வணக்கம் நண்பர்களே..”பர்ஸ் கனம்”...இதன் வலிமையே அவர் தம் மன வலிமையய் காட்டுவதாக இருக்கிறது...

எதற்கெடுத்தாலும் பெரியவர்கள் நாங்கள்லாம் அந்த காலத்துல உபயோகப்படுத்துன ஓட்ட காலனாக்கள் எப்படி இருக்கும் தெரியுமா..அப்ப ஒரு டீ இவ்ளோதான்..ஒரு வேலை சோறு இவ்ளோதான் என்று சொல்லி நம்மை வவுரு பர்னிங்க் ஆக வைப்பார்கள்..எங்க காலத்துல நிர்வாக அலுலர்கள் நேர்மையானவங்க...பாமரனுக்கு தெரியலன்னா உடனே உதவி செய்வாங்கன்னு சொல்லி கேட்டிருக்கேன்...


சரி இதெல்லாம் ச்சும்மா ட்ரைலர் தான்...மெயின் பிக்ச்சர் போலாம் வாங்க...

வெளிநாட்டு கூலி(!) வேலையில் இருக்கும் நான் பெரியவர்களுக்கு பணம் அனுப்புவதை முடிந்த வரை வெஸ்டர்ன் யூனியன் எனப்படும் வழியிலேயே அனுப்பி வந்தேன்...ஏனெனில் நம்ம வங்கிகள் வேகம்(!) பற்றி தெரியும் என்பதாலும்...மேலும் 49,999 வரை அனுப்பினால் நாலு நாள் கழிச்சி கெடைக்கும் கேள்வி குறைச்சலாய்...அதே நேரத்தில் 50 ஆயிரமாக இருந்தால் கேள்விகள் அதிகம்..."Source of Income"...அதாவது எந்த வழியில் இந்தப்பணம் வந்தது...அவரின் முழு ஜாதகம் தந்து அங்கிள் ச்சே அங்கிருக்கும் ஒரு படா ஆளு ஓகே பண்ணாத்தான் பணத்தை தருவாக என்பதும் நான் சொல்லியா உங்களுக்கு புரியனும்..

western union மூலமே அனுப்பப்பட்ட பணம் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டு இருந்ததால்...அவர்கள் செக்காக பெரியவரின் வங்கி கணக்குக்கு கொடுத்து விட்டார்கள்...அந்த செக்கை கொண்டு போய் பெரியவரும் அவர்தம் வங்கி கணக்கில் செலுத்தி விட்டார்.....கிட்ட தட்ட 5 நாட்களாக அலைக்கழிப்பு...என்னடான்னா அந்த செக்கை தொலைத்துவிட்டார்களாம்..நீங்க கொடுக்கவேல்ல என்று அவர்களும் சதாய்க்க...கொடுத்தற்க்கான ரசீதை இவர்கள் காட்ட...அதைக்கொடுங்கள் சரி பார்க்கிறோம் என்று அவர்கள் வாங்கிக்கொண்டார்கள்...

மீண்டும் நீங்க அப்படி ஒரு செக்கே போடலன்னு வாதம் தொடர்ந்தது...75 ஆயிரம் ரூபாய்கள் அதுவும் அவசரமாக என் தாயின் மருத்துவ செலவுக்காக அனுப்பியது...

இது வரை பொறுமை காத்த என் நண்பர்கள் நேரே அந்த ப்ராஞ்சுக்கு சென்றார்கள்...விசாரிக்க வேண்டியவரை கூப்டு விசாரிக்க வேண்டிய வழியில் விசாரிச்சதும்தான் தெரிஞ்சது...அஜாக்கிரதையாக விட்டு இருக்கிறார்கள் என்று...ஃபைல்கள் அடுக்கி வைக்கும் அலமாரியில் அனாமத்தாக இருந்திருக்கிறது அந்த செக்...

பின் அதை மீண்டும் அக்கவுண்டில் போட்டு எடுக்க அடுத்து ஒரு நாள் ஆகிவிட்டது...

இப்படிப்பட்ட லட்சணத்தில் இவனுங்களுக்கு நிர்வாக அலுவலர்கள் என்ற இறுமாப்பு வேறு...அல்லக்கை நாதாரிகள்...பொது சனத்துக்கு துளியும் மரியாதை கொடுக்க வக்கில்லாத இவர்களுக்கு தான் எத்தனை வசதிகள்...மக்களின் வருகை இல்லையெனில் வங்கிகள் எப்படி நடக்கும்...

நிற்க...இந்த முறை வீட்டம்மாவுடன் அங்கு செல்ல வேண்டி வந்தது...

தலைக்கு மேலே குளிர் சாதனப்பெட்டி வைத்துக்கொண்டு சொந்த வீட்டு வேலைக்கு ஜல்லி வந்ததா என்று கேட்டுக்கொண்டு இருந்தார் அந்த அலுவலர்...அவரிடம் இந்த பாஸ் புக்குல வரவு எண்டர் செய்ய சொல்லி வீட்டுக்காரம்மா கேக்க...ஏ போம்மா அங்கன போய் உக்காரு முக்கியமா பேசிட்டு இருக்கேன்னு அவர் சொல்ல...நான் அங்கு போய் நின்றேன்..

“என்ன சார் ஞாபகம் இருக்கா எனக்கேக்க”

“யாருய்யா நீ”

“ போன வருசம் 75 ஆயிரம் ஓவா செக்க தொலைச்சிட்டு பெரியவங்கள அலைக்கழிச்சீங்களே...அந்த பணத்துக்கு சொந்தக்காரேன்” என்றேன்..

உடனே பாஸ் புக்கை வாங்கி எண்டர் செய்தார்...

பொது சனம் இன்னும் எத்தனைக்காலம் தான் இந்த நிர்வாக அல்லக்கைகளிடம் பணிந்து போகனுமோ தெரியல...

கொசுறு: வாழ்க சன நாயகம்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

4 comments :

 1. நீங்கள் online Transfer முயற்சி செயுங்கள் இதுவரை எனனக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை.

  ReplyDelete
 2. After Published my comment, My profile photo has been replaced to Mr. DD's comment... May be minor issue in the site pls chk...

  ReplyDelete
 3. amanga thala..nadhari pasanga..nama kudukkura kasa accountla potu tharathukku ennamo ivan pocketla irunthu eduthu tharra madhiri, cheque podum pothellam film kattuvanga... ithukkagave enga vettukku oru dollar travel card vangi koduthutten

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி