இவ்ளோ கேர்ள் ப்ரண்ட்ஸா! - எப்படிடா!~

வணக்கம் நண்பர்களே...இந்தப்பதிவின் தலைப்பை பார்த்ததும் நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள் என்பதை யூகிக்க முடிகிறது...

ஆனா...பதிவு கொஞ்சம் வித்தியாசப்படுகிறது என்றே நினைக்கிறேன்...

அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தார்கள் சென்று இருந்தேன் என் மகனுடன்..

ஏன்டா என்னடா இது நீ வந்ததும் உன்னைய சுத்தி இம்புட்டு பொண்ணுங்க...

டேய் தகப்பா இதெல்லாம் உனக்கு புரியாதுடா...எனக்கு அவ்ளோ கேர்ள் ஃப்ரண்ட்ஸ்டா...பொறாமைப்படாதே..

அடேய் அதான்டா கேக்குறேன் எப்பிடின்னு...

அதுவா சொல்றேன் கேளு...நான் ஒருத்தன் தான் இங்க ஃபாரினர்...அதுவும் இவங்க எல்லாமே மஞ்சளா இருக்காங்களா நான் கொஞ்சம் ப்ரவுனா இருக்கனா...அதுனால கேர்ள்ஸ்க்கு என்னைய பிடிச்சிருக்கு...

ஹெஹெ அது மட்டுமா...

ஹாஹா...நீ சொல்ற கதையெல்லாம்(!) இங்க இருக்கவிங்க கிட்ட மொழி மாத்தி சொல்லுவேன்...அதனால இவிங்களுக்கு என்னைய ரெம்ப பிடிக்கும்..

ஓ...


ஆனா பாய்ஸ்ல எனக்கு கொஞ்சம் ஃப்ரண்ட்ஸ் தான்...அடிக்கடி சண்டைக்கு வருவானுங்க...ஏன்டா நீ வெளிநாட்டுக்காரன்டா எங்க கூட பேசாதேம்பானுங்க...

அடடா அப்ப என்னடா செய்வ...

டேய் அப்பா...அவனுங்களுக்கல்லாம் கவலைப்பட்டா இங்க படிக்க முடியுமாடா...அவனுங்க பேட் பாய்ஸ்னு ஒதுக்கிட்டேன்...ரெம்ப பிரச்சினை பண்ணா டீச்சர் கிட்ட சொல்லிடுவேன் பிச்சி எடுத்துடுவாங்க...ஹாஹா

ஓ சூப்பருடா...

உனக்கொன்னு தெரியுமா...இந்த க்ளாஸ்லயே நான் தான் நல்லா வியட்நாமீஸ் உச்சரிக்கிறேன்னு சொல்றாங்க டீச்சர்...

அட இது எனக்கு தெரியாதே...

ம்ம்...கேட்டு தெரிஞ்சிக்கோ...

வேற என்னல்லாம் சொல்லுவே கேர்ள்ஸ் கிட்ட...

அதுவா...இப்ப இந்தியா போயிருந்தோம்ல...ரெண்டு ஃப்ளைட் மாறிப்போனது...அப்புறம் நீ டிக்கட் டேட்ட மறந்துட்டு கடைசி நேரத்துல வருவமா மாட்டமான்னு யோசிச்சியே அது...எல்லாத்தையும் கோர்வையா கதையா சொல்லி இருக்கேன்...

அடங்கொன்னியா...

பின்ன...ஹெஹெ எப்பீடீ...

சரி இப்ப இங்க்ளீஸ் க்ளாஸுக்கு போறியே அங்கயுமா...

ஆமாம்பா அங்கயும் எனக்கு கேர்ள்ஸ்தான் நெறைய ஃப்ரண்ட்ஸ்...ஏன்னா என் அசெண்ட் அவ்ளோ நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க...

டேய் அசத்துற...

பின்ன..உன்னையப்போலயா...

சரி சரி எனக்கு இதெல்லாம் தெரியாதுடா...

ஐய்யே...ச்சும்மா ரீல் விடாத கெளம்பு வீட்டுக்கு போவோம்...

எப்படிப்பட்ட அவமானம்டா விக்கி உனக்கு அவ்வ்...


குழந்தைகள் உலகம் தனி உலகம் அதில் பெண் ஆண் என்ற வேறுபாடு இல்லாப்பழகும் தன்மை அவர்கள் பெரியவர் ஆகும் வரை தொடர்ந்தால்...எல்லாம் நலமே....

கொசுறு: நானெல்லாம் குயந்தையா இருக்கும் போது பேசுனா காத்துதான் வரும்...இப்ப எம்மவன் கலக்கறான்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

11 comments :

 1. இனிய வணக்கம் .மாம்ஸ்...
  குழந்தைகள் படு ஸ்மார்ட் மாம்ஸ்...
  கொஞ்சம் இடைவெளி கிடைத்தால் போதும்..
  இதிகாசமே இயற்றிவிடுவார்கள்...
  ==
  மனிதரில் இனமென்ன
  ஆணும் பெண்ணும்
  ஒன்றென எண்ணும்
  இந்த வயதுக்கான குணம்
  தொட்டுத் தொடரவேண்டும்...
  ==
  மாம்ஸ்... தேதி மாற்றி விமானநிலையத்திற்கு சென்று
  அங்கு நடந்த பஞ்சாயத்து எல்லாத்தையும் மருமகன்
  புட்டுபுட்டு வைச்சிட்டான் போல..
  மருமகன் .. என் இனமய்யா...

  ReplyDelete
 2. டிக்கெட் தேதி கூட சரியா பாக்க தெரியாத 'வென்று'இந்த வெங்கின்னு உண்மையை ஊர் முழுக்க சொல்லிட்டானா !!!

  பாவம் பையன் அவுக அம்மா மாதிரி,சின்ன புள்ளையிலே ச்சூலிலே படிசுறுரிபியே 'தாயை போல பிள்ளை நூலை போல சேலை'னு....

  ReplyDelete
 3. மகேந்திரன் said...
  இனிய வணக்கம் .மாம்ஸ்...
  குழந்தைகள் படு ஸ்மார்ட் மாம்ஸ்...
  கொஞ்சம் இடைவெளி கிடைத்தால் போதும்..
  இதிகாசமே இயற்றிவிடுவார்கள்...
  ==
  மனிதரில் இனமென்ன
  ஆணும் பெண்ணும்
  ஒன்றென எண்ணும்
  இந்த வயதுக்கான குணம்
  தொட்டுத் தொடரவேண்டும்...
  ==
  மாம்ஸ்... தேதி மாற்றி விமானநிலையத்திற்கு சென்று
  அங்கு நடந்த பஞ்சாயத்து எல்லாத்தையும் மருமகன்
  புட்டுபுட்டு வைச்சிட்டான் போல..
  மருமகன் .. என் இனமய்யா...

  >>>

  வணக்கம்யா...ஆமாம்யா மாப்ளே நானு இன்னும் கத்துக்கனும்யா...அவ்வ்

  ReplyDelete
 4. KESAVA PILLAI said...
  டிக்கெட் தேதி கூட சரியா பாக்க தெரியாத 'வென்று'இந்த வெங்கின்னு உண்மையை ஊர் முழுக்க சொல்லிட்டானா !!!

  பாவம் பையன் அவுக அம்மா மாதிரி,சின்ன புள்ளையிலே ச்சூலிலே படிசுறுரிபியே 'தாயை போல பிள்ளை நூலை போல சேலை'னு....

  >>>>

  ஹாஹா கேசவரே நேரம் 00.25 என இருந்தது அதான் கொஞ்சம் குழப்பமா பூட்சி அவ்வ்

  ReplyDelete
 5. நீங்க கலக்க நினைத்ததை எல்லாம் இப்போது மகன் கலக்குகிறான்...! ஹிஹி...

  வாழ்த்துக்கள் செல்லத்திற்கு...

  ReplyDelete
 6. நாமலாம் நம்ம அப்பா, அம்மா நின்னு பேசுறதுக்கே உடல் உதறி, வாய் கொழரி இருக்கு. ஆனா, நம்ம பசங்க கேர்ள் ஃப்ரெண்ட், பாய் ஃப்ரெண்ட் வரை பேசுறாங்க. இதுவும் நல்லதுக்குதான். பகிர்வுக்கு நன்றி அண்ணா!

  ReplyDelete
 7. உண்மைதான்! நம்மை விட நம் குழந்தைகள் புத்திசாலிகளாக வளர்கின்றன! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. திண்டுக்கல் தனபாலன் said...
  நீங்க கலக்க நினைத்ததை எல்லாம் இப்போது மகன் கலக்குகிறான்...! ஹிஹி...

  வாழ்த்துக்கள் செல்லத்திற்கு...

  >>>

  ஆமாங்கோ நண்பா...நன்றிகள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..

  ReplyDelete
 9. ராஜி said...
  நாமலாம் நம்ம அப்பா, அம்மா நின்னு பேசுறதுக்கே உடல் உதறி, வாய் கொழரி இருக்கு. ஆனா, நம்ம பசங்க கேர்ள் ஃப்ரெண்ட், பாய் ஃப்ரெண்ட் வரை பேசுறாங்க. இதுவும் நல்லதுக்குதான். பகிர்வுக்கு நன்றி அண்ணா!

  >>>>

  அப்பல்லாம் நின்னு பேசுனாலே...என்னா தைரியம்டா உனக்குன்னு பட்டுன்னு வைப்பாங்க..இப்ப பசங்க காலம் ஆச்சே சகோதரி வாழ்க வளமுடன்...

  ReplyDelete
 10. s suresh said...
  உண்மைதான்! நம்மை விட நம் குழந்தைகள் புத்திசாலிகளாக வளர்கின்றன! வாழ்த்துக்கள்!

  >>>>>>

  வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றிகள் சுரேஷ் சார்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி