நீல வேணி - ஆறா ரணம்!


வணக்கம் நண்பர்களே...தாய் நாட்டு வாசம் இன்றும் அடித்துக்கொண்டு இருக்கிறது. எம் மண்ணை தொட்டு விட்டு வந்து விட்டேன்...அது போதும் இன்னும் ஒரு வருடம் தாங்கும் மனசு.

எத்தன தபா தான் சொல்றது..”மீண்டும் டைப்பறேன்னுட்டு”..எனவே தங்களின் பொறுமையய் சோதிக்க எண்ணமில்லாமல் டைப்பறேன்...

இந்த பதிவு பல வீடுகளில் நடந்து கொண்டு இருக்கலாம்...இது ஒரு சுய மற்றும் நிஜ சம்பவம்..

என்ன மாம்ஸ் எப்படி இருக்கீங்க..

நல்லாதான் இருக்கேன்...டேய் புள்ளய ஸ்கூல்ல கொண்டு போயி விட்டு வர்றியா...எதோ பேரண்ட்ஸ மீட் பண்ணனுமாம்...நான் என்னத்த அங்க போயி பேசப்போறேன்..இன்னான்னு கண்டுகினு வாடா...

சரி மாம்ஸ்...

பள்ளியில்..(நான் சிறு வயதில் தோளில் தூக்கிப்போட்டு ஆராரிராரோ(!) பாடிய என் செல்ல மாமன் மகள் இப்போது 11வது வகுப்பு!)

இங்க பாருங்க தம்பீ....இந்த பொண்ணு தினமும் ஒருத்தன செவுல்லயே அடிக்கிறான்னு கம்ப்ளைண்ட் வருது..ஆம்பிளை பசங்கள கண்டாலே இவளுக்கு ஏனோ பிடிக்கிறதில்ல...வீட்ல என்ன பிரச்சினைன்னு கவனிங்க...

சரிங்க மேடம் நான் பாத்துக்கறேன்...

ஏம்மா என்ன தான் பிரச்சினை....

எனக்கு ஆண்கள பாத்தாலே வெறுப்பா இருக்கு...உங்க கிட்ட கூட ரெம்ப நேரம் பேசுறதே அருவருப்பா இருக்கு...

ஓ சரிம்மா வா என் ஃப்ரெண்டு இத சரிப்படுத்திடுவா...

டாக்டர் நண்பியை கண்டோம்...அவள் இது ஒரு வித டிப்ரசன் மற்றும் ஸ்ட்ரஸ்ஸால் வருவது என்று கூறி பல வழிகளை கூறி ஒரு வருடத்தில் குணமாக்கினார்...


சில வருடங்கள் கழித்து...

டேய் விக்கி....எம் பொண்ண என்னவெல்லாம் பேசுறாங்கடா...நானும் அவ கிட்ட பேசிப்பாத்தேன்..போய்ய்யா நான் எவன் கூட வேணா சுத்துவேன் உனக்கென்னன்னு எடுத்தெறிஞ்சி பேசிட்டாடா....

விடுங்க மாம்ஸ்...குழந்த அது...சரியாயிடும்..இந்த வயசுல அப்படித்தான் சோசியலா இருக்கும் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க...

கொஞ்ச நாள் கழித்து...

மாம்ஸ் எப்படி இருக்கீங்க...நல்லா இருக்கேன் வேணி...

உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்...என்னைய வெளிய கூட்டி போறீங்களா...

சரி வாயேன்...எங்க வீட்டுக்கு என்று அழைத்து சென்றேன்...

என்னா விசயம் சொல்லு...

நான் உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசப்படுறேன்...

என்ன வேணி காமெடி பண்றயா...நான் தூக்கி வளத்த குழந்த நீ...இப்படில்லா பேசுறது தப்பும்மா...ரெண்டு நாளு முன்னாடி தான் எனக்கு திருமண நிச்சயம் ஆகி இருக்கு...நீ கூட வந்தியே...ஏன் இப்படில்லாம் பேசுற...

அதெல்லாம் முடியாது...நீங்க என்னைய கல்யாணம் பண்ணியே ஆகோனும்..இல்லன்னா உங்க கல்யாணத்த நடக்க விடமாட்டேன்...

ஹாஹா அப்படியா...சரி ஜோக் அடிச்சது போதும் கெளம்பு...

(என் திருமணத்துக்கு வந்த அவள் அமைதியாக நின்று பார்த்துவிட்டு சென்று விட்டாள்!)

அடுத்த சில மாதங்களில் ஒரு நாள்...

மாப்ளே அதோ வர்றாளே அவள வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லு...அவ முகத்துல முழிக்கவே எனக்கு பிடிக்கல..

ஏய் வேணி என்னாதிது..கழுத்துல தாலி...

எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி...நேத்துதான்..என் புருசன் இப்ப வருவாரு..ஒழுங்கா வீட்டுக்குள்ள மரியாதையோட கூப்பிட சொல்லுங்க இவிங்கள...

(வீட்டில் சமாதானம் செய்து வைத்து...வீட்டுக்குள் அழைத்தோம் மாப்பிள்ளையை...)

மாப்ள தம்பீ..இவ குழந்த மாதிரி ஜாக்கிரதையா பாத்துக்கங்க..

நோ பிராப்ளம் பிரதர்...நான் பாத்துக்கறேன்..

(மாப்பிள்ளை வீட்டில் இத்திருமணத்தை ஏற்கவில்லை...7 மாதங்களில் பெண் குழந்தை வந்து விட்டது!)

அன்று:

என்ன விக்கி எப்படி இருக்கீங்க...

ஏய் என்னாதிது இப்படி உருக்குலைஞ்சி போயிருக்க வேணி...

எல்லாம் என் விதி விக்கி...

அவள் தந்தையை நோக்கி...

என்ன மாம்ஸ் இது...

இவளுக்கு மன நோய் இருப்பதாகவும் இவளை வைத்து குடும்பம் நடத்த இயலாதுன்னும்...மருமகன் கூட்டியாந்து விட்டு போயிட்டான் மாப்ளே...நானும் பல மருத்துவமனை கூட்டி போயிட்டேன்...ஒன்னும் சரியாகல...ரெண்டு நாளு முன்னாடி கூட வீட்ல இருக்க பெட் பெட்ஷீட்டெல்லாம் எடுத்து போட்டு தீ வைச்சிட்டா...ஃப்யூஸ் பாக்ஸ்ஸெல்லாம் பத்திகிச்சி...இந்த கொடுமையெல்லாம் பாக்க முடியாம இவ ஆத்தாளும் போயி சேந்துட்டா...இந்த வயசான காலத்துல இன்னும் நான் ஏன் இருக்கேன்னு தெரியல...

அவளின் தம்பியிடம் பேசிய போது...

மாம்ஸ் இவ ஆடாத ஆட்டமில்ல...இப்ப பாருங்க...இவ புருசன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போறானாம்...நானும் போய் பேசிப்பாத்தேன்..மாசம் இவ்ளோன்னு கொடுத்துடுறேன்...ஆள விடுங்கடாங்கறான்...

டேய் முத மனைவி இருக்கும் போது..இன்னொன்னு எப்படி கட்டுவான்...வாடா பேசிப்பார்ப்போம்...

வேணாம் மாம்ஸ்...அவன் எத்தனையோ தடவ இங்கு வந்து இவ கிட்ட பேசிப்பாத்தான்...அவன பல முறை கல்ல கொண்டு எறிஞ்சா..அருவா மனையால தலைலயே போட்டா...அதெல்லாம் கம்ளைண்டாக்கி வச்சிருக்கான்...

மாத ஜீவனத்துக்கு வழி கிடைத்தாலும்...அவள் வாழ்க்கை போனது மனதில் ஆறா ரணமாகிப்போனது...

கொசுறு: ஏய் மஞ்ச மாக்கான் மாமா...என்றாள் அன்று...மஞ்சளுக்கு காரணம் தேடுகிறாள் இன்று...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

5 comments :

 1. சில நிஜங்கள் சுடுகின்றன. மனம் வலிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நடக்கனும்னு இருக்கு அண்ணே..

   Delete
 2. விக்கி,சீரியஸ் பதிவிற்கு தக்க வார்த்தை பிரயோகம் வேண்டும் இது என் வேண்டுகோள்.

  ReplyDelete
 3. புரிந்து கொண்டேன் கேசவரே...இனி மாற்றிக்கொள்கிறேன்..நன்றி

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி