வணக்கம் நண்பர்களே...வாய்ப்பு தேடி வாழ்வை தேடி..பொருளாதாரத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கும் யாவரும் அடிக்கடி தொட்டுப்பார்த்துக்கொள்வது...”பசுமையான பச்சை வாழ்க்கை” எனும் ஊர் வாழ்வை..

என் மூதாதையர்களை பெற்றெடுத்த அந்த சிற்றூருக்கு சென்று இருந்தேன்...

அவர் என் ஊர் பெரியவர்...என்னை ஊருக்கு வர சொல்லி இருந்தார்கள்..நானும் பெரியவங்க கூப்டு இருக்காங்களேன்னு சென்று இருந்தேன்...

இன்னும் அசைந்து கொண்டு இருக்கும் மரங்கள்...அதனடியில் சில பெரியவர்கள் என இன்னும் அந்த கிராமம் பசுமையாக இருக்கிறது...இன்னும் ஜாதிய மோதல்கள் உள்ளுக்குள் நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது என்பதைக்கண்டேன்...

என்னப்பா எப்படி இருக்க...உங்கப்பன் உங்கள ஊருலயே இருக்க விடல...சென்னையிலேயே பெத்து அங்கயே வளர்த்துட்டான்...எப்பவாவது ச்கூல் விடுமுறைக்கு இங்க வருவீங்க...இப்ப அதுவும் இல்ல...அப்படி என்னதான்யா வெளிநாட்ல களை புடுங்கறீங்க..

தாத்தா...அப்பாரு தன் கடமையெல்லாம் முடிச்சிட்டு இங்கன வந்து ஓய்வெடுக்குறாரு...எனக்கு கடமைகள் இருக்கே..அவரு துட்டுல இருந்து எடுத்து நான் வாழுறது எனக்கும் பிடிக்காது..அவருக்கும் பிடிக்காது...ஆனா என்னிக்கா இருந்தாலும் மீண்டும் எங்க தாத்தா மண்ணுல ஏர் புடிச்சிதான் ஆகனும்..அதான் தாத்தாவோட விருப்பமும்...இப்போதைக்கு பொழப்பு வெளில ஓடிட்டு இருக்கு...கடமைகள முடிச்சிட்டு இங்க வந்துடுவேன்...

எங்கய்யா வர முடியும் உங்களால...நல்லா ஏசி காத்தும்...பொட்டி தட்ற பொழப்புமா திரியிறீங்க..கண்ட கண்ட கருமத்த தின்றீங்க...இங்க ஏர் புடிக்க ஆளில்ல...பெரியவங்களுக்கெல்லாம் வயசாகிப்போச்சி..ஊட்ல இருக்க இளவட்டங்க எல்லாம் ஊர விட்டு மில்லு...டயர் கம்பெனின்னு ஓடிடிச்சிங்க...எதோ இன்னும் உசிர பிடிச்சிகிட்டு நாங்க வீராப்பா விவசாயத்த பாத்துட்டு இருக்கோம்..

என்ன செய்யிறது எங்கப்பாரு அவரு உழுகுற வரைக்கும் என்னைய நிலத்துல கால் வைக்க கூடாதுன்னு சொல்லி இருக்காரு...


ஏன்யா இப்பல்லாம் ரூவாக்கு இன்னா மருவாத இருக்கு...ஆயிரம் ரூவா என்னமோ பத்து ரூவா கணக்கா காணாமப்போயிடுது...இந்த நெலமைல விவசாயக்கூலிங்க கெடைக்கிறது குதிரைக்கொம்பா இருக்கு...

ஆமாம் தாத்தா...சென்னைல ஆயிரம் ரூவா கொண்டு போனா ஒரு நாளைக்கே காலி ஆயிடுது...சாப்பாடு விலை அதிகம்..விலைவாசி அதிகமாயிடிச்சி...பெட்ரோல் விலையேற ஏற விலைவாசியும் ஏறுமே என்ன செய்யிறது...

டேய் எல்லாம் உங்களால தான்டா..

எங்களாலயா...

ஆமாடா...விவசாயப் படிப்புகளை படிச்சி கலப்பைய புடிச்சி இன்னும் பல தரிசு நிலங்கள விளை நிலங்களா ஆக்கி எங்கும் பசுமைய கொண்டார வேண்டிய நீங்கள்லாம் விட்டா போதும்னு ஓடிட்டீங்க...இதனால ஏற்றுமதி பண்ணிக்கிட்டு இருந்த நம்ம தேசம்..இறக்குமதி பண்ணுது அத்தியாவசிய உணவுப் பொருட்கள...அப்புறம் எப்படிடா நாடு முன்னேறும்..பேசுறான் பேச்சி..


உண்மைதான் தாத்தா...ஆனா காலம் மாறுகிறது அதுக்கேத்தாப்ல மக்களும் மாறிக்கொண்டு இருக்காங்க...

என்னதான் காலம் மாறுனாலும் தின்றத நிறுத்திடப்போறீங்களா...இன்னும் கொஞ்ச காலத்துல மாத்திரைய தான் தின்னப்போறீங்க...இங்க விளைவிக்க ஆளுங்க இருக்க மாட்டாங்க...திரும்பவும் இங்க வந்து நாத்து நட்டு தான் ஆகோனும்டா...

ம்ம்ம்...


என்னா அசந்துட்டியா மரத்தடி பெருசுங்களுக்கு என்னா தெரியும்னு நெனைச்சிருப்ப...

இல்ல தாத்தா உங்களப்போல இன்னும் ஊர விட்டு போகாம பச்சை பசேல்னு ஊரைக்காக்க நினைக்குறவங்களால தான் தேசம் ஓடிட்டு இருக்கு...

ம்ம்ம் புரிஞ்சா சரி...சீக்கிறத்துல வந்து உழவு பணிய பாரு...

முயற்சி பண்றேன் தாத்தா...

கொசுறு: பிறந்ததில் இருந்து ஊருக்கு விடுமுறைக்கு மட்டுமே சென்றிருக்கிறேன்...வாழ்வாதாரம் நகர வாழ்வை தொட்டு வந்து விட்டதால் மீண்டும் பச்சை நிலம் நோக்கி பயணப்படுவேனோ...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

15 comments :

 1. நம்மளை மாதிரியே நிறைய பேரு சம்பாத்தியத்துக்காக வெளியூர் வெளிநாடு போய்ட்டோம், நம்ம ஊரையும் மண்ணையும் காப்பாத்த ஆளில்லை... பெரிசுக புலம்பறது நியாயம் தான் அண்ணே...

  ReplyDelete

 2. விக்கி! தாத்தா சொன்னதும் உண்மை! நீங்கள் சொன்னதும் உண்மை
  நான் வாழ்வின் முதல் பாதியை தாத்தா சொன்னதுபோல வாழ்ந்து தோற்று தற்போது உங்களைப் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எதிர் காலம் ஒரு கேள்விக் குறியாக உள்ளது காலம் தான் பதில்
  சொல்லும்!

  ReplyDelete
 3. தாத்தா சரியாக மிகச் சரியாக சொல்லி உள்ளார்...

  ReplyDelete
 4. பெரியவரின் வார்த்தைகளில் பிள்ளைகள் நம் சொல் கேட்கவில்லையே என்ற ஆதங்கம் தெரிகிறது. இதுதான் தலைமுறை இடைவெளியோ!

  ReplyDelete
 5. உண்மைதான் விக்கி, இன்னும் சிறிது காலத்தில் நாம் மாத்திரைகளை மட்டுமே உணவாக உண்ணவேண்டியதிருக்கலாம். தீர்க்க தரிசி அவர்.

  ReplyDelete
 6. நீங்கள் சொல்லிப் போவது உண்மைதான்
  ஆனால் காலச் சூழலில் எல்லோரும்
  கைதியாகித்தானே கிடக்கிறோம்
  என்று விடுதலையாவோம் ?

  ReplyDelete
 7. இனி கொஞ்ச நாளில் வயல் வெளிகள் இல்லாமல் எங்கும் கட்டடங்கள் தான் காட்சி அளிக்கும். இப்போவே காலம் கடந்து விட்டது என்று தான் நினைக்கிறன்....

  ReplyDelete
 8. நிலைமை கைமீறிப் போய்விட்டதுதான். நம்மிள் நிறைய பேருக்கு இதுகுறித்த கவலைகளும்,ஆதங்கமும் இருக்கிறது. செயல்படுத்துவதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது. ஆர்வமாய் விவசாயம் செய்யவந்து வேலை ஆட்கள் பற்றாக்குறை,போதிய நீராதாரமின்மை, நீர்வளமிருப்பின் நீர்ப்பங்கீட்டில் பிரச்சினைகள் இவற்றால் கஷ்டப்பட்டு, நலிந்து இது வேண்டவே வேண்டாம் என்று திரும்பி வந்து விட்ட இளையதலைமுறையினர் என்னுடன் வேலை செய்கின்றனர். மண் மீதும், இயற்கை மீதும் ஆர்வம் கொண்டவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசாங்கம் இவர்களை ஒருங்கினைத்து தேவையான தொழில் நுட்ப கருவிகளையும், வசதிகளையும் செய்து கொடுத்தாலே போதுமானது. இல்லையேல் நீங்கள் சொல்லியது போல அடுத்த சந்ததி மாத்திரையை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளும் காலம் வெகு தொலைவில இல்லை. சுளீரென்று உரைக்கும் பதிவு. நன்று.

  ReplyDelete
 9. ஸ்கூல் பையன் said...
  நம்மளை மாதிரியே நிறைய பேரு சம்பாத்தியத்துக்காக வெளியூர் வெளிநாடு போய்ட்டோம், நம்ம ஊரையும் மண்ணையும் காப்பாத்த ஆளில்லை... பெரிசுக புலம்பறது நியாயம் தான் அண்ணே...

  >>

  என்ன செய்வது என்பதே அடுத்து நம்முன் உள்ள் கேள்வி தம்பீ!~

  ReplyDelete
 10. புலவர் இராமாநுசம் said...

  விக்கி! தாத்தா சொன்னதும் உண்மை! நீங்கள் சொன்னதும் உண்மை
  நான் வாழ்வின் முதல் பாதியை தாத்தா சொன்னதுபோல வாழ்ந்து தோற்று தற்போது உங்களைப் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எதிர் காலம் ஒரு கேள்விக் குறியாக உள்ளது காலம் தான் பதில்
  சொல்லும்!

  >>>>

  அண்ணே அடுத்து வரும் சந்ததிகள் நிலை தான் என்னவென்று புரியவில்லை...

  ReplyDelete
 11. திண்டுக்கல் தனபாலன் said...
  தாத்தா சரியாக மிகச் சரியாக சொல்லி உள்ளார்...

  >>>

  வருகைக்கு நன்றி தனபாலன் சார்...கரீட்டு

  ReplyDelete
 12. FOOD NELLAI said...
  பெரியவரின் வார்த்தைகளில் பிள்ளைகள் நம் சொல் கேட்கவில்லையே என்ற ஆதங்கம் தெரிகிறது. இதுதான் தலைமுறை இடைவெளியோ!

  >>>>
  சரிதேன் அண்ணே...கலியுகம்..
  ................................

  FOOD NELLAI said...
  உண்மைதான் விக்கி, இன்னும் சிறிது காலத்தில் நாம் மாத்திரைகளை மட்டுமே உணவாக உண்ணவேண்டியதிருக்கலாம். தீர்க்க தரிசி அவர்.

  >>>>>

  அந்த நெலமையே நெனைச்சாலே பக்குங்குது அண்ணே...அவர் தீர்க்கதரிசிதான்..

  ReplyDelete
 13. Ramani S said...
  நீங்கள் சொல்லிப் போவது உண்மைதான்
  ஆனால் காலச் சூழலில் எல்லோரும்
  கைதியாகித்தானே கிடக்கிறோம்
  என்று விடுதலையாவோம் ?

  >>>

  எப்படி ஒரு தொடக்கம் உண்டோ...மீண்டும் அனைத்தும் வெறுத்து ஒரு தொடக்கம் இருக்கும் அண்ணே..

  ReplyDelete
 14. KESAVA PILLAI said...
  இனி கொஞ்ச நாளில் வயல் வெளிகள் இல்லாமல் எங்கும் கட்டடங்கள் தான் காட்சி அளிக்கும். இப்போவே காலம் கடந்து விட்டது என்று தான் நினைக்கிறன்....

  >>>>>

  மக்கள் தொகை குறைப்பு இன்னும் சரியானபடி செயல் படுத்தப்படவில்லை...அதையும் தாண்டி மக்களின் தேவைகள் அதிகமாகிக்கொண்டு இருக்கின்றன...நாம் உட்பட..தல!

  ReplyDelete
 15. Robert said...
  நிலைமை கைமீறிப் போய்விட்டதுதான். நம்மிள் நிறைய பேருக்கு இதுகுறித்த கவலைகளும்,ஆதங்கமும் இருக்கிறது. செயல்படுத்துவதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது. ஆர்வமாய் விவசாயம் செய்யவந்து வேலை ஆட்கள் பற்றாக்குறை,போதிய நீராதாரமின்மை, நீர்வளமிருப்பின் நீர்ப்பங்கீட்டில் பிரச்சினைகள் இவற்றால் கஷ்டப்பட்டு, நலிந்து இது வேண்டவே வேண்டாம் என்று திரும்பி வந்து விட்ட இளையதலைமுறையினர் என்னுடன் வேலை செய்கின்றனர். மண் மீதும், இயற்கை மீதும் ஆர்வம் கொண்டவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசாங்கம் இவர்களை ஒருங்கினைத்து தேவையான தொழில் நுட்ப கருவிகளையும், வசதிகளையும் செய்து கொடுத்தாலே போதுமானது. இல்லையேல் நீங்கள் சொல்லியது போல அடுத்த சந்ததி மாத்திரையை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளும் காலம் வெகு தொலைவில இல்லை. சுளீரென்று உரைக்கும் பதிவு. நன்று.

  >>>

  வாழ்வாதாரங்களை நோக்கி ஏன் இடம் பெயர்கிறோம்..நம்மை சரியான வழியில் நடத்த வேண்டியவர்கள் யார்...ஒவ்வொரு விவசாயிக்கும் மாத வருமானம் என்று ஒன்றை உருவாக்கி அவனுக்கு சரியான படி காக்க ஆரம்பித்தால் ஏன் இப்படிப்பட்ட நிலை நமக்கு...யாரோ உழைக்கிறான் நமக்கென்ன எனும் போக்கை நம் கை பிடித்து இழுத்துப்போனவர்கள் யார்..உணர்வார்களா..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி