விஜயதசமியும்...ஆங்கிலமும்...நானும்!

வணக்கம் நண்பர்களே...அனைவருக்கும் எமது விஜயதசமி வாழ்த்துக்கள்...

இந்த நாள் பலரால் வாழ்வில் மறக்க முடியாத நாள்...ஏனெனில், பெற்றோர்கள் தம் குழந்தைகளை இன்று பள்ளிக்கு அழைத்து சென்று நெல், சக்கரை, எண்ணெய் போன்றவற்றில் கை வைத்து “அ” எழுத வைத்த(வைக்கும்!) நாள்...குழந்தைகள் தம் முதல் நாள் பள்ளியை காணும் நாள்...


கொஞ்ச கொஞ்சமாக வீட்டு உறவுகளை தவிர்த்து(!) பள்ளி உறவுகளை தேடத்தொடங்கும் தேடலுக்கான முதல் நாள் இதுவே...என்பது எமது தாழ்மையான கருத்து...

இன்னாளில் தொடங்கப்பட்ட கல்வி மெதுவாக நடக்க ஆரம்பித்து பின் ஓட்டமாக ஓடத்துவங்கும்...சரியான வழிக்காட்டல் இல்லாமல்...வெறும் ”படி படி” என்று விரட்டும் பெற்றோர்களால் பல குழந்தைகள் கல்வியை வெறுக்கும்படி தள்ளப்படுவார்கள்...

நானும் அப்படித்தான் ஓடத்துவங்கினேன்...பொருளாதாரம் பின் தங்கிய குடும்பமாகையால் தமிழ் வழிக்கல்வியை நகராட்சி பள்ளியில் துவங்கினேன்...முதலில் சந்தோசமாக ஓடிய நாட்கள்..மெல்ல மெல்ல கல்வியின் மீது வெறுப்பை கொண்டு வர ஆரம்பித்தன...

சிறு வயதில் நினைவாற்றல் அதிகமுண்டாதலால்(!)...ஒவ்வொரு வகுப்பின் இறுதியிலும் முதல் அல்லது இரண்டாவது மாணவனாக பள்ளியில் ஆளானேன்...அதனால் வீட்டில் சிறு சிறு பாத்திரங்களை சேமித்திருக்கிறேன் பரிசுப்பொருட்களாக..(உ.தா.- தம்ளர், தட்டு, ஸ்டீல் பேனா)

இப்படியாக போய் கொண்டிருந்த காலத்தில் கான்வெண்ட் பிள்ளைகளை பார்க்கும் போது ஒரு வித பொறாமை கலந்த ஏக்கம் இருக்கும்...அதுவும் அவன் என்னோட வீட்டுக்கு அடுத்த வீடு...என்னுடன் அடிக்கடி கிரிக்கெட் விளையாட வருவான்...ஒரு நாள் அவன் தந்தை அவனை வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தார்...ஏன்டான்னு கேட்டதுக்கு...”நீ கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிக்கிற பயலாம்...உன்னோட சேர்ந்தா எனக்கு படிப்பே வராம போயிடுமாம்” இப்படி கூறினான்..

ஏழ்மையை குழந்தைப்பருவத்திலேயே கிண்டலடிக்க ஆரம்பித்த சமூகம் பற்றிய புரிதல் இன்றியே என் பாதை ஓடலானது..

12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் எழுதியே எப்படியோ உருண்டு பொரண்டு எழுந்து வந்துட்டேன்...அடுத்து கல்லூரிப்படிப்பு...ஒரு வித ஆச்சரியத்துடன் கல்லூரிக்கு சென்றேன்..

சேர்க்கைக்கு முன் அந்த பேராசிரியர் கேட்ட கேள்விகள் எல்லாமே ஆங்கிலத்தில் இருந்தது...கொஞ்சம் அரண்டு போய் தான் பதிலளித்தேன்...

பாடங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன...எனக்கோ குபீர் என்று தூக்கிப்போட்டது...அந்த ஆசிரியரிடம்..”சார் நான் தமிழில் விடைத்தாள் எழுதலாமா” என்றேன்...

எழுதலாம்..ஆனால் அதற்க்கான ரெஃபரன்ஸ் நீ தான் தேடிக்கனும்...மற்றும் அப்படி எழுதி நீ பாஸ் பண்ணாலும் உனக்கு அது உபயோகமாக இருக்காது என்றார்...

அதுவரை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் தன்மை(!) இல்லாத நான் மனப்பாடம் செய்தே தேர்வுக்கான பதில்களை சேமித்தேன் மனதில்..

ஆங்கிலப்படம் பார்க்கப்போறேன்னு சொன்னாலே அது பிட்டு படம் தான் என்ற சமூக அந்தஸ்து மிகுந்திருந்த(!!) காலம் ஆதலால்...அனைவருக்கும் தெரிந்து பார்க்க முடியாது...முடிந்த வரை நண்பர்களின் வீடுகளில் பார்ப்பதோடு சரி...அதிலும் ஒரு நண்பன் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவன்..அவன் வீட்டில் அவனுடன் பார்த்த படங்களில் அதிகப்படியான உரையாடல்கள் அடங்கிய படங்களே அதிகம்...புரியலன்னாலும் வெறிச்சி பாத்துட்டு இருப்பேன்...

இப்படியாகத்தான் ஆங்கிலம் எனும் தாதாவை(!)ப்பார்த்து பயந்த நாட்கள் அவை..


இது தமிழ் வழி கல்வி பயின்று கல்லூரியில் தட தட வென ஆனவர்களுக்கு சமர்ப்பணம்...

விஜயதசமியில் சேர்க்கப்படும் பிள்ளைகளை அவர்கள் பாதையில் செல்ல அனுமதியுங்கள்...இயன்ற வரை அன்னிய மொழிகளை கற்க வாய்ப்பு தாருங்கள்...பொருட்களாக (புராடக்ட்களாக!) குழந்தைகளை எண்ணாமல்..அவர்களுக்கும் உலகத்தை நோக்கிய தனிப்பார்வை உண்டு என்று புரிந்து கொள்வோம்..வாழ்க வளமுடன்!

கொசுறு: இது ஒரு கோர்வையான பதிவல்ல...அவ்வ்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

7 comments :

 1. அருமையான கருத்து மிக்க பதிவு வெங்கட் அண்ணா
  விஜய தசமி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. Harini Resh said...
  அருமையான கருத்து மிக்க பதிவு வெங்கட் அண்ணா
  விஜய தசமி வாழ்த்துக்கள்

  >>>

  இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 3. சொன்ன கருத்துக்கள் - உணர வேண்டிய கருத்துக்கள்...

  ReplyDelete
 4. குழந்தைகளின் படைப்புகள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Sacrifice-Human-development.html

  ReplyDelete
 5. நாம் நம் மனதில் வைத்திருக்கும் இலக்கை நோக்கி நம் பிள்ளைகளைத் துரத்துகிறோம்.... கசந்தாலும் உண்மை... விஜய தசமி வாழ்த்துக்கள் அண்ணே...

  ReplyDelete
 6. அருமையான பகிர்வு!இப்பெல்லாம்,நான் என்ன படிக்கிறீங்கள் என்றே கேட்பதுடன் நிறுத்தி விடுகிறேன்.

  ReplyDelete
 7. தகப்பன் ஸ்தானத்தில் இருந்து தெரிவிக்கப்பட்ட தரமான கருத்துக்கள். விஜய தசமி வாழ்த்துக்கள்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி