வணக்கம் நண்பர்களே...
ஒரு திருமண ஏற்பாடு பற்றி பார்ப்போம்..

ஹலோ மாம்ஸ்...எனக்கு கல்யாணம் முடிவாயிடிச்சி...

அப்படியா சந்தோசம்டா...

நாளைக்கு முடிவு கொடுக்க போறோம்...நிச்சயதரர்த்தம்லாம் இப்ப வேணா...கல்யாணத்துக்கு முன்னாளே வைச்சிக்கலாம்னுட்டாங்க பொண்ணு வீட்ல...

அப்படியா...அதுவும் சர்தான்...எதுக்கு தனி செலவு...

நீங்க வருவீங்க தானே...

முயற்சிக்கிறேன் மாப்ளே...கோச்சிக்காதடா...

சரி சரி எப்படியாவது வந்துடுங்க...நான் எதிர்பார்ப்பேன்...நாள் முடிவு பண்ணதும் சொல்றேன்...

ரைட்டுய்யா...

டொக்...

ரெண்டு நாள் கழித்து...

அலோ மாப்ள இல்லயா...

இல்லப்பா அவன் வெளிய போயி இருக்கான்...அவன் செல்லுக்கு போடு...

(ஏன் இவங்க இவ்ளோ ஃப்பீலிங்க காட்றாங்க...அடங்கொன்னியா இன்னாச்சி!)

அலோ...என்னடா எப்படி இருக்க..

நல்லா இருக்கேன் மாம்ஸ்...பசங்களோட சோம பானக் கடையில இருக்கேன்..

அடேய் ஏன்டா...என்னாச்சி..

அடப் போங்க மாம்ஸ் நாந்தான் வேணான்னு சொன்னேன்ல இப்போதைக்கு கல்யாணம்...எல்லாம் எங்கப்பனால...விடுங்க...

டேய் என்னாச்சி சொல்லுடா....

ஃப்ளாஷ்பேக்..

வாங்க வாங்க...எப்படி இருக்கீங்க..

ம்ம் நல்லா இருக்கோம்..

என்ன எழுதிடுலாங்களா என்னிக்கின்னு...

அதுல பாருங்க...கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு சொல்ல...இருந்தாலும் வேற வழியில்ல...இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு பொண்ணு தீர்மானமா சொல்லிட்டா அதான்...வேண்டாம்னு நினைக்கிறோம்...

ஏன்...காரணம் நாங்க தெரிஞ்சிக்கலாமா...

உங்க பையன் அமெரிக்கால வேலை செய்யிறான்னு தான் ஓகே சொன்னோம்...ஆனா 3 மாசத்துல மீண்டும் இங்க வந்துடுவாங்கறதுனால தான்...

நாங்க உங்ககிட்ட பேசும்போதே...அவன் சொன்னானே உங்க முன்னாடியே...எனக்கு அங்க வேலை முடிஞ்சி போச்சி...இன்னும் 3 மாசத்துல இங்க வந்து அதே நிறுவனத்துல தான் வேலை செய்யப்போறான்னு...

அதெல்லாம் சரிங்க...நீங்க போனப்புறம் யோசிச்சி பாத்தோம்..பொண்ணு தீர்க்கமா நிலையா நின்னுட்டா...அதான்...

இத நீங்க ஃப்போன்ல சொல்லி இருந்தா...நாங்க வந்துருக்க மாட்டமே...

அதான் இப்ப சொல்லிட்டோம்ல...

என்னங்க கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம இப்படிப்பேசுறீங்க...

இங்க பாருங்க...முடிஞ்சது முடிஞ்சி போச்சி தயவு செய்ஞ்சி கெளம்புங்க...இப்ப சொல்லுங்க மாம்ஸ்...

டேய் விட்ரா...இதெல்லாம் சகஜம்..

அட போங்க மாம்ஸ் நான் பாட்டுக்கு செவனேன்னு பொழப்ப பாத்துட்டு இருந்தேன் என்னைய இப்படி கொண்டு போய் அவமானப்படுத்திட்டாங்க...என்னவோ போங்க...

டொக்...

கொசுறு: ஸ்ஸ்ஸ் அபா என்னாத்த சொல்றது...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

4 comments :

 1. விக்கி அண்ணே, உங்க பதிவ போன்ல படிக்க முடியல, கொஞ்சம் டெம்ப்ளேட் கலர் மாத்துன்ங்க.... நான் சாயங்காலமா கமென்ட் போடுறேன்....

  ReplyDelete
 2. வெளிநாட்டு மாபிள்ளைக்கு மதிப்புதான்;பாவம் அவரு!

  ReplyDelete
 3. அன்பின் விக்கி - இப்து இப்படி எல்லாம் நடக்குதா - பொண்ணுக ஜாஸ்தி தான் எதிர்பாக்குறாங்க - என்ன செய்வது ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி