பாடி ஸ்ட்ராங்கு பேஸ்புக்கு(பேஸ்மென்ட்!) வீக்கு! - டூப்பு லைஃப்!

வணக்கம் நண்பர்களே...இந்தப்பதிவு எம்மை யாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஒரு எண்ணத்தினால் வந்ததே...

எமது கருத்துக்களுக்கு ஒரு களமாக நான்(!) உள்நுழைந்தது பதிவுலகம் எனும் திறந்தவெளி மைதானம்(!)...அதில் பல மக்களின் உள்ளார்ந்த கருத்துக்களை அறிந்து கொண்டதால் எமக்கிருந்த பல ஐயங்கள் தீர்ந்தன(!)..

இப்படிப்பட்ட நிலையில் எனக்கு பேஸ்புக் எனும் வழி அறிய நேர்ந்தது...என்னதான் கை வலிக்க(!) டைப்பினாலும் ஒவ்வொரு பதிவருக்கும் இருக்கும் நேரமின்மை காரணமாகவும்...புதிய விசயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாகவும் பதிவுகள் குறைய ஆரம்பித்தன...

இந்த பேஸ்புக் எனப்படும் களத்தில் உடனுக்குடன் நம்முடைய கருத்துக்கள்(!) காணப்படுகின்றன என்பதே அதீத ஈடுபாட்டை அளித்து வருகிறது...இந்த நிலையில் இந்த ஃப்பேஸ் புக் மூலம் தங்கள் கருத்துக்களை தெளிக்க வந்தவர்கள் சுயம் தடுமாறுவதால்(!) காலண்டர் கவிராயர்களாக மாறிப்போய்க்கொண்டு இருக்கிறார்கள்..என்ன செய்வது என்று புரியாமல் அட்வைஸ்கள் எனும் வெற்று கோடுகளை கிறுக்கி செல்கிறோம்(நான் உட்பட!)...

”பதிவுகளை வைத்து ஒருவரை எடை போடுவது என்பது அறியாமையயே குறிக்கும் என்பது எமது கருத்து”

ஒரு தாய் தன் பிள்ளையய் பெற எவ்வளவு சிரமப்படுகிறாள்..அக்குழந்தையை வளர்க்க தந்தை படும் சிரமம் எவ்வளவு...வளரும் போது அக்குழந்தை சிறு கல் தடுக்கி விழுந்தாலே பதறும் பெற்றோர்...எக்காரணம் கொண்டும் தன் குழ்ந்தை இயன்ற வரை தோல்விகளை சந்திக்க கூடாது...ஏமாற்றங்களைப்பெறக்கூடாது என்பதற்க்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து பொருள் ஈட்டி குழந்தைகளை பேணுகிறார்கள்..!

இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சது தான்...விசயம் இன்னான்னா...

இங்கிட்டு வந்தமா ஜாலியா கும்மி அடிச்சமா...நாலு விசயங்கள நம்ம அறிவுக்கு ஏத்தாப்ல(!) அலசுனமான்னு இருக்கனும்..அதுக்கு தான் இங்கிட்டு வர்றது...அத விட்டு எதாவது பொண்ணு கிடைக்குமான்னு(!) ஆணும்...பையன் கிடைப்பானான்னு பொண்ணும்(!) வர்றது பெரிய காமடியா கீது...நேர்ல பாத்து பழகுறவங்களே ஒருத்தர ஒருத்தர் எப்ப கழட்டி விடுவாங்கன்னு தெரியறது இல்ல(!)...இதுல எதுக்கு இந்த வேண்டாத விஷ பரீட்சை...வயது வித்தியாசம் இல்லாமல் மகிழ்ச்சியை...துக்கத்தை...கவலையை...கலாய்த்தலை பரிமாறிக்கொள்ளும் இடமாக இதைப்பார்த்தால் எந்த வித தொல்லையும் ஏற்படப்போவதில்லைங்கோ...

ஒருவரின் கருத்து எனக்கு புடிச்சிருக்கா அதுக்காக அவருக்கு பதில் உரைக்கிறேன்...பிடிக்கலையா போயிட்டே இருக்கேன்...நின்னு வாதம் பண்ணி இன்னா கிழிக்கப்போறேன்...ஒவ்வொரு நிமிட கடத்தலுக்கும் போராடிகிட்டு இருக்கும் உலகத்தில் நானும் ஒரு துளியாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன்...

இவையெல்லாம் எம்மை யாமே செதுக்கிக்கொள்ளும் கருத்துக்களே(!)..உங்கள இப்பிடி மாத்திக்கங்கன்னு சொல்ற தகுதி எனக்கில்ல...அப்படி அறிவுரை சொல்ற அளவுக்கு பெத்தராயுடுவும் நான் இல்ல...தேவையற்ற மனச்சிதைவு...அதைக்காரணமாக கொண்ட உயிரிழப்புகளை தவிர்ப்பது நம் அனைவரின் கடமையாகும்...வாழ்க சனநாயகம்!.....அரே ஓ சம்பா!

கொசுறு: சிந்தித்து பார்த்து செய்கையய் மாத்து...சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...தெரிஞ்சிம் தெரியாம நடந்திருந்தா...அது திரும்பவும் வராம பாத்துக்கோ...(அட பாட்டுப்பா!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

4 comments :

 1. நல்லாவே செதுக்கிட்டீங்க...

  சம்போ சிவ சம்போ...!

  ReplyDelete
 2. அன்பின் வெங்கட்

  சிந்தனை நன்று - எப்படி முக நூலில் செயல்பட வேண்டும் என்பதை வரையறுத்து விட்டீர்கள் - தங்களூக்கு வரும் செய்திகளை / தகவல்களை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் எப்படி பதில் கூற வேண்டும் என்பதிலும் திடமான சிந்தனையுடன் செயல்படத் தயாராகி விட்டீர்கள்.

  நினைத்தது நடைபெறும். துவங்குக தங்களின் கொள்கைகளின் அடைப்ப்டையில். - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. உங்கள் எண்ணப்படியே ஆகட்டும்...!

  பகிர்வினிற்கு மிக்க நன்றி.!

  இன்று என்னுடைய வலைப்பூவில்:

  வணக்கம்...

  நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

  அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

  சரியா...?

  உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

  அப்போ தொடர்ந்து படிங்க...

  ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி