டீவி சீரியலும்..அந்தக்குடும்பமும்...!

வணக்கம் நண்பர்களே...ரெம்ப வருடங்கழித்து அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தோம்..அவர்களின் அழைப்புகள் பல முறை நெருக்கியதால்...

என்னப்பா எப்படி இருக்க..போன்ற குசல விசாரிப்புகள் முடிந்து காபியை பருகிக்கொண்டு இருக்கும் போது..இன்னொரு சொந்தக்காரரும்(!) தன் மனைவியுடன் அங்கு விஜயம் செய்ய பேச்சி ஆரம்பமானது...

என்ன அத்தை...அப்புறம் பூங்கொடிக்கு கல்யாணம் முடிவாயிடிச்சாமே..

ஆமான்டி தங்கம்..டிசம்பர் மாசம்தேன் முடிவாயிருக்கு...

அப்புறம் எல்லா வேலைகளும் ஜரூரா நடக்குது போல..

ஆமாம் ஓடிட்டு இருக்கோம்..

அப்புறம் பொண்ணு மாப்ளை எங்க போறாங்க ஹனிமூனுக்கு...

மூணாறு போகனும்னு மாப்ளை கேட்ருக்காப்ல...அதான் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம்...செலவு தான் தாறுமாறா போயிடும் போல..

ஏன் அத்தை ரெண்டு பேருக்கு அப்பிடி என்னா செலவாயிடப்போகுது...

அடியே..அவங்க ரெண்டு பேரு மட்டும் இல்ல..நாங்களும் போறோம்..

என்னத்த சொல்றீங்க...அதுங்க கல்யாண புது ஜோடிங்க போறாங்க நீங்கள்லாம் போயி ஹனிமூன...தனி மூன் ஆக்கிடுவீங்க போல...

அதையேன்டி கேக்குற...நீ அந்த சீரியல பாக்கலியா...இப்பிடித்தான் பொண்ண கூட்டி போயி கழுத்தறுத்து கொன்னுப்புடுறான் அந்த மாப்ளை...அத பாத்ததுல இருந்து எனக்கு பயங்கற ஷாக் அடிச்சாப்ல ஆயிடிச்சி...தனியா பொண்ண அனுப்பறதா இல்ல...

நான் குறுக்கிட்டேன்...

ஏங்க...என்னங்க இது அநியாயமா இருக்கு மாப்ளை குலம் கோத்துரம்...வேலை குடும்பம்னு அல்லாத்தையும் விசாரிச்சி பொண்ணு குடுக்குற நீங்க போயிம் போயிம் சீரியல்ல வர்றத வச்சி இப்படியா பேசுறது...

அடப்போப்பா காலம் ரெம்ப கெட்டுப்போயிருக்கு...

அப்ப ஏன் கல்யாணம் பண்ணி கொடுக்குறீங்க...ஊட்லயே வச்சிக்கறது தானே...

இந்தாப்பா இதெல்லாம் பேச்சில்ல..எங்க பொண்ணு எங்க இஷ்டப்படி தான் செய்வோம்..

அட எப்பிடியாவது போங்க...ஆனா இது அந்த மாப்ளைக்கு தெரிஞ்சிதுன்னா...உங்க பொண்ணுக்கு ஆயிசுக்கும் கொடுமதான்..நீங்கள்லாம் எப்பத்தான் திருந்தப்போறீங்க...வயசு 60 ஆயி என்னா புரோசனம்...கண்ட கண்ட சீரியல பாத்து இப்பிடி நாசமா போறீங்களே...

யோவ் எங்க ஆத்தாவ ஏதும் சொன்னே...

அட வெளங்காத பயலுவலா...ஆத்தாக்கு தான் அறிவில்லன்னா உங்களுக்குமா...எப்பிடியோ போயி தொலைங்க...நாங்க கெளம்பறோம்...

கெளம்பி வந்துட்டோம்...ஸ்ஸ்ஸ் அபா..

கொசுறு: இது போல இன்னும் எத்தன வீட்ல சீரியலு சிலுக்கு டான்ஸ் ஆடுதோ தெரியல...வெளங்கிடும்யா!~
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

12 comments :

 1. என்னத்த சொல்லுறது?பாதிக் குடும்பப் பிரச்சினைக்குக் காரணம் இந்த சீரியலு ங்க தான்!சொன்னா,ஏன் சினிமா ல இல்லையான்னும் கேப்பாங்க!///ஏனுங்க சீரியல்/சினிமா ல பறந்து,பறந்து எல்லாம் ஹீரோ பைட் பண்ணுறாரே,நிஜத்தில முடியுமாங்க?///'பார்க்' கு,'பீச்' சுன்னு கதா நாயகன்+நாயகி ஓடிப் புடிச்சு விளையாடு(?!)றாங்களே,நெச வாழ்க்கைல முடியுமாங்க,தாய்மார்களே?

  ReplyDelete
 2. சிலுக்கு Dance முடிந்து விட்டது... இப்போதெல்லாம் பழுக் பலுக் பளுக்... விதவிதமாய்... ஸ்ஸ்ஸ் அப்பப்ப்ப்ப்ப்பா.....!!!

  ReplyDelete
 3. இப்போது கொஞ்சம் குறைஞ்சிருக்கு அப்படின்னு தான் சொல்லணும் மாம்ஸ்..
  நிறைய சீரியல்கள் சிரியல்கள் ஆகிப்போயின...

  ReplyDelete
 4. நம்ம வீட்ல இந்தப் பிரச்சனை இல்லை அண்ணே... சீரியலே பாக்க விடுறதில்லை...

  ReplyDelete
 5. சீரியல்கள்தான் இன்று பல குடும்பங்களையும், குடும்ப உறவுகளையும் சீரழிக்கின்றன. சபாஷ்.

  ReplyDelete
 6. எந்த சீரியலிலும் நல்ல விஷயங்களைச் சொல்வதாகத்தெரியரியவில்லை. சீரியல்களை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

  ReplyDelete
 7. You will appreciate the organization of the girls with high social level, class and uncommon excellence. Gurgaon Escorts agency entertain dates by males,So Visit This Link Gurgaon Escorts Service

  ReplyDelete
 8. the best quality companions advantages in the Gurgaon. I was looking for something like this… I thought that it was quiet surprising, in a faultless world you will keep growing such objectives… .Keep analyzing. Delhi and Gurgaon.
  Roshnikhanna Escorts Service | Mehar Kaor | Roshnikhanna Escorts | Sofiya loani | Delhi Escorts | Gurgaon Escorts Agency, Escorts in Gurgaon | Gurgaon Escorts Service

  ReplyDelete
 9. I really appreciate your blog and article to get hacks and cheat codes of monster warlord hack for free of cost than visit our website on us.
  Gurgaon Escorts, Escorts in Gurgaon
  Escorts in Gurgaon, Female Escorts in Gurgaon
  Independent Escorts in Gurgaon, Gurgaon Escorts

  ReplyDelete
 10. Every one of our models is peasant and charming; some of them offer national services as Travel Delhi Escorts Service

  ReplyDelete

 11. We have stunning wonderful Gurgaon escorts to suit everybody for each event. Our high class adult entertainment service offers quality allies around Gurgaon. If you want to be surrounded by the vicinity of delightful and tasteful Gurgaon Escorts

  ReplyDelete
 12. Exceptional post but I was wanting to know if you could write a litte more on this topic? I’d be very grateful if you could elaborate a little bit more. Cheers!
  Independent Female Gurgaon Escorts

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி