ஓவரா பேசுவல்ல(!) வா...- ஹூவே!~

வணக்கம் நண்பர்களே....
இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல(!) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...!

இரவு 12.30 மணி....

கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(!) நண்பரிடம் இருந்து...

ஹலோ மாப்ளே...தூங்கிட்டியா...

அடேய் இந்த நேரத்துல கேக்குற பாரு...

சரி ஒரு முக்கிய விசயம்...நாளைக்கு காலைல கார் வரும் கெளம்பி ஏர்போர்ட் போ...உனக்கு மெயில்ல “ஹுவே” போய் வர டிக்கட் அனுப்பி இருக்கேன்...நான் இப்ப அங்கன தான் இருக்கேன்...நீ வந்தே ஆகனும்...செமினாருக்கு வர்றோம்னு சொன்ன இந்திய சங்க(!) ஆளுங்க கவுத்துட்டாங்க...கெளம்பி வா...அங்க பேசிக்கலாம்...நம்ம மானம் போயிரும்...ப்ளீஸ்!

அடடா நம்மளால ஏன் போகுற மானத்த தடுத்து நிறுத்த முடியாது...சரி போயிட்டு வருவோம்னு கெளம்பினேன் (நடு ராத்திரில சுடுகாட்டுல இருந்து சவுண்டு கேக்குறாப்ல இருந்துது அவ்வ்!)


அடிச்சி பிடிச்சி காலைல ஏர்போர்ட் அடைஞ்ச எனக்கு மெல்ல புரிய ஆரம்பிச்சிது...காலநிலை மோசம் என்பதால் அனைத்து விமானங்களும் நேரம் கடந்தே செல்வதாக அறிவிப்பு...(அடப்பாவிகளா இதான் உங்க டக்கா...பயந்துட்டாய்ங்க போல!)

பொறுக்க கெளம்பின விமானத்துல ஒரு மணி நேர பயணம்...போய் சேரும்போது அடி பின்னி எடுத்துட்டு இருந்துது பனியுடன் மழை...

”ஹுவே” அழகிய ஊர்....அதைப்பற்றி விவரமாக அறிய...இந்த லிங்கில் சென்று பார்க்கவும்...http://en.wikipedia.org/wiki/Hu%E1%BA%BF

அப்பாடக்கர்ஸ் BMW வாகனம்(!) அழைத்துப்போக நின்றிருந்தது...(என்றா இது இந்தூர்ல எங்குமே வெளிநாட்டு வாகனங்கள் தான் போலும்!)

நேரா கொண்டு போயி செமினார் நடக்குற இடத்துல இறக்கி விட்டாய்ங்க...

இறங்குனது தான் தாமதம் ரெண்டு வியட்நாமிய நண்பர்கள்(!) ஓடியாந்து...வாடா டேய் ஏன் லேட்டு ஓடிவா ஓடிவா ஓடிவான்னு தர தரன்னு கைதி கணக்கா(!) இழுத்துட்டு போனாங்க...”உள்ள போ”ன்னு சொல்லி அந்த மெகா சபைல இறக்கி விட்டாங்க...(நான் வெறும் பார்வையாளன்னு நெனைச்சே போனேன் அவ்வ்!..)

அடங்கொன்னியா அங்க இந்தூரு(ஹூவே!) மாநில முதல்வராம்..அவரு அவரோட மெகா ஆட்கள் எல்லாம் உக்காந்து இருந்தாங்க...(டேய் நம்பி வந்தது தப்பாடா...ஒரு பச்ச மண்ண(!) கொண்டாந்து சந்துக்குள்ல விட்டீங்களேன்னு ரோசிக்கலானேன்...ரெண்டு நிமிசங்கூட இல்ல...மிஸ்டர் விக்கி...இப்போது நம்ம(!) வியாபார உறவு வியட்நாமுடன் பற்றி விவரிப்பார்ன்னு சொல்லிட்டான் அந்த ஃப்போன் போட்டு கூப்ட பய புள்ள...!

அப்படியே “கேப்டன்(!)” ஞாபகத்துக்கு வந்தாப்ல...ஒரு ஜெர்க்காக்கிட்டு...மேடையேறினேன்...

“நான் இங்க வந்ததுல இருந்து இதுவரைக்கும் இன்னால்லாம் போயிட்டு இருக்கு...எப்படிப்பட்ட வகையில எங்கூரு சங்கம்(!) இங்க இருக்கவங்களுக்கு லிங்க் கொடுத்து யாவாரத்துக்கு(!) உதவுதுன்னு...சிம்பிளா ஷார்ட்டா சொல்லிட்டு...ஒரு கும்புடு போட்டு இறங்கிட்டேன்...

இறங்கினதுக்கப்புறம் தான் ஞாபகம் வந்துச்சி..அந்த முதல்வர்(!) மற்றும் அப்பாடக்கர்களை குறிப்பிட்டு நன்றி சொல்லவேல்லன்னு...அடங்கொன்னியா “ஃப்ரண்ட்ஸ்” என்று மட்டுமே அடை மொழி கொடுத்து ஆரம்பித்திருந்தேன் எனது குறுகிய உரையை...

வந்து என் இடத்தில் உக்கார்ந்ததும் அந்த ”படாவாலா(!)” என்னைய திரும்பி பாத்தாப்ல..அந்த பார்வையில் “டேய் என்னைய கொஞ்சம் கூட மதிக்கலையேடா” என்றது புரிந்தது...

அவ்வ்...”மன்னிச்சிக்கோங்கோ சாரே...மீ பாமரன்...கபால்ன்னு மேடையேத்தி விட்டானுங்க”...

அடுத்து மதிய உணவ கொடுத்து அனுப்பிட்டாங்க...அதுக்கப்புறம் யாவார தளங்களையும் எதிர்கால(!) ப்ளான்களின் இடங்களையும் சென்று பார்த்து வந்தோம்...


மாலையில் அழகிய பனி விழும் மலர் வனத்தில்(!) இரவு உணவுடன்...வியட்நாமிய புராதன இசையும் மனதை வருடியது...

வரும்போது பின்னிரவு விமானம் புடிச்சி வந்தாச்சி...

”ஓவரா பேசுறவன” கோதாவுல இறக்கி வேலை பாத்துப்புட்டானுங்க போல....நல்லா இருங்கடே...

கொசுறு: ஒருத்தன் வா வா ன்னு கூப்பிடும் போதே யோசிக்கனும்...சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு அவ்வ்!~
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

4 comments :

 1. போனால் தான் புரிந்து கொள்ள முடிந்தது... (!)

  ReplyDelete
 2. //இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல(!) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...!

  //

  உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்

  ReplyDelete
 3. ஆழம் அறிந்து நீரில்
  இறங்கனும்னு இதைத்தான் சொல்றதா ?
  சொல்லிச் சென்ற விதத்திலும் இருந்த
  பதட்டம் உங்கள் எழுத்துத் திறன் காட்டியது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

  வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி