எதுக்குய்யா பதிவர் சந்திப்பு - !?

வணக்கம் நண்பர்களே...யாரிந்த பதிவர்கள்(!), ஏன் இவ்வளவு அமர்க்களம் எதற்க்காக இப்படி எதையோ கண்டு விட்டது போல கும்மாளம்..இப்படியெல்லாம் நீங்க வெதும்பினால்...அதற்க்கு பெயர்

 “இயலாமையே பொறாமைக்கு காரணம்” என்பேன்...

வாங்க...அப்படி என்னதான் இவங்க செய்யறாங்கன்னு பார்ப்போம்...உலகம் முழுக்க தங்களின் வாழ்வாதாரத்துக்காக பரவிக்கிடக்கும் தமிழர்கள்...தங்களை தங்கள் சமூக மக்களுடன் ஒன்றிணைந்து மனதை லேசாக்கி கருத்துகளை பகிர்ந்து கொண்டு அனைவரும் ஒரு இன்ச் அளவுக்காவது வாய் விட்டு சிரிக்க களம் அமைத்துக்கொடுத்த ”இணையம்” எனும் புண்ணியவானுக்கு தான் முதல் நன்றி தெரிவிச்சிக்கனும்...


ஒவ்வொருவரின் சூழ்நிலையும் வெவ்வேறாக இருப்பினும்..”தமிழால்” இணைந்து புன்னகைக்கிறார்கள்...இதில் என்ன வேண்டி கிடக்கு போட்டி பொறாமை...


தங்களுக்கு தோன்றிய விசயங்களை இறக்கி வைக்கவும்...நாலு பேரு அதை பார்த்து சந்தோசப்படவுமே பதிவர்கள் உருவானார்கள்...இதில் தப்பும் தவறுமாக(!) எழுதினாலும்...அதையும் மன்னிக்கும் உள்ளங்கள் மிகப்பெரிய பொறுமை சாலிகள்(!) என்பதும் போற்றுதற்க்குரியது...

நாமறியாத..உலக விசயங்களை நாம் இங்கு வந்தே பெரும்பாலும் அறிந்து கொள்கிறோம்...கை வலிக்க தமிழில் டைப்பும் ஒவ்வொரு பதிவனும் எதையும் பெரிதாக எதிர்ப்பார்ப்பதில்லை...அதிகப்படியாக தன் ஆளுமைக்கான மதிப்பை மட்டுமே எதிர்ப்பார்க்கிறான் என்பது எமது தாழ்மையான கருத்து...


களத்தில் இருப்பவர்களை சந்திக்க செல்கிறோம் ஏன்...

முகம் அறியா நட்புகள்...வேலைப்பளுவால் பக்கத்தில் இருப்பவனிடம் கூட பேச இயலாத நம்மை தட்டி கொடுத்து நாங்கள் இருக்கிறோமடா...உனக்கான மதிப்பை அளிக்க என்று கூடிய நட்புகள்..

வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கோ இருந்து பறந்து வரும் பறவைகள் சந்திக்கும் சரணாலயமே “பதிவர் சந்திப்பு”...

இச்சந்திப்பை நிகழ்த்தும் பெருமகனார்கள்...தங்கள் உடல் உழைப்பு, நேரம், குடும்பம், சொந்தப்பணி...இவையெல்லாம் கடந்து சந்திப்பவர்களின் முகத்தில் ஏற்படும் சந்தோசத்தில் தங்களை மறக்கிறார்கள் என்று சொல்வது மிகையாகாது...

அப்படிப்பட்ட சந்திப்பை தான் நானும் கண்டேன்...சென்னையில் நடத்திய விழாக்குழு அங்கத்தினர் அனைவருக்கும் எமது பணிவான நன்றிகள்...

நண்பர்கள் கூடி மகிழும் இடத்தில் வெற்றி தோல்விக்கான களம் இல்லை என்பதே எமது சிற்றறிவுக்கு தோன்றுகிறது...

இது நமது விழா...நமது நண்பர்கள் பங்கேற்கிறார்கள் என்ற எண்ணமே நமது அனைத்து செயல்களையும் முன்னிறுத்தும்..

எமது பார்வையில்...


விழாக்குழுவினர் ஒவ்வொருவர் முகத்திலும் சந்தோசம் நிறைந்திருந்தது...நமது கல்யாண வீட்டில் யாரும் சங்கடப்படும்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்பட்டுக்கொண்டு இருந்தனர்...காற்றாலை பிரச்சினை எழுந்ததும் உடனடியாக அதை தீர்க்க போராடினர்..

நிற்க நான் உள்ளே இருந்த நேரம் குறைவு என்பதை ஒத்துக்கொள்கிறேன்...

ஏனெனில் இவர்களின் எழுத்தின் ஆளுமையே என்னை கட்டிப்போட்டதேயன்றி பேச்சு அல்ல என்பதாலும், பேச்சுக்களை கவனிக்கும் அளவுக்கு பக்குவம் எமக்கு இல்லை என்பதாலும் வெளியவே வெகு நேரம் இருந்தேன் - மன்னிக்கவும் இது எமது தாழ்மையான கருத்து..

வெளியூரில் இருந்து வந்த ஒவ்வொருவரையும் தனியே கவனித்து செயலாற்றியவர்களை வாழ்த்துவோம்...


பதிவர் விழா மூலம் பல நல்ல காரியங்கள் நிகழ்கின்றன...குறிப்பாக இந்த பதிவர் சந்திப்பு மூலம் நல்ல உள்ளம் ஒன்றுக்கு உதவி செய்யவாய்ப்பு கிடைத்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி...

இப்படிப்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் நண்பர்கள் மேலும் இணைவார்கள் என்பது எமது பார்வை...


நிற்க...வெறும் அறிவுரைகளால் மட்டுமே இவ்வுலகம் சுழன்று விடவில்லை...ஆற்றலுடன் கூடிய செயல்களால் என்பதை இந்த சந்திப்பு எமக்கு உரைத்தது...

அனைவருக்கும் நன்றிகள்...

கொசுறு: இனியாவது நண்பராக சந்திப்போமாக...(சிலருக்காக!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. // ஆற்றலுடன் கூடிய செயல்களால்... // நச்... நச்...

  வாழ்த்துக்கள்... நன்றிகள்...

  ReplyDelete
 2. நன்றி நண்பரே திண்டுக்கல் தனபாலன்..தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

  ReplyDelete
 3. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. எமக்கும் மிக்க மகிழ்ச்சி தங்களை சந்தித்ததில் நண்பரே

   Delete
 4. மிக்க மகிழ்ச்சி மாம்ஸ் .. :-)

  ReplyDelete
 5. நல்ல சந்திப்பு...நானும் கலந்து கொண்டதில் மகிழ்வு..
  உங்கள் பதிவு மீண்டும் ஒரு நினைவலையை நெஞ்சில் பேரலையாய் தாக்கியது

  ReplyDelete
 6. அன்பின் விக்கி வெங்கட் - நல்லதொரு பதிவு - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சீனா அய்யா...தங்கள் கருத்துகளுக்கும் நன்றி

   Delete
 7. ஆனா கடைசி வரைக்கும் கண்ணுல காட்டவே இல்லையே மாம்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா என்னய்யா கடைசி வரைக்கும் காட்டல...பிரியல பிரியல மாப்ளே

   Delete
 8. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்

  ReplyDelete
  Replies
  1. எமக்கும் மிக்க மகிழ்ச்சி தங்களை சந்தித்ததில் சரவணன் சார்

   Delete
 9. மிகச்சிறந்த படைப்பு. தங்கள் உள்ளக்கருத்துக்கள் தெளிவுபடக்கூறிய்ள்ள பாங்கு எனைக்கவர்ந்தது. # பதிவு மாதிரியே கமெண்ட்.

  ReplyDelete
 10. சில பல சுட்ட படங்களுக்கு ராயல்டி எப்போ தருவீக! :)

  ReplyDelete
  Replies
  1. எது ராயல்டியா அப்பிடின்னா என்னான்ணே அவ்வ்

   Delete

 11. விக்கி இப்பதிவின் மூலமே பதிவர் சந்திப்புக்கு தாங்கள் வந்து சென்றதை அறிந்தேன் வயதான கிழவன் தானே என என்னை ஒதுக்கி விட்டீர்களா!!?நீங்கள் வந்தது எனக்குத் தெரிந்திருந்தால் நானே தேடி வந்திருப்பேனே! இது மிகவும் கொடுமை

  ReplyDelete
 12. புலவர் இராமாநுசம் said...

  விக்கி இப்பதிவின் மூலமே பதிவர் சந்திப்புக்கு தாங்கள் வந்து சென்றதை அறிந்தேன் வயதான கிழவன் தானே என என்னை ஒதுக்கி விட்டீர்களா!!?நீங்கள் வந்தது எனக்குத் தெரிந்திருந்தால் நானே தேடி வந்திருப்பேனே! இது மிகவும் கொடுமை

  >>>>

  அண்ணே நீங்களும் சென்னைப் பித்தன் அய்யாவும் பக்கதில் அமர்ந்து இருந்தீர்கள்..உங்களிடம் வந்து கால் தொட்டு ஆசீர்வாதம் வாங்கி சென்றேன்...மன்னியுங்கள் ப்ளீஸ்...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி