சின்ன மாப்ளே...பெரிய மாப்ளே! - அரே ஓ சம்பா!

வணக்கம் நண்பர்களே...குடும்ப பந்தத்தில் அதுவும் கூட்டுக்குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கு ஒரு வித அன்னியோன்யம் இருக்கும்...இக்கால கட்டத்தில் அது குறைந்து வருகிறது...இந்தப்பதிவு மருமகன்களைப்பற்றியது...

பெண் பிள்ளைகளைப்பெற்ற நம்மூரு பெற்றோர் அடிக்கடி யோசிப்பது எப்படிப்பட்ட மருமகனைப்பெறப்போகிறோமோ(!)...அவர்களை எப்படி சமாளிக்கப்போகிறோமோ என்பதே...அதிலும் இரு பெண்கள் இருக்கும் குடும்பங்களில் இரு மாப்பிள்ளைகளின் பழகும் விதமும் வெவ்வேறாக இருந்தால்...!

அது ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம்...அதில் மொத்தம் ஆறு பேர்..அதில் இரு பாட்டிகளும் அடக்கம்(தாயைப்பெற்றவரும்..தந்தையய் பெற்றவரும்!) அந்த வீட்டில் இரு பெண் குழந்தைகள்...இரண்டில் முதல் பெண் படிப்பில் சுட்டி..வேலைகளில் சற்று சோம்பேறி(!)...இரண்டாவது பெண் வேலைகளில் சுட்டி...படிப்பில் மந்தம்(!)

இருவரில் முதல் பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்தது...அவளின் கணவர் விற்பனை பிரதிநிதி வேலையில் இருந்தார்...பல ஊர்களுக்கு செல்லும் வேலை..மிக பிசியான நபர்...அவருக்கு கிடைப்பதோ ஞாயிறு மட்டுமே ஓய்வு...அதிலும் எண்ணற்ற வேலைகள் இருக்கும்...மாமியார் வீட்டுக்கு வந்தாலும் விட்டத்தை பார்த்துக்கொண்டே எதோ யோசிச்சி கிட்டே இருப்பார்...


“என்னங்க சாப்பிடுறீங்க...என்றால்..”எதோ போடுங்க சாப்பிடுறேன்” என்பார்...குடும்பத்தில கல கல என்று பேசுவதை தவிர்ப்பார்...பத்து விசயம் பேசினால்...ஒரு முறை “ம்ம்” எனும் ரகம்...

இப்படி இருக்கையில் இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் ஆனது...அவளுக்கு வந்தவரும் விற்பனை பிரிவில் வேலை பார்ப்பவர்..ஆனால் பேச்சி காது வரை...(!)

எப்ப பாரு கிண்டலும் கேலியுமாகவே பேசிக்கொண்டிருப்பதால்...அவரிடம் அனைவரும் அதே ஸ்டைலில் பேச ஆரம்பிக்க...பெரிய மாப்ளைக்கு காண்டானது(!)...ஒரு நாள் சின்ன மாப்ளையிடம் பேசலானார்...

என்னங்க நீங்க எப்ப பாரு கிண்டலும் கேலியுமா திரியிறீங்க...நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குங்க...

நான் அப்பிடில்லாம் குடும்பத்துல(!) எதிர்ப்பாக்குறது இல்லீங்க்ணோ...என்னைப்பொறுத்தவரை நானும்...என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோசமா பேச்சளவிலாவது(!) இருப்பதையே விரும்புவேன்..

அடடா...அப்பிடி இல்லீங்க...எப்ப பாரு தொண தொணன்னு பேசிகிட்டு எப்பிடிதான் உங்களால இருக்க முடியுதோ...

ஹாஹா..நமக்கு கெடைச்ச ஒரே சந்தோசம் அது தானுங்களே...

பெரியவர(மாமனார்!) பாருங்க...எதாவது பேசுறாரா...வந்தா வாங்கம்பாரு...கெளம்பும்போது...போயிட்டு வாங்கம்பாரு...

ஹாஹா...அவருக்கு பேச்சி பிடிக்காது என்பதில்லை..அவரிடம் யாரும் கிண்டலடிப்பதில்லை...அதனால் தான் அவர் அப்பிடியாயிட்டார்...அதுக்காக நாமும் அப்பிடி ஆகனும்னு இல்லீங்களே...தவிர எனக்கொரு டவுட்டு...நீங்க விற்பனை வேலையில்(!) இருக்கீங்க...அங்க க்ளைன்ட்ஸ் கிட்ட ஜோவியலா பேசுறதும்..அடிக்கடி முகத்த சிரிச்சாப்ல வச்சிகிட்டு இருக்குறதும் எப்பிடி சாத்தியம்னு தெரியலீங்க...வீட்டில் அந்த சிரிப்பு இருந்தா தானே உங்களுக்கு அசல் சந்தோசம் கிடைக்கும்..

அப்பிடி இல்லீங்க...எனக்கு இப்பிடில்லாம் பிடிக்காது..எப்ப பாரு அரட்டை அடிப்பது...

ஸ்ஸ்ஸ் அபா அய்யா ராசா நான் இப்பிடித்தான்...உங்களுக்கு உங்கள் வழி..எனக்கு என் வழி...அம்புட்டுதேன்...

எப்பிடியோ போங்க...


”மாப்ள சாப்பிட வாங்க...இன்னிக்கி வத்தக்குழம்பும், ஜவ்வரிசி வத்தலும்” என்றாள் சின்ன மாப்ளைய பாத்து மாமியார்...பெரிய மாப்ளைக்கு சுர்ரென்றது...எந்த விசயம் பெரிய மாப்ளே பேசினாலும் கதவுக்கு பின் நின்றே சரிங்க என சொல்லும் அந்த அம்மாவை இப்படி மாற்றி தொலைச்சிருக்கானே இந்த சின்ன மாப்ளே என்ற கோபத்தில்(!)

கொசுறு: எத்தனை குடும்பங்களில் இன்னும் இப்பிடியே இருக்காங்களோ தெரியல...வீட்டில் நகைச்சுவை இல்லாத போது அந்த வாழ்க்கை மிகக்கடினமான இயந்திர வாழ்க்கையே என்பது எமது கருத்து...அரே ஓ சம்பா!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

7 comments :

 1. இனிய வணக்கம் மாம்ஸ்...
  நம்மை சுற்றி இருக்கும் இடத்தில் இருக்கும்
  மனிதர்களை நம்மால் இயன்ற அளவுக்கு சந்தோசமாக வைத்திருக்க வேண்டும்
  என்பது எவ்வளவு பெரிய விஷயம் மாம்ஸ்..
  சாதாரணமாக வந்துவிடாது... அதிலும் பெண்ணெடுத்த வீட்டில்
  அப்பப்பா மருமகன்கள் நடத்தும் தர்பார் இருக்கே..
  சொல்லி மாளாது...
  பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலையை
  அப்படியே சொல்லியிருகீங்க...

  ReplyDelete
 2. மகேந்திரன் said...
  இனிய வணக்கம் மாம்ஸ்...
  நம்மை சுற்றி இருக்கும் இடத்தில் இருக்கும்
  மனிதர்களை நம்மால் இயன்ற அளவுக்கு சந்தோசமாக வைத்திருக்க வேண்டும்
  என்பது எவ்வளவு பெரிய விஷயம் மாம்ஸ்..
  சாதாரணமாக வந்துவிடாது... அதிலும் பெண்ணெடுத்த வீட்டில்
  அப்பப்பா மருமகன்கள் நடத்தும் தர்பார் இருக்கே..
  சொல்லி மாளாது...
  பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலையை
  அப்படியே சொல்லியிருகீங்க...

  >>>>>>>

  சரியா சொன்னீங்க...இந்த வெட்டி கவுரவம்னு ஒன்னு இருக்கே ஸ்ஸ்ஸ் அபா...மிடிலபா...அவ்வ்

  ReplyDelete
 3. எப்படியே சந்தோசம் "உலாவினால்" சரி...

  ReplyDelete
 4. அன்பின் விக்கி வெங்கட் - சின்ன மாப்பிள்ளையைப் போல இருபப்து ந்லலது - அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது நல்ல செயல். கூட்டுக் குடும்பத்தில் இது அவசிஅயம் தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. நிறைய மாப்பிள்ளைகள் இப்படித்தான்! அருமையான பதிவு! நன்றி!

  ReplyDelete
 6. ஆனாலும் பாவம்யா உம்ம சகளை... இந்த பாடு படுத்தி இருக்கிறீரே !

  ReplyDelete


 7. எனக்கும் இரண்டு பெண்கள்! இத் தொல்லை இல்லை!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி