வணக்கம் நண்பர்களே...ஒவ்வொருவர் வழியும் தனி வழியே இதில் இன்னொருவர் தலையிடுவது என்பது தலைவலியே...

படிப்பு - இது தான் மூலதனம் என்று மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்து அரை நூற்றாண்டு ஆன போதும்...எப்படிப்பட்ட படிப்பு பொருளாதாரத்தை தொடர்ந்து கொடுக்கும்(!) என்பதை யோசித்தால்...பதிலில்லை...

அதே நேரத்தில் பொறியாளர்...மருத்துவர் இப்படிப்பட்ட படிப்புகளை எல்லோராலும் படித்து விட முடியாது...நிற்க பொறியாளர் இப்ப ரோட்டுக்கு 10 பேர் திரியிறாங்க...ஆனா வேலை கெடைக்கல...இவங்களும் விற்பனைப்பிரதிநிதி வேலைக்கு போயிடறாங்க..

கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாரிசுகளாகவே இருக்காங்க...இவங்க எழுந்து வரும்போது...வேலை கிடைப்பதில்லை...அதிலும் பேச்சுத்திறமை இருக்குறவங்க உடனே போயி சேருவது மார்க்கெட்டிங் வேலைகளுக்கே...

குறைந்த சம்பளம்...தினம் தினம் டார்கெட் என்ற பெயரில் கொத்தி கொத்தி ஆட்டிப்படைக்கும் ஆட்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு நரக வேதனை அடைகிறார்கள்..

புள்ள என்ன படிச்சி இருக்கான்...

பி ஏ...ங்க

என்ன வேல பாக்குறான்...

மார்க்கெட்டிங்க்ல இருக்கான்...

”ஓ...எங்க பொண்ண நாங்க நல்ல இடத்துல, நிலையான சம்பளத்துல, உக்காந்து வேலை பாக்குறவனுக்கு தான் கொடுக்கறதா இருக்கோம்” என்று நடு மண்டையில் சுருக்கென்று கொட்டிச்செல்லும் சமூக அமைப்பு ஒரு பக்கம்...

எவ்ளோ லட்சம் செலவு பண்ணி படிச்சேன் வேலையே கெடைக்கல...இப்ப இப்படி மார்கெட்டிங்க்ல கஷ்டப்படுறேன் என்று வருத்தப்படும் பி.ஈ படித்தவர்கள் ஒரு பக்கம்...

இப்பல்லாம் ஐடின்னு சொல்லுறாங்கபா...ஆனா வேலை நிச்சயம் இல்லையாமே எப்பவேணா தூக்கிடுவானுங்களாம்யா...என்று பொறாமையுடன்(!) கலாய்க்கும் வர்க்கம் ஒரு பக்கம்..

சென்னை போன்ற நகரங்களில் வீட்டு வாடகை என்ற பெயரில் கொள்ளைக்காரர்களின் நோக்கம் ஒரு பக்கம்...

ம்ம்...

வேலை தேடியாகனும்...மூனு வேலை சொந்தக்காசுல திங்கனும்...எவனையும் அண்டிப்பிழைக்க கூடாது...அப்பா...அம்மாவுக்கு இனியும்(!) கஷ்டம் கொடுக்க கூடாது...

”சார்...நான் என்ன வேலை வேணா செய்யிறேன்..வேலை தாங்க...”


இதற்கிடையில்...”வேலைவாய்ப்பில்லாத முன்னேற்றத்தை செயல்படுத்தி வருகிறது நிர்வாகம் கடந்த 10 வருடமாக...!”

தொடரும்...

கொசுறு: மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

10 comments :

 1. கரெக்டுதான் மாப்ள. இப்பொழுது எல்லாம் வேலை கிடைக்கிறது குதிரை கொம்புதான்.

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப கஷ்டம்தான் மாப்ளே

   Delete
 2. கவர்மெண்ட் மாப்பிள்ளை வேண்டும் என்று பெண் வீட்டாரும், அதிக வரதட்சிணை கேட்டு மாப்பிள்ளை வீட்டாரும் செய்கின்ற அக்கப்போரால் பாதிக்கப்படுவதென்னவோ இளமைதான்....

  ReplyDelete
  Replies
  1. பாடா படுத்துறாய்ங்கப்பா மிடில...

   Delete
 3. முன்னேறிய நாடுகளின் தொழில் நுட்ப வளர்ச்சியின் தாக்கம்,மூன்றாம் உலக நாடுகளுக்கும்.................ஹூம்!

  ReplyDelete
  Replies
  1. என்ன வளர்ச்சியோ அண்ணே ஸ்ஸ்ஸ் அபா மிடில

   Delete
 4. இஞ்ஜினியர்கள் நிறைய பேர் வேலையின்றி இருப்பது உண்மைதான்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. படி படிங்கறாங்க அப்புறம் மிதி மிதின்னு மிதிக்கிறாங்க...

   Delete
 5. அன்பின் விக்கி வெங்கட் - வேலை தேடுவதில் உள்ள இயல்பான செயலைப் பற்றிய பதிவு... என்ன செய்வது. வேலை தேடும் முன்னர் சிந்திக்க வேண்டும் . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சீனா அய்யா...

   Delete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி