தீபாவளியும்...கோமாளிகளும்(!) - அரே ஓ சம்பா!~

வணக்கம் நண்பர்களே...இந்தப்பதிவு யாம் சந்தித்த நிகழ்ச்சியின் தொகுப்பே...நம்பிக்கை பற்றியது அல்ல...புரிதலுக்கு நன்றி!

ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என்ன நிகழ்ச்சிகள் நடத்தலாம்(!) என்று இங்கிருக்கும் நம்மூரு சமூகம்(!) கூடி முடிவு செய்வது வழக்கம்...இது பல ஆண்டுகளாக குழுமமாக நடத்தப்பட்டு வருகிறது...அப்படி ஒரு நாள்..!

என்னப்பா எல்லாரும் வந்துட்டாங்களா...

வந்தாச்சி...ஆரம்பிங்கப்பா..(சொம்பு டங்க் டங்க்!)

இந்த வருசம் நம்மூர்ல இருந்து ம்யூசிக் பார்டிகள் வரலபா...அதனால நாமேத்தான் செய்யிறோம்..அதுவும் இல்லாம உள்ளூர் பார்டிகள் வச்சி கலை நிகழ்ச்சிகள் நடத்தறோம் சரியா...

(மீ கொர்ர்!)


யோவ் சீரியசா பேசிட்டு இருக்கோம் என்னய்யா நக்கலா...என்னா பண்றே...

அட கூப்டிங்களாப்பா...அதான் பேசுறீங்களே அப்புறம் என்னா சொல்லுங்க...

சரி சரி...ஆளாலுக்கு எவ்ளோ ஸ்பான்ஸர் பிடிக்கப்போறீக...

(ஹிஹி...இப்பதான்யா பாயிண்டுக்கே வரான் அவ்வ்!)

யோவ் நீதான் வருசா வருசம் எஸ்கேப்பாகிட்டே இருக்க...எப்பதான் தரப்போறே...

ங்ணா...ஆள விடுங்க்ணா...

யோவ் இது நம்ம விழாய்யா...

எது...இதா...அடப்போய்யா எங்க ஊருக்காரன போட்டு தள்ளிட்டு அதுக்கு விழா கொண்டாடுவீங்க அதுக்கு நாங்களும் ஆதரவு கொடுக்கனுமா...

யோவ் இப்ப ஏன்யா பாலிடிக்ஸ் பண்ற...

அதுக்குத்தான் பொத்திகிட்டு ஓரமா உக்காந்துகினு இருந்தேன்...நீதான கெளப்புன...

யோவ் இது தீப ஒளி திருநாள்யா...

அலோ கேட்டுக்க டீடைல...”தமிழ்நாட்ல நரகாசூரன(தமிழன் அவ்வ்!) வதம் செய்ஞ்ச கிருஷ்ண பகவானுக்கு(!) உகந்த நாள்ன்னு வெடி வெடிச்சி(!) தீப ஒளியோட கொண்டாடுறாங்க...” நாங்கள்லாம் எங்கள கொன்னவிங்களுக்கே படையல் வைக்கிற இனம்யா...

இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம பேசுற...


ஹிஹி...ராசா இப்ப இந்த கூட்டமே எவ்ளோ ஸ்பான்ஸர் தேறும்...அதை எப்பிடி செலவு பண்ணி கொண்டாடலாம்ங்கறதுக்கு தானே..அதுலயும் வெட்டியா என்னையப்போல மெம்பருங்களுக்கும் டிக்கட் துட்டு போட்டு புடுங்கறீங்க...கேட்டா அல்லாரும் ஒன்னுங்கறீங்க...தக்காளி அதுக்கு எதுக்கு மெம்பரா இருக்கோனும்...காமன் மேனாவே இருந்துட்டு போகலாமே...

யோவ் அப்பிடியில்லய்யா நாமெல்லாம் பிசினஸ் மெம்பர்யா...

ங்க்கும் இதுல ஒன்னும் குறைச்சலில்ல...இந்த ஊர்ல வாழுற இந்தியர்கள் உடம்பு சரியில்லன்னு போனா..விலைகுறைவா வாங்குற மருத்துவமனை எங்க இருக்கு...மருந்தகம் எது பெஸ்டு...எங்க குழந்தைகளுக்கு விளையாட்டு விசயங்கள் இருக்கு...எங்க பல மொழி கத்துக் கொடுக்குறவங்க இருக்காங்க...எங்க எளிதா இந்தியப்பொருள்கள் கிடைக்கும்..இப்படி எவ்ளவோ விசயங்கள் இருக்கு...இது வரைக்கும் இன்னா செய்ஞ்சீங்க...

யோவ் அதெல்லாம் நம்ம வேலை இல்லய்யா...

ஹாஹா...நம்மாளுங்க இங்க வந்து வாழ அத்தியாவசியத்தேவைகளான உணவு, உடை, மருத்துவமனை, கல்வி இப்படிப்பட்ட விசயங்கள் எங்கு எளிதாகவும் விலை குறைச்சலாகவும் இருக்கும் என்பது போன்ற அடிப்படைகள கண்டுபிடிங்க...அத வெப்சைட்ல போஸ்ட் பண்ணுங்க..அத வச்சி இங்கு வந்து கஷ்டப்பட்டுகிட்டு இருக்கும் தொழிலாளர் வர்க்கம் பிழைக்கும்..உங்களப்போல ஆட்களுக்கு உங்கள் நிறுவனமே அனைத்து சவுகரியமும் செய்ஞ்சி கொடுத்திடும்...ஆனா இங்கிருக்கும் பல இந்தியத்தொழிலாளர்கள் வெறும் சம்பளத்தோட இருக்காங்க...அவிங்களுக்கான விசயங்களை கொஞ்சம் கவனம் செலுத்துங்க..

நீ ரெம்ப பேசுற...இது பிசினஸ் குழுமம்...

ஹாஹா உங்க கிட்ட பேசி புரோசனம் இல்ல...எதாவது செய்ஞ்சிட்டு போங்கடா...துட்டு கேக்காதீங்க கூத்தடிக்க சரியா...

ஆல் ஜெண்டில்மேன்ஸ்(!) இவன் எப்பவுமே இப்பிடித்தான்...இவன விடுங்க உங்க கருத்துக்கள் என்ன...

குழும மெம்பர்கள் கருத்த ஆரம்பிச்சாங்க(!) : ராக் ம்யூசிக், பெல்லி டான்ஸ்...etc


மீ கெளம்பிங்க்...அவ்வ்!

கொசுறு: கடவுள் ஏன் கல்லானான்(!)...சில கல்லாய் போன மனிதர்களாலே...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

7 comments :

 1. ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ...
  ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம்...!
  சுக‌மே ம‌ந்திர‌ம்...!
  ம‌னித‌ன் எந்திர‌ம்...!
  சிவ‌ ச‌ம்போ...!

  நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம்...
  நினைவே தேவ‌தை...
  தின‌மும் நாட‌க‌ம்...!
  சிவ‌ ச‌ம்போ...!

  ReplyDelete
 2. கடைசில் என்னத்தான் முடிவாச்சு ? :)

  ReplyDelete
 3. திண்டுக்கல் தனபாலன் said...
  ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ...
  ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம்...!
  சுக‌மே ம‌ந்திர‌ம்...!
  ம‌னித‌ன் எந்திர‌ம்...!
  சிவ‌ ச‌ம்போ...!

  நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம்...
  நினைவே தேவ‌தை...
  தின‌மும் நாட‌க‌ம்...!
  சிவ‌ ச‌ம்போ...!

  >>>>>>

  சிவ சம்போ சிவ சம்போ ஹாஹா!

  ReplyDelete
 4. KESAVA PILLAI said...
  கடைசில் என்னத்தான் முடிவாச்சு ? :)

  >>>>

  பெல்லி அவ்வ்!

  ReplyDelete
 5. என்னைக் கேட்டால்,இந்தப் பண்டிகைகள் எல்லாமே ஏதோ ஒன்றைக் குறி வைத்தே!!!முக்கியமாக கோவில் பூசாரிகள் மூடப் பழக்கத்தை மாந்தர்களுக்குத் திணித்து.............கொள்ளைக் கூட்டம்!

  ReplyDelete
 6. ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ...
  ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம்...!
  சுக‌மே ம‌ந்திர‌ம்...!
  ம‌னித‌ன் எந்திர‌ம்...!
  சிவ‌ ச‌ம்போ...!

  நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம்...
  நினைவே தேவ‌தை...
  தின‌மும் நாட‌க‌ம்...!
  சிவ‌ ச‌ம்போ..//

  அவ்வ்வ்வவ்.....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி