காது குத்தல் - பெருமை பீத்தக்கரை!

வணக்கம் நண்பர்களே...

ஒரு குழந்தைக்கு காது குத்துதல் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது...

என்னம்மா ரெடியா...காது குத்தப்போறேன் அந்த கடுக்கன கொண்டாங்க...

”இந்தாங்க” என்று கொண்டு வருகிறாள் குழந்தையைய் பெற்றவள்...உடனே கணவனின் அக்கா...

இங்க பாருங்க நான் கொண்டாந்து இருக்கேன் அத தான் போடனும்...

இல்லீங்க எங்க அம்மா செய்ஞ்சி கொண்டு வந்துருக்காங்க டப்ஸ் போல...அது தான் நல்லது...கம்பி போல வேண்டாங்க...அதுதான் முறையும் கூட...

முடியாது....- கணவனின் அக்காள்!

அதானே...எம் பொண்ணு கொண்டாந்தத தான் போடனும் அதுதான் சபையில மரியாதையும் கூட...- மாமியாரின் கத்தல்...

திகைத்து நிற்க்கும் மனைவியிடம்...கணவன்...

ஏய் கம்முனு கட எங்கக்கா கொண்டாந்த தான் போடுவோம்...

இல்லீங்க அது முறையில்ல..

வாதம் இரு வீட்டாருக்கு இடையில் வலுக்கும் போது...கணவன் வார்த்தையைய் விடுகிறான்...

இப்படில்லாம் பேசிட்டு இருந்த உன்னைய விவாகரத்து பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்...

சொந்தக்காரப் பெண் குறுக்கிடுகிறாள்...

டேய் என்னடா ஓவரா பேசுற...

அக்கா இதுல நீங்க தலையிடாதீங்க...

டேய் எதுக்கு எத பேசுற...100 பவுன் போட்டு கட்டிக்கும் போது இனிச்சவ...ஒரு கிராம் நகைக்கு வெறுத்துட்டாளோ...

இது எங்க குடும்ப பிரச்சினை நீங்க தலையிடாதீங்க...

உங்க குடும்ப பிரச்சினைன்னா இப்படி பொதுவுல பேசக்கூடாதுப்பா...எங்களையெல்லாம் ஏன் அழைச்ச இந்த விழாவுக்கு...இந்த பேச்சுக்களையெல்லாம் நீங்க முன்னாடியே பேசி முடிவு பண்ணிருக்க வேண்டியது தானே...

ஏய் இப்ப நான் சொல்றத கேக்கப்போறியா இல்லீயா - கணவன் கத்துகிறான்...

முடிவில் அழுது கொண்டே அமைதியாகிறாள் மனைவி(!)

கணவனின் அக்கா கொண்டு வந்த தங்க கம்பியை காதில் மாட்டி அழகு பார்க்கிறார்கள் குடும்பத்தார்...

அலுவல் முடிந்து வீட்டுக்கு வருகிறார்கள்...

ஏன்டி எங்கள பொதுவுல அவமானப்படுத்துறியா என்று அடித்தே விட்டான் கணவன்...

வீட்டுக்கு வந்திருந்த அந்த சொந்தக்காரப்பெண்...”ஏய் தம்பீ நம்ப முறையில புள்ளய பெத்தவளோட ஆத்தா அப்பன் போடுறத தான் முறை...உங்க அக்காவும்..அம்மாவும் தான் பெருமை பீத்தக்கரையா இருக்குறாங்கன்னா நீயுமா...அட போடா இவனே..”

ஒரு வாரத்தில் குழந்தையின் காதில் சீழ் வடிகிறது...டாக்டரிடம் இட்டு செல்கிறார்கள்..

ஏம்மா உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லியா இந்த காலத்துல போயி கம்பில்லாம் மாட்டி ஏன் குழந்தைய வதைக்கிறீங்க..உள்ள பொத்துட்டு இருக்கு சின்ன ஆபரேசன் செய்ஞ்சி தான் கம்பிய எடுக்க வேண்டி இருக்கு..கம்பி துகள்களா இருக்கும் போல...

கணவனை பார்த்து பரிதாபமாக பார்க்கிறாள் மனைவி...

கொசுறு: தோன்றியதை கொட்டிட்டு போங்க...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ளனும் தெரியாத லூசுங்க பிள்ளைகளை எப்படிதான் நல்லபடியாக வளர்க்க போகிறாங்களோ

  ReplyDelete
  Replies
  1. மெத்த படிச்சிட்டு பேங்க மேனேஜரா இருக்காருபா..என்னத்த சொல்ல...அவ்வ்

   Delete
 2. இப்படித்தாண்ணே ஒவ்வொரு பிரச்சனையும் ஆரம்பிக்குது...'

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்பா அதுவும் பொதுவில் வீண் வீராப்பு காட்றாய்ங்க...

   Delete
 3. குழந்தைகளுக்கான சீர் முறை எல்லாமே...தாய் வழி வகையறாவுக்கே முன்னுரிமை...வழிமுறை...நடைமுறை !

  ReplyDelete
  Replies
  1. இத சொன்னா யாரு கேக்குறது...

   Delete
 4. என்ன விக்கி யார் வீட்டு காத்து குத்தல், நட்பா சொந்தமா?
  அது போகட்டும் சௌக்கியமா ? நான் மீண்டும் வந்தேன் .

  ReplyDelete
 5. அண்ணே சொந்தக்காரங்கதான் என்னத்த சொல்ல...இங்கு நல்ல செளக்கியம் தங்கள் செளக்கியம் எப்படி?...நானும் ரெம்ப நாள் கழிச்சி வந்து இருக்கேன்...

  ReplyDelete
 6. Replies
  1. ம்ம் என்னமா குத்துனாங்கய்யா ஊட்ல...

   Delete
 7. ம்ஹும்... குடும்ப ஈகோ குத்தல்ல வந்து நிக்குது!!!!

  ReplyDelete
  Replies
  1. ஈகோ தான் பல பிரச்சினைகளுக்கு காரணம்

   Delete
 8. இதுபோல் அதிகம் உசிலம்பட்டி ஏரியாவில்
  பணியாற்றுகையில் பார்த்திருக்கிறேன்
  20 வருடங்களுக்கு முன்பு
  அது இப்போதும் என்றால்....
  அதுவும் மேனேஜராய் வேலைபார்ப்பவர் என்றால்...
  கஷ்டமதான்

  ReplyDelete
  Replies
  1. படிச்சிம் பக்குவம் வளராததை என்னான்னு சொல்ல அண்ணே

   Delete
 9. எல்லா இடங்களிலும் நடப்பது தான் இது... பக்குவம் தேவை...

  ReplyDelete
  Replies
  1. பக்குவம் வரனும்னு தான் ஆசை..

   Delete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி