துட்டு இருந்தும்....- வாழும் வரை போராடு!~

வணக்கம் நண்பர்களே...ஒன்னொன்னுக்கு ஒரு ஒரு தினம் கொண்டாடுறது பிடிக்கலன்னாலும்...இந்த தினம் எல்லோர் வாழ்க்கையில் ஒரு நாள் வரும்...அதைப்பற்றிய பதிவு...

இரு குடும்பத்தலைவிகளின் பேச்சி உங்களுக்காக...

அலோ அக்கா எப்படி இருக்கீங்க...

நல்லா இருக்கேன் கோகி...நீ எப்படி இருக்க...

ம்ம்...அப்புறம் ஊருக்கு போறதா சொல்லிட்டு இருந்தீங்க...

ஆமா சேந்தாப்ல மூனு நாளு ஹாலிடே சின்னப்பையனுக்கு...அதான் பெரியவனையும் லீவு போட சொல்லி இருக்கேன் காலேஜ்க்கு...ஊட்டுக்காரரையும் லீவு போட சொல்லி இருக்கேன்...சேலம் போயி ஏற்காடு வேற போறோமே...

எதாவது ஃப்பங்க்சனாக்கா...

இல்லடி.,..என் நாத்தானாரு போனமாசம் ஏற்காடு போயிட்டு வந்ததா பீத்திகிட்டா...நாம மட்டும் இன்னா அவ்ளோ குறைஞ்சா போயிட்டோம்...அதான் நாங்களும் போறோம்..

அது சரிக்கா வீட்ல மாமனாரு இருக்காரே...அவருக்கு சோத்துக்கு வழி...

அட அந்த கெழம்(!) போயி சேரவும் மாட்டேங்குது இருந்து உசிர வாங்குது...அது கெடக்குது அதுவே அதோட வேலைகளை 3 நாளு பாத்துக்க சொல்லி புட்டேன்...

அய்யோ...பாவங்கா அவருக்கு இன்னா வயசாகுது...

86 ஏன் கேக்குற...


என்னக்கா ரெம்ப வயசானவராச்சே...எதாவது ஏற்பாடு பண்ணிட்டு போறதுதானே...

அடி போடி இவளே..இந்த முனு நாள் கழிச்சி வந்தாலும் அது உசிரோடத்தான் இருக்கும்..

என்னக்கா இப்படி சொல்லிட்ட...உம் புருசன் உம் மாமனாரு ரூமுக்கு ஏசி போட சொன்னப்ப கூட...எல்லாருக்கும் இருக்கட்டும்பான்னு ஹால்லயே போட சொன்னாரே...நல்ல மனுசனாச்சேக்கா..

அடி போடி இதெல்லாம் இருந்து யாருக்கு லாபம்...

என்னக்கா லாப நஷ்டம் பேசுற...உன்னைய அப்பா கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது கொஞ்சம் நகை தானே போட்டாப்ல...அப்புறம் அந்த பெரிய்வரு தானே தன் மனைவி நகையல்லாம் பொண்ணுக்கு கொஞ்சம் கொடுத்துட்டு மீதிய பூரா உனக்கு கொடுத்ததா சொன்னாங்க..

அந்த கிழம் கொடுக்கலன்னாலும்...அது எனக்கு வரவேண்டியது தாண்டீ...அதுக்கு தெனமும் சோறு போடும் போது நான் நெனைக்கிறது என்னனா...அடுத்த நாளாவது இது போயி சேராதான்னுதான்..

ஏங்கா அப்படிச்சொல்ற..இந்த வயசுலயும் தன் துணி முதற்கொண்டு அவரோட வேலைய அவர் தானே செய்ஞ்சிக்கிறாரு...

ஏன்டி நீ எனக்கு தங்கையா அந்த கெழத்துக்கு பொண்ணா..ஏன் இவ்ளோ சப்போர்ட் பண்ற...

ப்ளீஸ்கா வயசான காலத்துல உடல் நிலைய விட மன நிலை நம்மால பாதிக்கப்படக்கூடாதுன்னுதான் சொன்னேன்..

அடி போடி இது எப்ப போகும்னு நான் காத்துட்டு இருக்கேன்...நீ வேற இதுக்கு சவுகரியமா இருக்கனுங்கற...

அக்கா நான் என்ன சொல்ல வரேன்னா..

நீ ஒன்னும் சொல்ல வேணாம்...நாங்க நாளைக்கு கெளம்பறோம்...போயிட்டு வந்து கூப்பிடவா...

அது சரி உன் புருசன் இப்படில்லாம் அப்பாவ விடமாட்டாரே...

அதுவா..அந்தாளுகிட்ட அழுது பொலம்பி ஒரு வழியா சமாளிச்சி வச்சிருக்கேன்..இன்னும் எத்தன நாளைக்கு இப்படி வாழுறதோ...

சரிக்கா அப்புறம் உன் இஷ்டம்...நான் வச்சிடவா..


சரிடி நெக்ஸ்டு பேசும்போது அந்த கெழத்த பத்தி எங்கிட்ட பேசாதே...

டொக்...

(போனை வைத்து விட்டு தலை நிமிர்ந்தாள் அந்த குடும்பஸ்த்ரீ...எதிரில் அந்த வயதானவர் கண் கலங்கி நின்று இருந்தார்...அதை சட்டை செய்யாமல் அடுத்த விசயத்தை நோக்கி சென்று விட்டாள் அவள்!)

கொசுறு: இன்று முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது...!~
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

10 comments :

 1. இன்றைக்கு நிலை இதை விட மோசமாகத் தான் இருக்கிறது... கொடுமை...

  ReplyDelete
 2. திண்டுக்கல் தனபாலன் said...
  இன்றைக்கு நிலை இதை விட மோசமாகத் தான் இருக்கிறது... கொடுமை...

  >>>>

  வருகைக்கு நன்றி நண்பா...மிக மோசமான பேச்சுக்களை தவிர்த்து இருக்கிறேன்...!

  ReplyDelete
 3. இப்போ இருக்கிற தலைமுறைய பாக்கும்போது இனி 65க்கு மேல இருக்கிற எல்லா பெருசுகளும் சூசைட் தான் பண்ணிக்கணும்..

  ReplyDelete
 4. கோவை ஆவி said...
  இப்போ இருக்கிற தலைமுறைய பாக்கும்போது இனி 65க்கு மேல இருக்கிற எல்லா பெருசுகளும் சூசைட் தான் பண்ணிக்கணும்..

  >>>

  உண்மைதான் நிலைமை ரெம்ப மோசம்..

  ReplyDelete
 5. வயசானப்பின் நமக்கும் இதே நிலைதானே அண்ணா!?

  ReplyDelete
 6. இன்றைய நடப்பை உரையாடல் மூலம் விளக்கிவிட்டீர்கள்... நன்றி....

  ReplyDelete
 7. கண்கலங்க வைத்தது! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 8. இதுதான் இன்றைய யதார்த்த நிலை
  சொல்லிச் சென்ற விதம் அருமை
  சிறந்த சிறப்புப் பகிர்வுக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அன்பின் விக்கி - கதையில் கருவினைக் கொண்டு சென்ற விதம் நன்று - இன்றைய யதார்த்த நிலை இதுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. அவர்களுக்கும் ஒரு நாள் அதுதானே..வாழ்க்கை ஒரு வட்டம்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி