப்பேசி விற்க வேண்டி இருக்கிறதே...நாயை விட கேவலமாக திட்டி அனுப்பும் கடைக்காரர்கள்...என்ன வாழ்க்கடா இது...

என்ன மச்சி இன்னிக்கி எந்த ஏரியா...

திருவொற்றியூர்....

டேய் மாப்ள...இங்கிருந்து ரெம்ப தூரமாச்சேடா...சைக்கிள்லயா போகப்போற...

என்னடா பண்றது...பொழப்பு அப்படி...அங்க போனதும் ட்ரை சைக்கிள்ல வருவாங்க அந்த ஏரியா ஸ்டாக்கிஸ்டு...அவிக கூடவே போகோனும்டா..

டேய் எப்படிடா உன்னால முடியுது...பேசாம விட்டுட்டு எதாவது வேற வேலைய தேடிக்க...

நீ ஏன்டா தினமும் இந்த சினிமா ஏரியால சுத்திட்டு இருக்க...

நிச்சயமா ஒரு நாளு நானும் டைரக்டர் ஆவேன்டா...இப்ப அசிஸ்டண்டா சுத்திட்டு இருக்கேன்...


அதான் மாப்ள நம்பிக்கை...எனக்கு இது பிடிச்சி இருக்கு...கண்டிப்பா எதிர்காலத்துல நானும் பெரிய ஆளா வருவேன்...எங்கிட்ட இருக்குறது...உழைப்புங்கற மூலதனம்தான்...அது போதும்டா...பேச்சி இருக்க வரைக்கும் பொழச்சிப்பேன்...

அது சர்தான் மாப்ளே...இன்னிக்கு சனிக்கிழமை சாய்ந்திரம் சீக்கிறம் வந்திடு...

தொடரும்...

கொசுறு: வாழ்க்கையில் ஏழையா பிறப்பது தவறில்லை...கோழையாக வாழ்வதே தவறு...தோணிச்சி!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

6 comments :

 1. வாழ்க்கையின் வலி மிகுந்த நிமிடங்கள்.

  ReplyDelete
 2. //இன்னிக்கு சனிக்கிழமை சாய்ந்திரம் சீக்கிறம் வந்திடு...//
  நாமெல்லாம் அப்பவே அப்டி!

  ReplyDelete
 3. //கொசுறு: வாழ்க்கையில் ஏழையா பிறப்பது தவறில்லை...கோழையாக வாழ்வதே தவறு...தோணிச்சி!//
  இப்பல்லாம் ரெம்பவே தோணுதோ! :)

  ReplyDelete
 4. என்ன நாய் பிழைப்பா இருந்தாலும் சனிக்கிழமை சாயந்திரம் உடமாட்டோம்.

  மாப்ள நல்ல பதிவு.

  ReplyDelete
 5. கடைசி வரிகள் கலக்கல்! அருமையான பதிவு! நன்றி!

  ReplyDelete
 6. இது உங்கள் தளம் தானா...? என்று சிறிது நேரம் அசந்து விட்டேன்... ஏனிந்த மாற்றம்...?

  கொசுறு சூப்பர்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி