ஏர் போர்ட் - கவனக்குறைவுகள் ஏன்!~

வணக்கம் நண்பர்களே...எமது இயந்திரத்தனமான வாழ்வில் எமக்கு கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்களில் ஒன்று வருட விடுமுறை நாட்கள்...அதை எப்படி கையாண்டோம்...எப்படிப்பட்ட கவனக்குறைவுகள் என்பது பற்றிய பதிவு இது..

அவசர கதியில் விமான டிக்கட் கிடைக்கப்பெற்று தாயகத்துக்கு பயணமானோம்...

தாயகம் போய் சேர்ந்தது தான் தெரியும்...கடமைகள் அழைத்ததால் பறக்க வேண்டியாயிற்று...ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டபடி முடிக்க ஆரம்பித்தேன்...

எமது அத்துனை வேலைகளையும் முடித்து கொண்டு 14 செப்டம்பர் மாலை 5 மணிக்கு விமான டிக்கட்டை கவனித்த எனக்கு கிர்ர்ர்ர் என்றது...எதோ கவனக்குறைவினால் விமானத்தை விட்டு விட்டோம் என்றே தோன்றியது...

விமான டிக்கட்டில் குறிப்பிட்ட தேதி...

14 செப் - 00.25 - பாங்காக் என்று இருந்தது....

அடடா என்று வருந்தினாலும்...சின்ன டவுட்டு சரி க்ளியர் பண்ணிக்கலாம்னு எனது உதவியாளர்க்கு ஃப்போன போட்டேன்...

“ஆமா சார் நீங்க விமானத்தை தவற விட்டுட்டீங்க...அது அதிகாலை 12.25 மணி விமானம்” என்றாள்..

அவ்வ்...”சரிம்மா ட்ராவல் ஏஜண்ட் கிட்ட பேசு...என்ன செய்யலாம்னு கேளு” என்றேன்..

”யோவ்....இன்னிக்கி சனிக்கிழமை...நாளை ஞாயிறு...ஒரு ஆணியும் நடக்காது...திங்கள் கிழமைதான் எதுவேணும்னாலும் செய்ய முடியும்னு சொல்லிட்டாங்க” என்றாள்..

சரி முதல்ல நாம ரிலாக்ஸ் பண்ணிப்போம்...அப்பதான் சரியா இதை கையாளமுடியும்னு நெனைச்சேன்...

இதுக்குள்ள வெளிய கடைக்கு போன மனைவி...அங்கே இருக்கும் ஒரு ட்ரெயின் புக்கிங் ஏஜெண்ட் கிட்ட இதை விசாரிக்க அவரும் ஒன்னும் ப்ரச்சினையில்ல டிக்கட் டேட் படி இன்னிக்கி இரவுதான்னு சொல்ல...அங்கிருந்து வந்த மனைவி என் பேச்சை ஒத்துக்கவே இல்ல...

“யோவ் உனக்கு எப்ப பாரு எதுல காமெடி பண்றதுன்னே இல்லய்யா...பிபி ஏத்தி பாக்குறதுல இன்னா சந்தோசம் உனக்கு ராஸ்கல்” என்றாள்...

இது ஆவுறதுல்ல...சரின்னு பொட்டிய கட்டிகிட்டு கெளம்பினோம்...

போகும் வழியில் நண்பர் பல ஆயிரம் நம்மூரு கரன்சிகளை கையில் திணித்து வைச்சிக்கங்க...எதாவது தேவைன்னா யூஸ் ஆகும்னாரு...ஸ்ஸ்ஸ் அபா..என்று கெளம்பினோம்...

போகும் வரையில் மனைவிக்கு சற்று புரிய ஆரம்பித்தது போலும்...சரிய்யா இப்ப என்னதான் செய்யிறது என்றாள்..

எப்படியும் வாலிடிட்டி 1 மாசம் இருக்கு டிக்கட்டுக்கு...நீ ஒன்னும் பேசாதே...கவுண்டரில் போயி எப்பவும் போல டிக்கட்டை கொடு...அப்புறம் என்னா சொல்றாங்கன்னு பாத்துப்போம் என்றேன்...

இதற்க்குள் போக வர புக் செய்திருந்த டாக்சியயும் இரண்டு மணி நேரம் ஏர்ப்போர்ட்டில் நிற்க சொல்லிட்டி சென்றோம்..

டிக்கட் கவுண்டரில் செக்கின் செய்யும் போது கவனித்த அலுவலர்...”சாரி மேடம் இது நேற்று பின்னிரவு பயணத்துக்கான டிக்கெட்...தவறுதலாக இன்று வந்துருக்கீங்க” என்றார்..

ஓ...அப்படியா...இப்ப என்ன சார் பண்றது என்று மனைவி வினவ...

நீங்க புது டிக்கெட் தான் வாங்கனும்...கொஞ்சம் வெயிட் பன்னுங்க மேனேஜர் 11 மணிக்கு மேலே வருவார் கேட்டு சொல்றேன் என்றார்...

ஏன் சார் வாங்கனும்...ப்ளீஸ் கேட்டு சொல்லுங்க நாங்க வெயிட் பண்றோம் என்றாள்...

இரு விமானங்கள் வேறு என்பதால்...பேங்காக் டூ ஹனோய் டிக்கட்டையும் செக் செய்து பார்த்துக்கொண்டார்...

நாங்கள் போக வேண்டியது தாய் ஏர்லைன்ஸ் என்பதால் கூட்டம் குறைவு...என்பதால் தப்பினோம்..


11 மணிக்கு இரு வேறு ப்போர்டிங்க் பாஸ் போட்டு கொடுத்தார்...நன்றி சொன்னோம்...

“மேடம்...இனி ஜாக்கிரதையா கவனிங்க டிக்கட் நேரத்தை...இன்று ஃப்ளைட்டில் ஆட்கள் குறைவு அதனால தான் உங்களுக்கு கிடைத்தது” என்றார்...

நன்றி சொல்லிவிட்டு கெளம்பினோம்...

கொண்டுவந்த நம்மூரு கரன்சிகளை கூட வந்திருந்த மாமி...மாமாவிடம் கொடுத்து நண்பரிடம் திரும்ப கொடுத்து விடும்படி கூறினோம்...ஃப்போன போட்டு அவருக்கும் மிக்க நன்றி சொன்னோம்...

நேற்று...

நண்பர் ஒருவர்...அவரும் இதே போல டிக்கட் நேரத்தை கவனக்குறைவாக விட்டு விட்டாராம்...விட்டவர் வியட்நாம் அலுவலகத்துக்கு ஃப்போன் போட்டு கேட்டு ஒன்றும் செய்ய இயலாது என்றதும்..பதட்டத்தில் இன்னொரு ஏஜெண்டிடம் 25,000 ரூவாக்கள் கொடுத்து டிக்கெட் எடுத்து கெளம்பிவிட்டார்...மற்ற குடும்ப அங்கத்தினர்களுக்கு பெனால்டி 3 ஆயிரம் ஒருவருக்கு வீதம் கட்டி அடுத்த வாரத்துக்கு டிக்கெட் போட்டு கெளம்பி இருக்கிறார்...இவர் தனியாகவும்..அவர் தம் குடும்பம் ஒரு வாரம் கழித்தும் இங்கு வந்து சேர்ந்திருக்கின்றன..

நண்பர் போனது மலேசியன் ஏர்லைன்ஸ் என்பதால் டிக்கெட் எப்பவும் ஃப்புல்லாக இருந்ததால் ஒன்றும் மாற்றம் செய்ய இயலவில்லை...என்றார்..

என்னை சந்தித்த போது...மிகவும் வருத்தமுடன் தன் இழப்பை கூறினார்...என் நிகழ்ச்சியை கேட்டதும்...சார் எப்படி சார் பணம் கொடுக்காமல் வந்தீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டார்...நான் சொன்னதை முழுதாக நம்பியது போல தெரியவில்லை அவ்...

பயண டிக்கெட்டுகளில் நேரத்தின் பக்கத்தில் ”காலை(am) மாலை(pm)” போன்ற குறிப்புகள் மிக்க தேவைப்படுகின்றன...உணர்வார்களா!...

இந்த பதிவு மூலம் சொல்ல வந்தது...பயணங்களில் மிக கவனம் தேவை...ஏர்லைன்ஸ் டிக்கட்டுகள் கிழமைகள் போடுவதை வழக்கமாக கொண்டால்...இப்படிப்பட்ட கவனக்குறைவுகள் ஏற்படுவது களையப்படும் என்பது எமது தாழ்வான பார்வை...


நிற்க 24 மணி...12 மணி வித்தியாசங்கள் இன்னும் நமக்கு சரிப்படவில்லை என்றே நினைக்கிறேன்...இறை அருளில் பல முறை விமான பயணம் மேற்கொண்ட எனக்கு இப்படிப்பட்ட அனுவம் இதுதான் முதன் முறை...நேரம் ஒதுக்கி படித்தமைக்கு நன்றிகள்...நண்பர்களே..

கொசுறு: நம் கவனக்குறைவினால் கோபம் தலைக்கேறினாலும்(!)...அது 5 நிமிடங்களே இருத்தல் வேண்டும்...இயல்பு நிலைக்கு வந்துவிட்டால் எதையும் எந்த நிலையிலும் சரிவர கையாளலாம்...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

28 comments :

 1. பதட்டப்படாமல் இருந்தது பெரிய விசயம் தான்...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே 5 நிமிசம் இருந்தது பதட்டம்..அப்புறம் எமக்கு அதே பழகிடும அவ்வ்..சோ நோ டென்சன் ஹாஹா

   Delete
 2. இது அனுபவத்தின் வாயிலாகக் கிடைத்த நிதானம்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா நல்ல வேல அடிகிடைக்கல அவ்வ்

   Delete
 3. எதிலும், எங்கும் பதட்டப்படாமல் செயல்படுவதே உங்கள் தனித்திறமை.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் ஜர்க்கானேன் அண்ணே...அப்புறம் பாத்துக்கலாம்னு கெளம்பிட்டேன்..அப்ப கூட மாமி கொடுத்த இட்லிய சாப்டுதான் கெளம்பினேன் அவ்வ்

   Delete
 4. //“யோவ் உனக்கு எப்ப பாரு எதுல காமெடி பண்றதுன்னே இல்லய்யா...பிபி ஏத்தி பாக்குறதுல இன்னா சந்தோசம் உனக்கு ராஸ்கல்” என்றாள்...//
  அவ்ளோதானா! மற்றவை அவைக்குறிப்பில் நீக்கப்பட்டவையா? :)

  ReplyDelete
  Replies
  1. வாங்குன வசையெல்லாம் சொல்லனுமா அண்ணே ஹிஹி

   Delete
 5. பதட்ட நேரத்திலும் படங்களை அழகாக க்ளிக்கி பதிவிட்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா...படங்கள் கூகுளாண்டவர் தயவு அவ்வ்..

   Delete
 6. பதட்டமான நேரத்திலும் பிரச்சனையை கையாண்ட விதம் அருமை.... நன்றி விக்கி அண்ணே...

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் பதட்டம் இருந்தது 5 நிமிசத்துல அதே பழகிடிச்சி வருகைக்கு நன்றி தம்பீ..

   Delete
 7. அண்ணிக்கிட்ட செம மாத்து வான்காம தப்பீச்சீங்கண்ணா!

  ReplyDelete
 8. உங்களுக்கு இந்த அணுபவம் லேட்டா தான் கிடைச்சிருக்கு....(பரவாயில்லேன்னு உங்களுக்குள்ளேயே மெச்சிகோங்க..ஹி ..ஹி ).. எங்களுக்கு முதல்லேயே இந்த அணுபவம் கிடைசிடிச்சி..அவளவுதான் வித்தியாசம்...எல்லோரும் இதற்கு விதி விலக்கல்ல என்று தெள்ள தெளிவாக தெரிகிறது. ஆனால் இதை படிகின்ற ஓவ்வொருவருக்கும் இது மிக பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

  ReplyDelete
 9. // 24 மணி...12 மணி வித்தியாசங்கள் இன்னும் நமக்கு சரிப்படவில்லை என்றே நினைக்கிறேன்...// இதில் என்ன கஷ்டம் விக்கி, நம்ம ஊர் ரயிவேயில் கூட இதேமாதிரிதான் இருக்கு. நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா? சிரிச்சி என் மானத்த வாங்க வேண்டாம். இனிமேல் பயண நேரம், கிழமை ,காலை, மாலை, / இரவு மற்றும் தேதி இவைகளை கொட்டை கொட்டையா எழுதி டெஸ்க் டாப் படமாக வைத்துகொள்ளவும். நான் இப்படிஎல்லாம் செய்வதில்லை. மாத காலண்டரில் அன்றய தினத்தை வட்டமாக சுழித்து வைத்துவிடுவேன்.

  ReplyDelete
 10. "கோபம் 5 நிமிடங்களே இருத்தல் வேண்டும்...இயல்பு நிலைக்கு வந்துவிட்டால் எதையும் எந்த நிலையிலும் சரிவர கையாளலாம்...!" மிகச்சரியான வார்த்தைகள்
  எதற்காகவும் கோபப்படக்கூடாது கவலையும் படக்கூடாது என்பது என் அனுபவ மொழி. நீங்கள் இதைக் கடைபிடிப்பது பாராட்டுக்குரியது. நிச்சயம் மற்றவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமே!

  ReplyDelete
 11. ஹா..ஹா..நானும் இந்த மாதிரி பல்பு வாங்கியிருக்கேன். ஆனா உல்டாவா! டிக்கெட் புக் பண்ணதே ஒருநாள் முன்னாடி. வேற வழியில்லாம ஒருநாள் முன்னாடியே வந்து தேவுடு காத்திருக்கேன்!

  ReplyDelete
 12. பதட்டமே நமது எதிரி! நிதானமாக விசயத்தை கையாண்டு வெற்றிகரமாக பயணத்தை தொடர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 13. நல்ல வேளை! தப்பித்தீர்கள்! வந்து போனது தெரியாதே

  ReplyDelete
 14. மாம்ஸ்... தாழ்வான பார்வை'ன்னா என்ன ? படுத்துக்குட்டே பார்ப்பீங்களே... விளக்கம் தரவும்...

  ReplyDelete
 15. ராஜி said...
  அண்ணிக்கிட்ட செம மாத்து வான்காம தப்பீச்சீங்கண்ணா!

  >>>

  ஹாஹா அவ்வ்

  ReplyDelete
 16. Guru said...
  உங்களுக்கு இந்த அணுபவம் லேட்டா தான் கிடைச்சிருக்கு....(பரவாயில்லேன்னு உங்களுக்குள்ளேயே மெச்சிகோங்க..ஹி ..ஹி ).. எங்களுக்கு முதல்லேயே இந்த அணுபவம் கிடைசிடிச்சி..அவளவுதான் வித்தியாசம்...எல்லோரும் இதற்கு விதி விலக்கல்ல என்று தெள்ள தெளிவாக தெரிகிறது. ஆனால் இதை படிகின்ற ஓவ்வொருவருக்கும் இது மிக பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

  >>>>

  உண்மைதான் என்ன இனி சூதானமா இருக்கோனும்னு பதிவாயிடிச்சி ஹாஹா!

  ReplyDelete
 17. Manickam sattanathan said...
  // 24 மணி...12 மணி வித்தியாசங்கள் இன்னும் நமக்கு சரிப்படவில்லை என்றே நினைக்கிறேன்...// இதில் என்ன கஷ்டம் விக்கி, நம்ம ஊர் ரயிவேயில் கூட இதேமாதிரிதான் இருக்கு. நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா? சிரிச்சி என் மானத்த வாங்க வேண்டாம். இனிமேல் பயண நேரம், கிழமை ,காலை, மாலை, / இரவு மற்றும் தேதி இவைகளை கொட்டை கொட்டையா எழுதி டெஸ்க் டாப் படமாக வைத்துகொள்ளவும். நான் இப்படிஎல்லாம் செய்வதில்லை. மாத காலண்டரில் அன்றய தினத்தை வட்டமாக சுழித்து வைத்துவிடுவேன்.

  >>>

  அண்ணே அதுவும் சர்தேன்...டெஸ்க்டாப்ல தானே வாழ்க்கயே ஓடுது அவ்வ்!

  ReplyDelete
 18. Viya Pathy said...
  "கோபம் 5 நிமிடங்களே இருத்தல் வேண்டும்...இயல்பு நிலைக்கு வந்துவிட்டால் எதையும் எந்த நிலையிலும் சரிவர கையாளலாம்...!" மிகச்சரியான வார்த்தைகள்
  எதற்காகவும் கோபப்படக்கூடாது கவலையும் படக்கூடாது என்பது என் அனுபவ மொழி. நீங்கள் இதைக் கடைபிடிப்பது பாராட்டுக்குரியது. நிச்சயம் மற்றவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமே!

  >>>>>

  கோபம் வராத மனிதன் குறைவே...அதை வெளிப்படுத்தும் விதமும் நிதானமுமே வாழ்வை செழுமையாக்கும்...எனக்கு புசுக்குன்னு வந்து புசுக்குனு போயிரும் ஹாஹா!

  ReplyDelete
 19. செங்கோவி said...
  ஹா..ஹா..நானும் இந்த மாதிரி பல்பு வாங்கியிருக்கேன். ஆனா உல்டாவா! டிக்கெட் புக் பண்ணதே ஒருநாள் முன்னாடி. வேற வழியில்லாம ஒருநாள் முன்னாடியே வந்து தேவுடு காத்திருக்கேன்!

  >>>>

  யோவ் மாப்ளே நீயுமா...அரே ஓ சம்பா!

  ReplyDelete
 20. s suresh said...
  பதட்டமே நமது எதிரி! நிதானமாக விசயத்தை கையாண்டு வெற்றிகரமாக பயணத்தை தொடர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  >>>>

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 21. புலவர் இராமாநுசம் said...
  நல்ல வேளை! தப்பித்தீர்கள்! வந்து போனது தெரியாதே

  >>>>

  அண்ணே உங்க கால தொட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு போனேன்...நீங்க கவனிச்சீங்க ஆனா சத்ததுல கேக்கலன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 22. Philosophy Prabhakaran said...
  மாம்ஸ்... தாழ்வான பார்வை'ன்னா என்ன ? படுத்துக்குட்டே பார்ப்பீங்களே... விளக்கம் தரவும்...

  >>>

  மாப்ளே பிரபா கலாச்சிட்டியா சந்தோசமாய்யா அவ்வ்...தாழ்மையுடன் நன்றி!...அரே ஓ சம்பா...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி