மெகா மால் - அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி!~

வணக்கம் நண்பர்களே..இந்த வாரம் வீட்டுக்காரம்மாவின் அதட்டலால்(!) புத்சா ஒரு மால் கட்டி இருக்காங்க போயி பாத்தே ஆகோனும் என்று கெளம்பினோம்...

இங்க மொழிப்பிரச்சினை இருப்பதால்...கையில் GPS உதவிடன் மொபைல் ஃப்போன் மூலம் ரூட்ட புடிச்சி போயிட்டே இருந்தோம்...எங்கிரகம் வழியில ஒரு இடத்துல நின்னு மீண்டும் ரூட்ட ஒரு தபா பாக்க வேண்டியிருந்தது...

சர்தான்னு பைக்க ஸ்டாண்ட் போடாம ரோட்டின் ஓரமா நிறுத்திட்டு அப்படியே ஃப்போன் பாத்துட்டு இருந்தேன்...பைக் பின்னாடி ஒரு யுவதி(!) குழந்தைய தள்ளுவண்டில வச்சிகிட்டே நம்மூர்ல பட்டிக்காட்டான் முட்டாய் கடைய முறைச்சி பாத்தாப்ல வந்துனு இருந்துது போல...”டமால்”ன்னு என் காலுல முட்டியதில் கொஞ்சம் ஷேக்(அட அந்த ஷேக் இல்லப்பா!) ஆனனா...ரைட் கால கொஞ்ச ஊன்ற போயி கீழ வாடிசெல்லம்னு காத்துட்டு இருந்த சைலன்ஸர் நச்சுன்னு ஒரு இச்ச கொடுத்துச்சி...நான் “அப்பிடியே ஷாக்காயிட்டேன்”...

கொஞ்சம் உசாராயி அந்த லேடிய திட்றதுக்குள்ல...அந்த யுவதீ(!) போயிட்டா...ஸ்ஸ் அபான்னு காலுல இச் விழுந்த இடத்துல ஜில் தண்ணிய வாங்கி ஊத்திட்டு கொஞ்சம் கண்ணு பளிச்சின்னு தெரிய வரைக்கும் வெயிட் பண்ணேன்..

”என்னாங்க வாங்க ஊட்டுக்கு போலாம்..நேரமே சரியில்லன்னு ஊட்டுக்காரம்மா சொல்லுவாங்கன்னு நெனைச்சேன்..” - நடக்கல...

”யோவ் தம்மாத்துதூண்டு பொசுங்கிடிச்சி அதுக்கு இப்பிடியான்னு அவங்க மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்...”

சரி விடுன்னு கெளம்பி அந்த மால் நோக்கி சென்றோம்...கிட்ட போனா எந்தா பெருசா இருக்கு...பேஸ்மெண்டு 2 ல தான் வண்டி நிறுத்தம்...விட்டு புட்டு மேலே தானே செல்லும் படிக்கட்டுல நின்னுகிட்டோம்...அதுவா இஸ்துகுனு போச்சி..

உள்ளார நுழைஞ்சி பாத்தோம் பாருங்க...அடேங்கப்பா....எவ்வளவு பெரிய இடம்...6 ஏக்கர்ல கட்டி இருக்காங்களாம்...பேஸ்மெண்ட் ஷாப்பிங் என்று சொல்றாங்க...

600 கடைங்க...அதில் 200 ரெஸ்டாரெண்ட்ஸ்...27 நாடுகளின் உணவு வகைகள் இருக்கறதா சொன்னாங்க...துட்டு சும்மா பிச்சி பிச்சி...!

வாட்டர் பார்க்க...குழந்தைகளின் கும்மாளம்..ஐஸ் ஸ்கேட்டிங்க் எனப்படும் விளையாட்டு திடலும் உண்டு...


சினிமா தியேட்டர்களும் உள்ளே இருக்கின்றன...

தரைய டைல்ஸ் போட்டு சும்மா இழச்சிருக்காங்க...

உணவகத்தில் போய் உட்கார்ந்தோம்...பையன் கோழி குனிஞ்சிருக்கும் போது அடிச்ச சிக்கன் தான் வேணும்னு அடம்பிடிச்சதால...அந்த கிரிஸ்ப் சிக்கன வாங்கி கொடுத்துட்டு...


ஊட்டுக்காரம்மாவுக்கு வெஜ் சாலட்டும்...பேரிக்கா காரனோட வளர்ப்பான கார்லிக் ப்ரட்டும்...வாங்கிகொடுத்துட்டு...எனக்கு பிடிச்ச மீன் வறுவலையும் தின்னுட்டு கெளம்பினோம்..

 படா சோக்கா கட்டிகிறாங்கபா...அதுக்குள்லார போன என்னைய மட்டும் வித்தியாசமா பாத்து சிரிச்சிகிட்டே பல யுவதிகள்(!) போனாங்க...நம்ம கலர் கம் சைஸ் அப்பிடியாச்சே...இதெல்லாம் பாத்தா நடமாட முடியுமா...போங்க போங்க இதெல்லாம் வஞ்சனையில்லாத(!) ஒம்பு...அவ்வ்..

கொசுறு: மால் பத்தி சொல்ல வந்துட்டு சுய தம்பட்டம் ஓவரா இருக்குன்னு சொன்னா ஒன்னியும் பண்ணிக்க முடியாது...நாங்கள்லாம் இப்பிடித்தான்...இன்னா பண்றது நண்பர்களே!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

12 comments :

 1. நல்லா சுத்திப்பார்த்தீங்களா?

  ReplyDelete
  Replies
  1. அண்ணே நல்லா(!) சுத்தி பார்த்தேன்..ஹிஹி...ஜூப்பரா இருந்துச்சி எல்லாமே...கால் சூடு இப்ப ஓகே...

   Delete
 2. எப்பவுமே வெளியே புறப்படும்போது ரெண்டு ஃபேமிலிக்கும் வெவ்வேறு டைம் ஒதுக்கணும். ஹா ஹா ஹா.

  ReplyDelete
 3. வஞ்சனையில்லாத உடம்புதான், எதுக்கும் காலில் சூடு பட்ட இடத்தை கவனமா பார்த்துக்கோங்க.

  ReplyDelete
 4. பிரமாண்டம்-நான் மால் பற்றி சொன்னேன். :)

  ReplyDelete
 5. // படா சோக்கா கட்டிகிறாங்கபா...
  அதுக்குள்லார போன என்னைய மட்டும்
  வித்தியாசமா பாத்து சிரிச்சிகிட்டே பல
  யுவதிகள்(!) போனாங்க.///

  ஐஸ்வர்யாவே உங்கல பாத்து மயங்கும்.. . . . நீங்க ஹீரோ பாஸ். .

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா ஏன்யா ஏன் என்னைய பெருசுங்கிறீரா...அவங்க குடும்பத்துல என்ன்னைய கோத்துவிட்ருவீர் போல!

   Delete
 6. ஆமாம் நீங்க ஜீபிஎஸ் பார்த்து போயிட்டீங்க. அது எங்க இருக்குனு எங்களுக்க் சொன்னாதானே நாங்களும் அதைப் பார்த்து வருவோம்ல?

  ReplyDelete
 7. இன்னும் சில படங்களைச் சேர்த்திருக்கலாமோ
  எங்களைப் போல சட்டிகுள்ளிருந்து மட்டுமே
  உலகம் சுத்தும் வாலிபர்களுக்கு (?)
  கொஞ்சம் பிரயோஜனமா இருக்கும்
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
 8. ஹா ஹா... கால்ல சூடு வாங்கினாலும் நல்லா சுத்திப்பாத்திருக்கீங்க..

  நீங்க யுவதிகளை பாத்தாதான் தப்பு... அவுங்க உங்களைப் பாத்தா தப்பேயில்ல...

  ReplyDelete
 9. அன்பின் விக்கி - எந்த மால் - எங்கே இருக்குன்னு தகவலும் சேத்துருக்கலாம்ல - சூடு ஆறி இருக்கும்னு நினைக்கிறேன் - மால்ல எவ்ளோ ரூபா செலவு - சாப்பாடு இல்லாம - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. அன்பு நண்பரே ஒரு முறை கொச்சின் வந்து புதியதாக நிர்மானித்து உள்ள லுாலுா மால் வந்து பாருங்கள்.
  26 ஏக்கரா அளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய மால்.
  இதில் எதைச் சொல்வது எதைச்சொல்லாமல் இருப்பது?எதைச் சொன்னாலும் அதனுடைய பிரமாண்டம் குறைவாகத்தான் காண்பிக்கும்.
  ஆதலால் ஒரு முறை வந்து பாருங்கள்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி