அவள் அப்படித்தான் - பரிதாபத்திற்குரிய ஓர் உயிரி!~

வணக்கம் நண்பர்களே...எமது குடியிருப்புக்கு புதிதாய் வந்தாள் அந்த பெண்...மேல் தளத்தில் அவளுக்கான குடியிருப்பு பகுதி...அவளுடன் இரு குழந்தைகள்...மகன் வயது 8, மகள் வயது 3...

வந்த கொஞ்ச நாட்கள் வரை ஏதும் எங்களிடம் பேச்சுக்கள் இல்லை...மொழிப்பிரச்சினை இருக்கும் என்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனது மனைவி..

திடீரென்று ஒரு நாள் என் மனைவி என்னை அழைத்தாள்...”இன்று அந்தப்பெண்ணுக்கு பிறந்த தினமாம் காலையில் வந்து கேக் கொடுத்து சென்றாள்...மாலை உங்களையும் அழைத்துக்கொண்டு மேல் பகுதிக்கு (டெரஸ்!) வர சொல்லி இருக்கிறாள்”...என்றாள்..

நானும் என்னடா இது புது செலவு(!) என்று நினைத்துக்கொண்டே வீட்டில் இருந்த ஒரு ரெட் ஒயின் பாட்டிலை பேக் செய்ய சொன்னேன்...!

அவள் குறிப்பிட்டிருந்த நேரத்துக்கு சென்றோம்...குழந்தைகள் என் மகனுடன் விளையாடிக்கொண்டு இருந்தனர்...அன்பளிப்பை கொடுத்தோம்..அவள் மெதுவாக பேச ஆரம்பித்தாள்..

என்ன சாப்பிடுறீங்க...பீப்...ஆர் போர்க் என்றாள்...

ஓ நான் வெஜ்...இவர் சாப்பிடுவார் என்று போட்டு கொடுத்தாள் என் மனைவி(கர்ர்!)

ஹாஹா நோ பிராப்ளம் கொஞ்சம் சாலட் போதும்...நூடுல்ஸ் ஓகே...கறி வேண்டாமே என்றேன் (ஏன்டா நடிக்கிற அவ்வ்!)

கொஞ்ச நேரத்தில் அழ ஆரம்பித்தாள்...எங்களுக்கு சங்கடமாகி விட்டது...ஏன் என்னாச்சி என்றோம்...

உங்கள் இருவரை பார்த்தாள் எனக்கு மிக பொறாமையாக இருக்கு....எவ்ளோ சந்தோசமா இருக்கீங்க...உங்க இருவருக்கும் சண்டையே வராதா(!) என்றாள்...

(அடங்கொன்னியா...பூரிக்கட்ட பறக்குற சவுண்டு கேக்க கூடாதுன்னு கதவ மூடிவச்சது எவ்ளோ நல்லதாப்போச்சி அவ்வ்!)

ஏன் அப்படி சொல்றீங்க...எங்களுக்குள்ளும் சிறு சிறு கருத்து முரண்பாடுகள் உண்டு...கொஞ்ச நேரத்துல மறந்துவிடுவோம் என்றாள் என் மனைவி...


என் வாழ்க்கை ரெம்ப மோசம்ங்க...நான் நியூஸ் சேனலில் வேலை செய்யிறேன்...இந்த இரண்டாவது குழந்தை பிறந்ததும் என் கணவன் என்னை கழட்டி விட்டுட்டான்...மாசம் கொஞ்சம் பணம் கொடுக்குறான்...இப்ப இளசா ஒரு பொண்ண வச்சிகிட்டு இருக்கான்..டைவர்ஸ் அனுப்பிட்டான்..வேற வழி இல்லாம நானும் சைன் பண்ணிட்டேன்..இவங்க ரெண்டு பேர வளக்குறது ரெம்ப கழ்டமா இருக்கு..இங்கு பல பெண்களுக்கு இப்படித்தான் திருமண வாழ்க்கை 3 வருடத்துக்கப்புறம் ஆயிடுது...நாங்கள்லாம் என்ன பாவம் பண்ணோம்னு தெரியல என்றாள்..

ஓ அப்படியா...குழந்தை வளர்ப்பு கஷ்டம்தாங்க...அதுவும் ஆண் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதும் கடினம் தான்...என்றாள் என் மனைவி...

அந்தப்பெண் அடுத்து கேட்டாள் ஒரு கேள்வி...

”எவ்ளோ வருசம் கழிச்சி உங்க நாட்லயெல்லாம் டைவர்ஸ் பண்ணிப்பாங்க...!”

(என்றா இது வம்பா போச்சி..விட்டா இவளே வாங்கி கொடுத்துடுவா போலயே!)

அப்படில்லாம் பிரியிறது கொஞ்ச பேர் தாங்க...மற்றபடி..ஒரு ஆணுக்கு ஒரு பெண் கலாச்சாரம் இன்னமும் எங்கூர்ல ஸ்ட்ராங்கா(!!) தான் இருக்கு என்றாள் மனைவி என்னைப் பார்த்துக்கொண்டே...

விடைபெற்றோம்...

சில நாட்கள் கழித்து மேல் குடியிருப்பில் சத்தம் வர...என்னான்னு மேலே சென்றேன்...

அங்கே அந்தப்பெண் அவள் கணவனை வெளக்கு மாத்தாலே அடிச்சிட்டு இருந்தாள்(அவ்வ்!)...அவன் முழு போதையில் இருந்ததால் சவுண்டு மட்டும் விட்டுகிட்டு இருந்தான்...என்னைப்பார்த்தவள் கெட் அவுட் என்றாள்..நானும் என்னடா ஹெல்ப்ன்னு சவுண்டு வந்துச்சேன்னு வந்தமே...இது நமக்கு தேவையான்னு இறங்கி வந்துட்டேன்..

அடுத்த நாள் காலையில் கீழே இறங்கி வந்தவள்..என் மனைவியிடம்..”சாரி நேற்று அந்த ஆளு எனக்கு மாச பணம் குறைச்சலா கொடுத்ததால் சண்டை போட்டுட்டு இருந்தேன்...உங்க கணவரிடம் என்னை மன்னிச்சிட சொல்லுங்க” என்றாள்..


மீண்டும் அவளை அடுத்த நாள் காண நேர்ந்தது ஓவரான மேக்கப்பில் பேய்(!!) போல இருந்தாள்...பாவம் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது இவளுக்கு...அழகு இருக்கும் வரை வட்டமிடும் துணைகளை என் சொல்வது...!

என்னதான் படிப்பறிவும்(!) பணமும் இருந்தாலும்..அன்பு மிக்க துணைகள் இல்லாதது தாங்க முடியாத வேதனையே தரும்..

கொசுறு:  அந்த அடி அடிக்கிறா...அசராம நின்னுகிட்டு கத்துரான்யா அந்த மன்சன்..நல்ல வேல அத எங்கூட்டுல பாக்கல...அவ்வ்!~
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

14 comments :

 1. //”எவ்ளோ வருசம் கழிச்சி உங்க நாட்லயெல்லாம் டைவர்ஸ் பண்ணிப்பாங்க...!”//

  ஹா ஹா ஹா... என்னால சிரிப்பை அடக்க முடியலை...

  நம்ம நாட்டில இருக்கிற மாதிரி குடும்பப் பிணைப்பு வேற எங்கேயும் இல்லை அண்ணே...

  ReplyDelete
 2. ஸ்கூல் பையன் said...
  //”எவ்ளோ வருசம் கழிச்சி உங்க நாட்லயெல்லாம் டைவர்ஸ் பண்ணிப்பாங்க...!”//

  ஹா ஹா ஹா... என்னால சிரிப்பை அடக்க முடியலை...

  நம்ம நாட்டில இருக்கிற மாதிரி குடும்பப் பிணைப்பு வேற எங்கேயும் இல்லை அண்ணே...

  >>>

  வருகைக்கு நன்றி தம்பீ...பல விசயங்கள் இங்கு சிரிப்புதான் வருகிறது அவ்வ்..!

  ReplyDelete
 3. வாழ்க்கை முறை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. மற்ற நாடுகளில் பிரச்சனைகள் வந்தால் தனித்து போய்விடுகிறார்கள் நாம் பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகளுக்காக என்று பிரச்சனையை சகித்து கொண்டு வாழ பழகிகொள்கிறோம் என்பதே உண்மை

  ReplyDelete
 4. Avargal Unmaigal said...
  வாழ்க்கை முறை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. மற்ற நாடுகளில் பிரச்சனைகள் வந்தால் தனித்து போய்விடுகிறார்கள் நாம் பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகளுக்காக என்று பிரச்சனையை சகித்து கொண்டு வாழ பழகிகொள்கிறோம் என்பதே உண்மை

  >>>

  சகிப்புத்தன்மை நமக்கு அதிகம்ங்கறீங்க...அவ்வ்

  ReplyDelete
 5. உண்மை... உண்மை... அன்பு மிக்க உறவுகள் இல்லை என்றால் மன வேதனை தான்...

  ReplyDelete
 6. பாவம் தான்..நம் பண்பாட்டின் அருமையே இப்படி வெளியில் வரும்போது தாம்யா தெரியுது.

  ReplyDelete
 7. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தாலும் ஒரு அருமையான பதிவை தந்துள்ளீர்கள்.

  ReplyDelete
 8. என்னதான் பணம் இருந்தாலும், பாதுகாப்பை அரசாங்கம் தந்தாலும், துயரங்களில் தோள் சாய ஆண் துணை இல்லாம அந்த பெண் என்ன செய்வா! பாவம்தான்.

  ReplyDelete
 9. திண்டுக்கல் தனபாலன் said...
  உண்மை... உண்மை... அன்பு மிக்க உறவுகள் இல்லை என்றால் மன வேதனை தான்...

  >>>

  ம்ம் என்ன செய்வது..

  ReplyDelete
 10. செங்கோவி said...
  பாவம் தான்..நம் பண்பாட்டின் அருமையே இப்படி வெளியில் வரும்போது தாம்யா தெரியுது.

  >>>>>>>

  ஆமாம்யா...

  ReplyDelete
 11. என் ராஜபாட்டை - ராஜா said...
  மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தாலும் ஒரு அருமையான பதிவை தந்துள்ளீர்கள்.

  >>>>

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராஜா

  ReplyDelete
 12. ராஜி said...
  என்னதான் பணம் இருந்தாலும், பாதுகாப்பை அரசாங்கம் தந்தாலும், துயரங்களில் தோள் சாய ஆண் துணை இல்லாம அந்த பெண் என்ன செய்வா! பாவம்தான்.

  >>>

  இங்கு இளமை போனதும் நரகம்தான்...சகோதரி

  ReplyDelete
 13. பதிவைப் படித்து முடித்ததும்
  அந்தப் பெண் மீது அதிக அனுதாபம்தான் வருகிறது
  அவர்கள் கலாச்சாரத்தில் அது இய்ல்பானதாயினும்...

  ReplyDelete
 14. சிரிப்பாக சொன்னாலும் சிந்திக்க வைத்த பதிவு! நன்றி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி