இரவல் நகை - வாழ்க பாரதம்!~

வணக்கம் நண்பர்களே...இந்த தலைப்பை அடிக்கடி வீட்டில் பேச கேட்டிருப்போம்...ஆம் அதே தான் எதோ தோணிச்சி...அதனால் இந்த பதிவு...

ஆண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் பெரிதாக நகைகளைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்...மாறாக பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரே களேபரமாக இருக்கும்...அதுவும் திருமணத்துக்கு செல்லவேண்டும் என்றாலே...நர்த்தனம்தான்..

அப்படி ஒரு வீட்டில்..ஒரு நாள்...

ஏம்மா...எனக்கு ஒரு செயின் கூட இல்ல நான் எப்படி கல்யாணத்துக்கு வர முடியும்...நீங்க வேணா போயிட்டு வாங்க...நான் வரல...

அதானே குழந்தை கழுத்து வெறுமையா இருந்தா எவ்வளவு கேலிப்பண்ணுவாங்க கல்யாணத்துக்கு வர்றவங்க...ஏன்டாப்பா...இதெல்லாம் கவனிக்க கூடாதா...

ஏம்மா நான் வாங்குற சம்பளத்துக்கு இப்ப இதெல்லாம் முடியுமா...அப்படி ஒன்னும் கல்யாணத்துக்கு போக வேண்டியதில்ல போங்கோ...

ஏங்க நான் வேணா தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு பாக்கவா...இரவலா...

ஏன் இந்த வேலையெல்லாம்...

டேய் மாதவா...கல்யாணத்துக்கு போயி தான்டா ஆகனும்..இல்லன்னா எப்படில்லாம் ஏச்சி வரும்னு எனக்கு தான் தெரியும் (தாய்..)

சரி சரி எதாவது பண்ணி தொலைங்க...

(பக்கத்து..அக்கத்து வீடுகளில் இரவல் கேட்டு வாங்கிய சில நகைகளுடன் திருமணம் சென்று வரவேண்டியே போனது)

இப்படி பல குடும்பங்களில் இரவல் நகையின் ஆளுமை அதிகம்...அதிலும் திரும்ப வந்து சேர்க்கும் வரை அதில் எந்த வித பாதிப்பும் இல்லாது கொண்டுவருவது...மிகப்பெரிய சவால்தான்..


திருமண வீடுகளில் பெண்கள் அணிந்து வரும் பல நகைகள் சொந்த நகைகளாக கண்டதில்லை...அதில் ஒரு பெருமை அவர்களிடம் உண்டு...நாலு பேரு நம்மை காணும்போது கொஞ்சம் மேல்தட்டு மக்களாக தெரியவேண்டும் என்பதும் ஒரு காரணமே..

சில திருமணங்களில்...சொன்ன படி வரதட்சணையாக போட முடியாத காரணத்தால்...சொந்தங்களின் நகைகளை இரவலாக போட்டு திருமணம் முடிப்பர்...கொஞ்ச காலம் கழித்து தெரிய வரும்போது...மிகப்பெரிய சண்டைகள் உருவாகி பிரிவு நடந்தேறுவதும் இதனால்தான்...

“மக்கள் தங்கம் வாங்கும் ஆசையை குறைத்துக்கொள்ளவேண்டும்” எனும் செல்வச்சீமான்களாகியவர்களின் அமுத வாக்கையும் கணக்கில் கொள்ளவே வேண்டி இருக்கிறது!

இன்றைய நிலையில் கவரிங்க் வெகுவாக மக்களிடம் புழங்குவதால்...அந்த அளவுக்கு திருமண வைபவங்களில் இரவல்கள் வாங்கப்படுவதில்லை...

இரவல் நகைகளால்...இரவல் வாழ்க்கையாய் மாறிப்போன பெண்களின் கனவு வாழ்க்கைகள் ஏராளம்...

என்னவோ சொல்லனும்னு தோணிச்சி...

பொன்நகை வேண்டாம் உன் புன்னகை போதுமே...கொசுறு: இரவல் என்பதே ”இடைப்பட்ட” எனத்தானோ...நிலையானது அல்ல எனும் எண்ணம் மக்களுக்கு வரும் வரை இவை தொடரும்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

5 comments :

 1. நகைகளை தொலைத்து விட்டு அதனால் இன்றும், இன்னும் சிரமப்படும் குடும்பங்களும் உண்டு... தேவையா இது...?

  ReplyDelete
 2. தங்கம் முதல் தகர டப்பா வரை ஓசி வாங்கவில்லை என்றால் நமக்கு தூக்கம் வராதே. .

  ReplyDelete
 3. இருப்பதை வைத்து மகிழ்வு காண்பதே நல் வாழ்க்கையாகும் .சிறப்பான கருத்தினை உணர்த்தி நிற்கும் ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரரே !

  ReplyDelete
 4. இரவல் என்றும் தொந்தரவுதான்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி